தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் ஈழ வாதத்தை முன்வைத்து வருவதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் நோக்கிலேயே மீண்டும் ஈழவாதம் மற்றும் சுயாட்சி கோரிக்கைகளை முன்வைத்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தற்போதைய தேர்தல் சட்டங்களின்படி, ஈழ கோரிக்கை உள்ளிட்ட சர்சைக்குரிய கருத்துக்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில், குறித்த கட்சி நிராகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் கொள்கையில் இவ்வாறான விடயங்கள் காணப்படுவதாக த ஹிந்து தெரிவித்துள்ளது.
இலங்கையில் நீதிமன்றத்தின் ஊடாக பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள் இணைக்கும் கோரிக்கையையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.