ராஜகிரிய பிரதேசத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின், கூட்டம் நடத்தப்படவிருந்த மேடை அலங்காரங்களையும் கட் அவுட்டுகளையும் பொலிஸார் அகற்றியமையை அடுத்து பதற்றநிலை தோன்றியது. இச்சம்பவத்தில் கடும் கோபமடைந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகத்தை நடத்தினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், வீதியில் அமர்ந்து கழற்றிய மேடைக்கான பொருட்களை திருப்பித் தருமாறு கோரினர்.
ஏற்கனவே தேர்தல்கள் ஆணையாளரின் ஆணையை பெற்ற நிலையிலேயே இந்த கூட்டமும் அலங்காரங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே பொலிஸார் அதனை அகற்றியதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.