Wednesday, April 23, 2008

சிறிலங்காப் படையினர் 100-க்கும் அதிகமானோர் பலி- 400-க்கும் அதிகமானோர் படுகாயம்- 16 போராளிகள் வீரச்சாவு: இளந்திரையன்

[புதன்கிழமை, 23 ஏப்ரல் 2008,]

யாழ். வடபோர் முனையான முகமாலைக் களமுனையில் இன்று சிறிலங்காப் படைத்தரப்பினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய உக்கிர முறியடிப்புச் சமரில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 400-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 16 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காப் படையினர் கைவிட்டுச் சென்றுள்ள போர்க்கலங்களை கைப்பற்றும் நடவடிக்கை களத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

19 படையினரின் உடலங்கள் இன்று புதன்கிழமை இரவு 7:00 மணிவரை கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொது விளையாட்டுத்திடலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்காப் படையினரின் உடலங்களை மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அவற்றினைப் பார்வையிட திரள்கின்றனர்.

தமிழர் நிலங்களை சிங்களப் படைகள் வல்வளைப்புச் செய்யும் நோக்குடன் மேற்கொண்ட பாரிய நடவடிக்கை முறியடிக்கப்பட்ட வெற்றியில் மக்கள் திளைத்துள்ளனர். மக்கள் மகிழ்ச்சிப் பூரிப்பில் உரையாடுகின்றனர்.

சிறிலங்காப் படையினரின் உடலங்கள் நாளை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக சிறிலங்கா அரசிடம் விடுதலைப் புலிகளால் ஒப்படைக்கப்படவுள்ளன.

4 comments:

  1. களமாடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள். மாவீரர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  2. களமாடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

    --------------------

    எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழ் ஈழம் தந்த கருணாகரன்
    எங்கும் புகழ் படைத்தானவன் எங்கள் இன்னல்களைத் துடைத்தானவன்.
    நட்புடன் ஈழப்பிரியன்.

    ReplyDelete
  3. உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

    ReplyDelete
  4. பொறுமையின் எல்லைக்கே தள்ளப்பட்டு
    அனைத்துலகம் அறிந்து கொள்ளச் செய்து தற்போது "பொறுத்தது போதும்" என்று பொங்கியெழப் போகும் போராட்டத்தில் சிங்கள இனவாதம் அமைதி தேடி வரப் போகிறார்கள்.
    இனி ஈழம் தான் முடிவு என்பதை உலகம் உணர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.