[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2008] 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலை பேரனர்த்த மீள்கட்டமைப்புப் பணிகளுக்காக அனைத்துலக சமூகம் வழங்கிய நிதித்தொகையில் 535 மில்லியன் டொலர்களுக்குரிய கணக்கினை தெளிவுபடுத்த முடியாத நிலையில் சிறிலங்கா அரசாங்கம் உள்ளதாக ஊழலுக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது. ஆழிப்பேரலை அவசர உதவிகளுக்காக வழங்கப்பட்ட மொத்த நிதித்தொகைக்கும் மீள்கட்டமைப்புப் பணிகளுக்காக சிறிலங்கா அரசாங்கத்தினால் செலவிடப்பட்ட நிதித்தொகைக்கும் இடையில் 535 மில்லியன் டொலர்களுக்கான இடைவெளி உள்ளமை தமது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. ஆழிப்பேரலை மீள்கட்டமைப்பிற்காக வழங்கப்பட்ட நிதியை சிறிலங்கா அரசாங்கம் வேறு நோக்கங்களுக்குச் செலவிட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாக IRIN எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் செய்திச்சேவைப் பிரிவு தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. ஆழிப்பேரலையின் பின்னான மீள்கட்டமைப்புக்காக சிறிலங்கா அரசாங்கத்திற்கு 1,200 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று தெரிவித்து, ஆழிப்பேரலை மீள்கட்டமைப்பிற்கான மிகிந்த ராஜபக்சவின் அலோசகர் சாந்த பெர்னான்டோ சிறிலங்கா மீதான குற்றச்சாட்டினை மறுத்துள்ளார். உதவிகள் அனைத்தும் அரசாங்கத்திற்கூடாக நேரடியாக வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதினம்.கொம்
Tuesday, January 01, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.