யாழ். குடா நாட்டில் கடந்த 2006 ஓகஸ்ட் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஊரடங்குச் சட்டம் இந்த வருடம் சில மணி நேரங்களாகக் குறைக்கப்பட்டு நள்ளிரவு 12.00 மணிமுதல் அதிகாலை 4.00 மணிவரை அமுலில் இருந்தது. ஆனால் நாளை அதாவது நள்ளிரவு முதல் புதுவருட தொடக்கம் முதல் ஊரடங்கு முற்றாக நீக்கப்படும் என ராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டார்..
மக்களின் இயல்புவாழ்க்கை மீளத்திரும்பி வரும் நிலையில் ஊரடங்குச் சட்டமும் நீக்கப்படுதல் வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவும், ஜனாதிபதி ஆலோசகர் பசில் ராஜபக்ஷவும் வழங்கிய அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த நடைமுறை கொண்டுவரப்படுவதாகவும் உதய நாணயக்கார கூறியுள்ளார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.