[வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007] சிறிலங்கா வான் படையின் வான் குண்டுத்தாக்குதலால் தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இன்று வெள்ளிக்கிழமை (02.11.07) காலை சிறிலங்கா அரச வான் படைக்குச் சொந்தமான கிபிர் ரக வானூர்திகள் நடத்திய தாக்குதலில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடைய வீரச்சாவு பற்றிய செய்தி பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அன்பும் பண்பும் ஆளுமையும் மிக்க சிறந்த மனிதரை எமது இனம் இன்று இழந்து தவிக்கின்றது. "தேசத்தின் குரல்" பாலா அண்ணரை எமது இனம் இழந்து ஒரு வருடம் கடப்பதற்குள் மீண்டும் ஓர் இராஐதந்திரியை எமது இனம் இழந்து கண்ணீர் விட்டு கதறியழுகின்றது. இவருடைய இழப்பு தமிழ் மக்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஈடுசெய்யப்பட முடியாத பேரிழப்பாகும். சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் மிலேச்சத்தனமான இத்தாக்குதல் சம்பவத்தினை நான் மிக வன்மையாக கண்டிக்கின்றேன். அத்துடன் சமாதானத்தினை விரும்பும் ஒவ்வொருவரும் சிறிலங்கா அரசின் இப் பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் எனக்கோருகின்றேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, November 02, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.