[செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2007] சிறிலங்கா நாடாளுமன்றம், அலரிமாளிகை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையப் பிரதேசம், பாதுகாப்புத்துறை தலைமையகங்கள் உட்பட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்கள் சார்ந்த வான்பரப்பை வான் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்துவதற்கு (Air Defence Zone) சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த உத்தேச வான் பாதுகாப்பு வலயங்களுக்குரிய வான்பரப்பில் எந்தவொரு சந்தேகத்துக்குரிய வானூர்திகளும் பறப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. இதுபற்றி கடந்த 7 ஆம் நாள் பாதுகாப்பு அமைச்சின் மூத்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்திருக்கும் தகவல்களுக்கேற்ப, குறித்த வான் பாதுகாப்பு வலயம் பிரகடனப்படுத்தப்படுவது பற்றிய அறிவித்தல் வான்; பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ளூர் விமான சேவைகள் அதிகாரியால் சிறப்பு அரசாங்க வர்த்தமானி மூலம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு வான் பாதுகாப்பு வலயத்திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் அந்த வலயங்களுக்கு உட்பட்ட வான்படை நிலையங்களில் தனியார் வானூர்தி சேவைக்குச் சொந்தமான வானூர்திகள் தங்கிச் செல்வது சம்பந்தப்பட்ட அனுமதி உள்ளூர் வானூர்தி அதிகாரியிடம் பெறப்பட வேண்டும் எனவும் அவ்வாறு அனுமதி பெற்ற தனியார் வானூர்திசேவை விமானங்கள் மட்டுமே குறித்த வான் பாதுகாப்பு வலயத்துக்குரிய வான்பரப்பில் பறப்பதற்கோ அல்லது அதற்குரிய வானூர்தி நிலையங்களில் தரை இறங்கவோ அனுமதிக்கப்படும் எனவும் குறித்த பாதுகாப்புத்துறை உத்தியோகத்தர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tuesday, November 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.