தேசியத் தலைவர் வே.பிரபாகரனை பன்நாடுகளில் உள்ள சில அமைப்புக்கள் தேடிவருவதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம இந்திய வெளியுறவுச் செயலரிடம் கவலை வெளியிட்டுள்ளார்.விடுதலைப்புலிகளின் சில அமைப்புக்கள் வே.பிரபாகரன் எங்கு இருக்கிறார் எனக் கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளன. இந்த சர்ச்சைக்குரிய கருத்தை போகொல்லாகம இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவிடம் தெரிவித்திருப்பதன் உள்நோக்கம் என்ன என்பதே பலத்த சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசியத்தலைவர் இறந்ததாகக் கூறும் சிறீலங்கா அரசு அண்மையில் தலைவர் வே.பிரபாகரனின் மரண அத்தாட்சிப் பத்திரத்தை இந்தியாவுக்கு கையளித்ததாகக் கூறியதும் அதை சிதம்பரம் ஒத்துக் கொண்டார்.
ஆனால் பின்னர் இந்திய உளவு நிறுவனம் தமக்கு இதுவரை மரண அத்தாட்சிப் பத்திரம் கிடைக்கவில்லை எனக் கூறியது. இந்த நிலையில் தேசியத்தலைவரை சில அமைப்புக்கள் தேடிவருகின்றன என்று போகொல்லாகம கூறியுள்ளார்.
இது இந்திய அரசையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.