Sunday, December 20, 2009

விடுதலைப்புலிகளை பிளவுபடுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகீர் மெளலானா நாடு திரும்பினார்

இலங்கையின் கிழக்கே 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் ஏற்பட்ட பிளவுடன் தொடர்புபட்டிருந்தார் என்று பேசப்பட்டு அதன் காரணமாக எதிர் நோக்கிய அரசியல் நெருக்கடி நிலையினால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து விட்டு அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகீர் மெளலானா மீண்டும் நாடு திம்பியுள்ளார்.

அந்நேரம் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் பதவி வகித்த அவர் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

தற்போது ஆளும் கட்சியில் இணைந்து மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதற்காகவே நாடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார் என தகவல்கள் தெரிவித்துள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.