Wednesday, December 30, 2009

ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை நிரூபிக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்கம் சவால்


ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை நிரூபிக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்கம் சவால் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக ராஜபக்ஷ குடும்பத்தார் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடி குறித்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும், தேர்தலை இலக்கு வைத்து எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் மீது சேறு பூசும் வகையிலான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில ஊடகங்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி குடும்பத்தினர் வைத்தியசாலைகள், காணி மற்றும் கட்டிடங்களை மோசடியான முறையில் கொள்வனவு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ராஜபக்ஷ குடும்பத்தாரினால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் ஊழல் மோசடிகள் குறித்த எழுத்து மூல ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அவர் கோரியுள்ளார்.

யதார்தத்திற்கு ஒவ்வாத வகையிலான வாக்குறுதிகளை எதிர்க்கட்சிகள் வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 10,000 ரூபா சம்பள உயர்வு வழங்கினால் திறைசேரி வங்குரோத்து நிலையை அடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.