Friday, January 08, 2010

சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாநிலை போராட்டம்


சிறீலங்காவின் கொழும்பில் உள்ள சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் மீது விசாரணை நடத்தப்படவேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்நிலையில் யாழ்ப்பாணம் ,அனுராதபுரம், திருகோணமலை , மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களின் விடுதலை குறித்து உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் யாழ்ப்பாணத்தில் 3 பெண் கைதிகள் உள்ளிட்ட 26 தமிழ்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டததில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதில் 3 கைதிகளின் உடல்நிலை மேசமடைந்ததினை தொடர்ந்து யாழ் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு திருகோணமலை மாவட்டத்தில் அவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள 56 தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.