[ஞாயிற்றுக்கிழமை, 04 நவம்பர் 2007]
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை படுகொலை செய்தது கொடுஞ்செயல் என்று தமிழ்நாட்டின் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் இலங்கை வான் படையின் குண்டு வீச்சின் மூலம் கொல்லப்பட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
சில நாட்களுக்கு முன்னால் தான் விடுதலைப் புலிகள் தேர்தல்களில் நேரடியாக ஈடுபடுவதற்கு சட்டம் கொண்டு வரப்போவதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு பிறகு இந்த கொடுஞ்செயலை செய்துள்ளது. இதிலிருந்தே இலங்கை அரசு நம்பத்தகுந்த அரசு அல்ல என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள முடியும்.
இலங்கை தீவு பௌத்த மதத்தினருக்கு மட்டுமே சொந்தம் என்ற அடிப்படையில் ஆட்சி நடத்தும் சிங்கள அரசை அடையாளம் கண்டு இந்திய அரசு தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தமிழ்ச்செல்வனை இழந்து துயருரும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எனது அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.