தமிழீழ விடுதலைப் புலிகளினால் விமான ஓடுபாதையாக நிர்மாணிக்கப்பட்டிருந்த வடக்கு வனப்பகுதியின் இரணைமடு ஓடுதளம் விமானத்துறை மையமாக செயல்படுத்தப்படவுள்ளது.
இதற்கான முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விமான ஓடுதளம் அரசாங்க இராணுவத்தினரின் பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரனைமடு வனப்படுகுதியில் இந்த ஓடுபாதை நிர்மானிக்கப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளால் பராமரிக்கப்பட்ட வந்தது.
இந்த ஓடுபாதையை பயன்படுத்தியே கொழும்பில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களை தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் எதிர்காலத்தில் இந்த ஓடுபாதை இராணுவத்தினரின் பயிற்சி தளமாக செயற்படவுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த கடற்சார்ந்த பிரதேசத்தில் மீன் பிடி சார்ந்த இயந்திரவியல் நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.