தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் சென்று தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாக அந்தக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவராகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு கிளிநொச்சியில் வசிக்கின்றவர்களும் வேட்பளார்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அப்படி இருந்தும் அந்த வேட்பளார்கள் அங்கு மக்கள் மத்தியில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வதற்குச் செல்வதற்கு இராணுவத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என சுட்டிக்காட்டி கிராமங்களுக்குள் செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.
ஏனைய கட்சிகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இது குறித்து தேர்தல் திணைக்கள அதிகாரிகளிடம் முறையிட்டுள்ள போதிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கபடவில்லை என்றும், இந்த நிலைமை குறித்து திங்கட்கிழமை கிளிநொச்சிக்குச் சென்று அங்குள்ள இராணுவ அதிகாரிகளிடம் பேச்சுக்கள் நடத்தப் போவதாகவும் சுரேஷ் பிரேச்சந்திரன் தெரிவித்துள்ளார்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.