வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலேயே சிறிலங்காவில் அடுத்தடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை சுட்டிக்காட்டிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பு இலங்கையில் அமைதியான ஒரு உள்ளூராட்சித் தேர்தலை எதிர்பார்க்க முடியாதென தனது நம்பிக்கையீனத்தை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த கையோடு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உட்பட்ட கட்சிகள் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதாக அந்த அமைப்புக் கூறுகிறது. இதனால், தேர்தலின்போது அமைதியான சமாதான சூழலை எதிர்பார்க்க முடியாதென கபே இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட செயலாளர் ஐ.தே.க உறுப்பினரால் அச்சுறுத்தப்பட்டமை, மாத்தளை தேர்தல் செயலகத்தில் ஒரே கட்சியைச் சேர்ந்த இரு குழுக்கள் மோதிக்கொண்டமை போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் இரத்தினபுரி கஹவத்தையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், தேர்தல் பிரசாரப் பதாகைகள் சேதமாக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.