Thursday, January 10, 2008

கண்காணிப்புக்குழு விடுதலைப் புலிகள் விடைபெற்றுச் செல்லும் இறுதிச் சந்திப்பு

[வியாழக்கிழமை, 10 சனவரி 2008]

இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான விடைபெறும் இறுதி ஒன்று இடம்பெற்றுள்ளது.

சந்திப்பானது இன்று காலை 9 மணிக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகத்தின் நடுவப் பணியகத்தில் நடைபெற்றது.

கண்காணிப்புக் குழுவில் கண்காணிப்புக் குழுவின் தலைவர் லார்ஸ் ஜொகான் சொல்பேர்க் உட்பட மேலும் சில கண்காணிப்பு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
விடுதலைப் புலிகள் தரப்பில் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பபாளர் செ.புலித்தேவன், மனித உரிமைகள் பேச்சாளர் செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.

சந்திப்பில் சிறீலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகியமை அடிப்படையற்றது.

சிறீலங்கா அரசாங்கம் ஒருதலைப் பட்சமாக யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகியுள்ள நிலையிலும், நோர்வே மற்றும் அனைத்துலக சமூகங்களுடனான உறவுகள் கடைப்பிடிக்கப்படவுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

சமாதான நடவடிக்கைகளை அனைத்துலக நாடுகளின் ஆதரவுடன் நோர்வே முன்னெடுத்துச் செல்லவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் கையெழுத்திடப்பட்ட அறிக்கை ஒன்று கண்காணிப்புக் குழுவிற்கும், கண்காணிப்புக் குழுழு ஊடாக நோர்வே வெளியுறவு அமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.