Sunday, January 16, 2011

யாழ்.பல்கலை மாணவர்களைப்பார்த்து உங்களை யார் இங்கே வரச்சொன்னது என கேட்டார் பிரதியமைச்சர் கருணா:

யாழ்.பல்கலைக்கழகத்தினால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்வில் அழையா விருந்தாளியாக கலந்துகொண்ட பிரதியமைச்சர் முரளிதரன் ரகளையில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மக்களுக்கு யாழ்.மக்களின் உதவிப் பொருட்களை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சேகரித்துச் சென்றனர். இந்த உதவிகளை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து அவர்கள் வழங்கிவருகின்றனர்.

இந்த நிகழ்வின் இரண்டாம் நாளான நேற்றயதினம் மண்முனை மேற்கில் பாடசாலையொன்றில் வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொருட்களை வழங்கிக் கொண்டிருந்த சமயம் அழையா விருந்தாளியாக திடீரென அங்கு வந்தார் பிரதியமைச்சர் முரளிதரன்.

பல்கழைக்கழக மாணவர்களிடம் உங்களை யார் இங்கே வரச்சொன்னது கிழக்கிற்கு வருவதற்கு யார் உங்களுக்கு அனுமதித்தது வருவதற்கு முன்னர் எமக்கு தெரிவிக்கும் பழக்கம் இல்லையா என்றெல்லாம் கேள்வியெழுப்பியிருக்கின்றார்.


பின்னர் சாந்தமாகி யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரை கட்டாயமாக அழைத்து அவருக்கு கை கொடுப்பது போலவும் பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டு சென்ற பொருட்களையெல்லாம் தூக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பது போல் தான் அழைத்து வந்த ஊடகவியலாளர் ஒருவர் மூலம் படமும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றிருக்கின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.