முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் மீது பிள்ளையான் குழுவினர் நடத்திய தாக்குதலில் ஆதரவாளர்கள் மூவர் காயம் அடைந்துள்ளனர்.நேற்று பிற்பகல் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் சென்று கொண்டிருந்த அரியநேத்திரனின் வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் சிறிது இடைவெளியில் அவர் தப்பிய போதிலும், அவரது வாகனத் தொடரணி மீதான தாக்குதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மூவர் காயம் அடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பு தற்போதே அங்கு உறுதிப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதாகவும் இதனைப் பொறுக்கமுடியாத நிலையிலேயே இந்தத் தாக்குதலை குறித்த ஒட்டுக்குழு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.