அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையினரின் விசாரணைக்கு சமூகமளிக்காமல், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனது விஜயத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டதாக இலங்கை தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்கா சென்றிருந்த இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா அங்கிருந்து கிளம்பிவிட்டார் என்றும் அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு துறையினாலோ வேறு அரச நிறுவனத்தினாலோ அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் இலங்கை வெளியுறவு அமைச்சின் அறிக்கை கூறுகிறது.
விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விபரம் வழங்குவதற்காக இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு துறையினரால் தொடர்பு கொள்ளப்பட்டிருந்ததாக விபரங்கள் வெளியாகியிருந்தன.
அமெரிக்க உள்துறை மற்றும் குடிவரவுத் திணைக்களத்தினால் நடத்தப்படவிருந்த விசாரணைகளில் சரத் பொன்சேகா பங்குபற்றவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
சரத் பொன்சேகா ஏற்கனவே அமெரிக்காவைவிட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர் நாளை அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரவுள்ளார் எனவும், அவரிடம் அமெரிக்கா, இன்று மாலை விசாரணை நடத்தவிருந்த போதிலும் அதனை நிராகரித்துவிட்டு அவர் பயணமாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகாவை நாடு திரும்புமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.