கனடாவுக்கு கப்பல்களில் நிறைய ஆட்களை கடத்தி வர சட்டவிரோத கும்பல்கள் முயற்சி செய்கின்றன என்று அந்நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Vic Toews தெரிவித்து உள்ளார்.
கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுக்கின்றமை மூலம் கனடாவுக்குள் பிரவேசித்து அகதி அந்தஸ்து கோருகின்ற ஆட்கள் குறித்து கனேடிய அரசு மிகவும் விழிப்புடன் உள்ளது என்றும் இவர் கூறி உள்ளார்.
ஆட்கடத்தல்களை முறியடிப்பதற்காக அரசினால் கொண்டு வரப்பட இருக்கும் புதிய குடிவரவு சட்டத்துக்கு எதிர்க் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று இவர் கோரி உள்ளார்.
இப்புதிய சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் கடத்தல்காரர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்படும் என்கின்றார். தென்மேற்கு ஆசியாவில் உள்ள நாடு ஒன்றில் இருந்து இரு கப்பல்களில் இலங்கைத் தமிழர்கள் 400 பேர் வரையானோர் கனடா வர வரும் நாட்களில் தயார் நிலையில் உள்ளனர் என்று கனேடிய புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்து உள்ளன.
இதை மறுப்பதற்கு இல்லை என்றும் அமைச்சர் ஒப்புக் கொண்டார். தென்மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள அரச உயர் அதிகாரிகளை சமாளிக்கின்றமைக்கு இச்சட்டவிரோத பயணிகள் பழகி விட்டனர் என்றும் கனடாவின் தற்போதைய குடிவரவு சட்டத்தின் இலகுத் தன்மை கடத்தல்காரர்களுக்கும், சட்டவிரோத பயணிகளுக்கும் வாய்ப்பாக அமைகின்றது. என்றும் எனவே புதியதும், கடுமையானதும் ஆன குடிவரவு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய அத்தியாவசியம் என்றும் இவர் ஊடகங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார்.
ஆனால் இப்புதிய சட்டம் உண்மையான அகதிகளின் புகலிட உரிமைக்கு ஆபத்தாக முடியும் என்று எதிர்க் கட்சிகள் எச்சரித்து வருகின்றன. இவ்வெச்சரிக்கை அநாவசியமானது என்று அமைச்சர் அறிவித்து உள்ளார்.
தமிழ் CNNகடத்தல்காரர்களுக்கு பணம் கொடுக்கின்றமை மூலம் கனடாவுக்குள் பிரவேசித்து அகதி அந்தஸ்து கோருகின்ற ஆட்கள் குறித்து கனேடிய அரசு மிகவும் விழிப்புடன் உள்ளது என்றும் இவர் கூறி உள்ளார்.
ஆட்கடத்தல்களை முறியடிப்பதற்காக அரசினால் கொண்டு வரப்பட இருக்கும் புதிய குடிவரவு சட்டத்துக்கு எதிர்க் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று இவர் கோரி உள்ளார்.
இப்புதிய சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் கடத்தல்காரர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்படும் என்கின்றார். தென்மேற்கு ஆசியாவில் உள்ள நாடு ஒன்றில் இருந்து இரு கப்பல்களில் இலங்கைத் தமிழர்கள் 400 பேர் வரையானோர் கனடா வர வரும் நாட்களில் தயார் நிலையில் உள்ளனர் என்று கனேடிய புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்து உள்ளன.
இதை மறுப்பதற்கு இல்லை என்றும் அமைச்சர் ஒப்புக் கொண்டார். தென்மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள அரச உயர் அதிகாரிகளை சமாளிக்கின்றமைக்கு இச்சட்டவிரோத பயணிகள் பழகி விட்டனர் என்றும் கனடாவின் தற்போதைய குடிவரவு சட்டத்தின் இலகுத் தன்மை கடத்தல்காரர்களுக்கும், சட்டவிரோத பயணிகளுக்கும் வாய்ப்பாக அமைகின்றது. என்றும் எனவே புதியதும், கடுமையானதும் ஆன குடிவரவு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய அத்தியாவசியம் என்றும் இவர் ஊடகங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார்.
ஆனால் இப்புதிய சட்டம் உண்மையான அகதிகளின் புகலிட உரிமைக்கு ஆபத்தாக முடியும் என்று எதிர்க் கட்சிகள் எச்சரித்து வருகின்றன. இவ்வெச்சரிக்கை அநாவசியமானது என்று அமைச்சர் அறிவித்து உள்ளார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.