புலிச் சின்னத்துடனான விடுதலைப்புலிகளின் மக்கள் முன்னணி என்ற கட்சியை அங்கீகரித்தன் மூலம் பிரித்தானியா அரசாங்கம் பயங்கரவாதத்தை அங்கீகரித்துள்ளது என இலங்கை அரசாங்கம், பிரித்தானிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது. இந்த கட்சியை பதிவுசெய்வதற்கு முன்னர், பிரித்தானிய தேர்தல் ஆணையாளர் அது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் எதனையும் கேட்டறியவில்லை.
அத்துடன் புலிகளின் கட்சி அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்பட்டமை தொடர்பில் பிரித்தானிய தூதரகமும் எந்த தகவல்களையும் வெளியிட்டிருக்கவில்லை என அரசாங்கத் தரப்பு குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் விடுதலைப்புலிகளின் மக்கள் முன்னணியின் முதலாவது உத்தியோபூர்வ கூட்டம் நாளைய தினம் லண்டனில் நடைபெறவுள்ளது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.