Wednesday, March 10, 2010

ஐ.நாவின் ஆலோசனைக்குழுவையும் எதிர்ப்போம், சிறீலங்கா அரசையும் எதிர்ப்போம்: ஐ.தே.க

சிறீலங்கா விவகாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஆலோசனைக்குழு அமைப்பதை தாம் எதிர்ப்பதாகவும் அதேசமயம் அரசின் ஜனநாயகமற்ற தன்மையையும் எதிர்ப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐ.தே.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறீ ஜெயசேகரா மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் குழு ஒன்றை அமைப்பதை நாம் எதிர்க்கிறோம். சிறீலங்கா அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகளே இதற்கு காரணம்.

ஐ.நாவின் இந்த நடவடிக்கை குறித்து அரசு ஏனையவர்களை குறை கூறுவதை விடுத்து தான் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஊடகவியலாளர் பிரகதீப் எக்நலிகொட காணாமல்போய் ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்டது, ஆனால் அவருக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது.

அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் தொடர்பாக கட்டுரை எழுதியதால் அவர் கடத்தப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் முறியடிக்கப்பட்டு ஆறுமாதங்கள் கடந்துவிட்ட நிலையில் நாடு மீண்டும் ஒரு பயங்கரவாதத்திற்கு முகம்கொடுத்துள்ளது. அது அரச பயங்கரவாதம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.