[செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2008] இந்தயாவுக்குள் பயங்கரவாதிகளின் ஊடுறுவல் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்கில் மன்னார் வளைகுடாவை கண்காணிக்கும் நவீன ராடர் கருவிகளை இந்திய விமானப்படை பொருத்தியுள்ளதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது இந்திய தெற்குப் பிராந்திய கமாண்டர் எயார் வைஸ் மாஷல் வை. ஆர்;. ரானே இது தொடர்பாக விமானப் படையினருடனும் கரையோரப் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் மண்டபம் பிரதேசத்தில் கலந்துரையாடல் ஒன்றை நேற்று நடத்தியுள்ளார். அதன்பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய கமாண்டர், மன்னார் வளைகுடா முழுவதையும் கண்காணிக்கும் வகையில் புதிய ராடர் தொகுதிக்கு 8 என்டனாக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, மண்டபம் கரையோரத்துக்கு அப்பால் இந்திய கடற்பரப்பில் கப்பல்கள், வள்ளங்கள், சிறிய படகுகள் என்பவற்றை துல்லியமாகக் கண்டுபிடித்து அறிவிக்கும் ஆற்றல் மிக்கவை என கமாண்டர் எயார் வைஸ் மாஷல் வை. ஆர்;. ரானே தெரிவித்துள்ளதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது
Tuesday, March 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.