Saturday, April 24, 2010

இலங்கை செல்ல மறுத்த ரஜினி, கமலுக்கு நன்றி: சீமான்

தமிழர்கள் கண்ணீர் கடலில் மிதக்க இலங்கையில் ராஜபக்சேவை மகிழ்விக்க சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்துவதா என்று அமிதாப்பச்சனுக்கு இயக்குனர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அமிதாப் அழைப்பை புறக்கணித்த ரஜினி, கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சீமான்.

இதுகுறித்து சீமான் மேலும் கூறியதாவது,

இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் மாதம் நடத்தப்படுவதாக அறிந்தோம். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை நடிகர் அமிதாப்பச்சன் முன்னின்று கவனித்து வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இவ்விழாவில் பங்கேற்க கமல், ரஜினி இருவருக்கும் அமிதாப் விடுத்த அழைப்பை அவர்கள் இருவரும் புறக்கணித்துவிட்டதாக செய்தி வருகிறது. இவ்விழாவில் பங்கேற்க மறுத்த அந்த இரு கலைஞர்களுக்குக்கும் அனைத்து தமிழ்க்கலைஞர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்க்கலைஞர்கள் யாரும் இவ்விழாவுக்கு போகக்கூடாது என்று அனைத்து தமிழ்க் கலைஞர்களும் எதிர்பார்க்கிறார்கள். இதே காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாளும் நமக்கு இலங்கையில் இருந்து மரணச் செய்தியாகத்தான் வந்து கொண்டிருந்தன. அங்கு தமிழர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.

சென்ற ஆண்டு இதே நாளில் நடந்த நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தை மறக்கடிக்க திட்டமிட்டு இந்த விழா நடத்தப்படுவதாகவே கருதுகிறேன். இன்றைக்கும் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் முள்வேலிக்கு மத்தியில் கடும் சித்ரவதைக்கு ஆளாகி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.