Monday, May 03, 2010

ஊடக சுதந்திரத்திற்கு எதிரானவர்களின் பட்டியலில் கோட்டபாய

பத்திரிகையாளர் சுதந்திர தினத்தை முன்னிட்டு எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற ஊடக சுதந்திர அமைப்பு பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இவர்கள் ஊடக சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் எனக் கருதும் தனிநபர்கள் மற்றும் குழுக்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

உலகின் அனைத்து பாகங்களிலும் இந்தப்பட்டியலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் இலங்கையை பொறுத்தவரை கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் வெளிப்படையாகவே ஊடகங்களுடன் மோதல்போக்கை கடைப்பிடிப்பவராக சித்தரிக்கப்பட்டுள்ளது.
2009 ம் ஆண்டு போர் முடிவடைந்த பின்பும் கூட இவர் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களை இலக்கு வைப்பதை கைவிடவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒருசெய்தியாளர் கடத்தப்பட்டாலோ அல்லது கொலை செய்யப்பட்டாலோ இவர் பகிரங்கமாகவே அச்செய்தியாளரின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவார் எனவும் அவ் அறிக்கை கூறுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.