Tuesday, January 01, 2008

கொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சுட்டுக்கொலை

[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2008]

முன்னாள் அமைச்சரும் ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தியாகராஜா மகேஸ்வரன் அரச கொலைக் கும்பலால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இன்று காலை கொச்சிக்கடையிலுள்ள சிறி பொன்னம்பலவானேஸ்வரர் கோவிலில் புத்தாண்டு வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் காலை 9.10 மணியளவில் முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் இருந்த மெய்காவலரும் இறந்துள்ளார்.

மகேஸ்வரன் உட்பட இன்னும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் காயமடைந்தனர். மேலும் 6 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் உடனடியாக சூட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகேஸ்வரனும் ஒரு மெய்ப்பாதுகாவலரும் சிகிச்சை பலனின்றி காலை 10.00 மணியளவில் உயிரிளந்துள்ளார்.

இதனையடுத்து பொன்னம்பலவானேஸ்வரர் சிவன் கோவில் மூடப்பட்டுள்ளது.

மகேஸ்வரன் 2004ம் ஆண்டு தேர்தல் பிரச்சார நேரத்தின் போது கொட்டாஞ்சேனைப்பகுதியில் வைத்து சூட்டுக்கு இலக்காகி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இந்தக் கொலைக்கு கோத்தபாய போன்றோர் அல்ல காரணம், மிதவாத தலைவர்கள் என்ற பெயரில் இந்திய பயங்கரவாத அரசினால் முன்னிலைப்படுத்தப்படும் சங்கரி மற்றும் சித்தார்த்தன் போன்றோரே காரணம்! இந்த கொலைகள் மூலம் பயனடையப் போவதும் அவர்களே. எனவே இவர்களை விரைந்து அழிப்பதற்கு தமிழர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்!

    சங்கரி சித்தார்த்தன் எல்லாம் ஒரு மனிதனா? அதிலும் சங்கரி ஒரு கேடுகெட்டவன் ( தயவு செய்து தணிக்கை செய்யவேண்டாம்). தமிழர்களின் மரணங்களில் குளிர் காய்பவன் இவன். மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் மரணத்தில் சங்கரிக்கும் தொடர்பு இருப்பது பலருக்கும் தெரிந்தவிடயம்

    --------------------

    பிணக்கேன் நமக்குள் புறப்படு தமிழா

    ReplyDelete
  2. மாமனிதர் குமார் பொன்னம்பலம்.. மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்.. மாமனிதர் சந்திரநேரு அரியநாயம்.. மாமனிதர் ரவிராஜ் வரிசையில் மகேஸ்வரனும் ஆயுத ஜனநாயக தமிழ் மக்கள் விரோத கூலிக் கும்பல்களால் படுகொலை செய்யப்பட்டுவிட்டார்..! இக்கூலிக்குழுக்களே தமிழ் தேசிய ஆர்வம் மிக்க பத்திரிகையாளர்களையும் கல்விமான்களையும் கொலை செய்தன.

    குறைந்த பட்ச பாதுகாப்புடன் இருக்கும் தலைவர்களை கொலை செய்வதில் தமிழ் ஆயுத ஜனநாயக கூலிக் குழுக்களும் சிங்கள கூலிக் குழுக்களும் முதன்னிலை வகிக்கின்றன.

    இக்கூலிக்குழுக்களை மிதவாதத் தமிழ் தலைவர்களாக இனங்கண்டு கிழக்கில் தேர்தலில் நிறுத்தியுள்ள சிங்கள அரசும் இந்திய மத்திய அரசும் உலகின் முதன்னிலைப் பயங்கரவாத அரசுகளில் அடங்குகின்றன..!

    கொலைகாரக் கூலிக் கும்பல்கள் எல்லாம் ஜனநாயக வேடம் தரித்து இவ்வுலகில் ஆட்சியில் இருக்க முடியும் எனில் என்னதான் நிகழாது. அவையும் அவையின்ர ஜனநாயகமும்..!

    -நெடுக்ஸ்-

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.