பேரழிவை ஏற்படுத்தக் கூடிய இரசாயன ஆயுதங்களை அரசு வட மாகாண தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தியதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தமையாலேயே ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட பிரதானமாக கடத்தப்பட்டு உள்ளார் என்று இவரின் மனைவி தெரிவித்து உள்ளார்.
வட மாகாண தமிழர்களுக்கு எதிராக அரசினால் இரசாயன் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை குறித்து எக்னெலிகொட புலனாய்வு நடத்தினார் என்றும் கண்டுபிடித்த உண்மைகளை பத்திரிகையில் பிரசுரித்து வந்தார் என்றும் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுக்கு இந்த இரசாயன ஆயுதங்களின் பாவனை குறித்து வெளிப்படுத்தினார் என்றும் கூறினார்.
வட மாகாண தமிழர்களுக்கு எதிராக அரசு இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளது என கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுக்கு எக்னெலிகொட எழுத்துமூலம் 2008 ஆம் ஆண்டு தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டார்.
எக்னெலிகொட கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை பெரிதும் ஆதரித்தமையாலும் கணவர் கடத்தப்பட்டிருக்கின்றார் என்றும் சொன்னார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.