நாட்டின் 15 மாவட்டங்களில் தொடர்நடது பெய்து வந்த அடை மழை காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. மழையினால் பாதிக்கப்பட்டுள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர், தற்போது 663 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அடை மழை காரணமாக இதுவரையில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் 12 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னார் கட்டுத்கரை குளம் நிறைத்தன் காரணமாக, குளத்திற்கு வரும் நீர் தடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரம் மல்வத்தை குளம் நிறம்பி வழிவதனாலேயே, மாவட்டத்தில் இவ்வாறு நீர் பெருக்கம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேத நாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன், குஞ்சிக்குளம் பகுதி துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் 320 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களுக்கான நிவாரன பொருட்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வேறு காட்டு பாதையின் வழியாக விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தம்பனைகுளம் பெருக்கெடுத்தன் காரணமாக 30 வீடுகள் முற்றாக நீரில் அமிழ்ந்துள்ளதாகவும், இதனால் 206 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளர்.
இதேவேளை மழையினால் அதிகம் பாதிப்பு ஏற்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் காலநிலை தற்போது சீரடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.















0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.