Wednesday, December 22, 2010

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்குமாறு ரணிலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது:

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு தாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தியோகப் பற்றற்ற ரீதியில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. உண்மையைக் கண்டறிறும் ஆணைக்குழுவின் செயலாளரினால் தொலைபேசி மூலம், ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்குமாறு ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பது குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.

2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற முறுகல் நிலைமைகள் மற்றும் அதற்கான காரணிகள் குறித்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.