Monday, March 17, 2008

அடை மழையினால் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து நீரில் மூழ்கியுள்ள பல கிராமங்கள்

[ திங்கட்கிழமை, 17 மார்ச் 2008]
அம்பாறை மாவட்டத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பெய்து வருகின்ற அடை மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தாழ்ந்த பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளார்கள். பொது மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இன்று அக்கரைப்பற்று, கல்முனை வலயங்களிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகவும் குறைவாகவே காணப்பட்டதாக அதிபர்கள் தெரிவிக்கின்றார்கள். கல்முனை ஸாஹிரா கல்லூரி, கமு/ அல் மிஸ்பா மகா வித்தியாலயம், கமு/ அல் மழ்ஹர் ஸம்ஸ் மகா வித்தியாலயம், காரைதீவு கமு/ சண்முகா மகா வித்தியாலயம், காரைதீவு இ.மகளிர் மகாவித்தியாலயம், நிந்தவூர் கமு/ இமாம்,ஆர்.கே.எம். ×மி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் உட்பட பல பாடசாøலகளின் வகுப்பறைகளுக்குள் நீர் தேங்கிக் காணப்படுகின்றன. பல பாடசாலைகளின் வகுப்பறைக் கூரைகளிலுள்ள ஓட்டை காரணமாக வகுப்பறையிலுள்ள தளபாடங்கள் நீரில் நனைந்து காணப்படுகின்றன.

அக்கரைப்பற்று, கல்முனை கல்வி வலயத்திலுள்ள பல பாடசாலைகளில் வெள்ள நீர் தேங்கியிருப்பதனாலும் மாணவர்களின் வரவு மிகவும் குறைவாக இருப்பதனாலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனாலும் இன்று பல பாடசாலைகள் முற்பகல் 11 மணிக்கு பிறகு மூடப்பட்டன. இதற்கிடையே அகதி முகாம்களிலும் வெள்ள நீர் தேங்கி காணப்படுவதோடு தற்காலிக கூடாரங்களுக்குள்ளும் நீர் தேங்கிக் காணப்படுகின்றன.

சாய்ந்தமருது அகதி முகாமில் உள்ள 675 குடும்பங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மழை நீடிக்குமாயின் அவர்கள் அனைவரும் இடம்பெயர்ந்து செல்ல வேண்டியேற்படும். இதேவேளை அகதி முகாம்களில் தங்கியிருப்போர் வெளியேறும் நிலையேற்படும் பட்சத்தில் அவர்களை பாடசாலைகளில் தங்க வைப்பதற்குரிய நடவடிக்கைகளை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் மேற்கொண்டுள்ளார்.

நிந்தவூர் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை திரட்டுவதற்காக நிந்தவூர் பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா கிராம சேவக உத்தியோகத்தர்களை நேற்று விசேட கூட்டமொன்றை கூட்டி பணிப்புரை விடுத்துள்ளார். நிந்தவூர் பிரதேசத்தில் சுமார் 7000 குடும்பங்களின் இயல்பு நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்து கொண்டிருக்கின்ற மழையினால் அக்கரைப்பற்று கல்முனை, கல்முனை அம்பாறை, கல்மனை மட்டக்களப்பு, அக்கரைப்பற்று பொத்துவில், அக்கரைப்பற்று அம்பாறை, பிரதான வீதிகளில் பல இடங்களில் நீர் தேங்கிக் காணப்படுகின்றன. சில இடங்களில் சுமார் 2 அடிக்கும் மேற்பட்ட நீர் தேங்கிக் காணப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.