Monday, February 01, 2010

பக்தாத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 41 பேர் பலி

ஈராக் பக்தாத் நகரில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பெண்கள்,சிறுவர்கள் உட்பட 41பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பக்தாத்துக்கு தெற்கேயுள்ள கர்பாலா நகருக்கு யாத்திரை சென்றுகொண்டிருந்தோர் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெண் தற்கொலைக் குண்டுதாரியே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்நாட்டுப் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தினையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.