Friday, November 09, 2007

சரத் பொன்சேகா யாழ் குடாநாட்டிற்கான பயணமொன்றை மேற்கொண்டு திரும்பியிருக்கின்றார்.

[வெள்ளிக்கிழமை, 09 நவம்பர் 2007] சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா யாழ் குடாநாட்டிற்கான பயணமொன்றை மேற்கொண்டு திரும்பியிருக்கின்றார். யாழ் குடாநாட்டை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிறீலங்காப் படையினர், விடுதலைப் புலிகளின் அநுராதபுரம் தாக்குதலைத் தொடர்ந்து அச்ச நிலைக்குள் தள்ளப்பட்டு உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறீலங்காப் படைகளின் போருக்கான உளவியல் பாங்கை அதிகரிக்கும் நோக்கிலும், அவர்களுக்கான தேவைகளைப் பார்வையிடும் நோக்கிலும் நேற்று இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள போதிலும், மற்றொரு படை நகர்விற்கான தயார்படுத்தலாக இருக்கலாம் எனவும் ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டின் உயர்பாதுகாப்பு வலயங்களில் சிறீலங்காப் படையினரின் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், அச்சம் காரணமாக தரைப்படைத் தளபதி சென்று திரும்பிய பின்னரே பாதுகாப்பு அமைச்சு செய்தியை வெளியிட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.