[திங்கட்கிழமை, 1 ஒக்ரொபர் 2007] யாழில் சரண்டையும் பொதுமக்களை "புலிகள்" என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளமைக்கு பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் த்ரிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர்: சரணடைந்தோர் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் எனில் அவர்கள் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளிலே இருந்திருப்பர். இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்குள் வரமாட்டார்கள். அப்படியான நிலையில் சிறிலங்கா இராணுவப் பேச்சாளரின் அறிக்கை ஆச்சரியமளிக்கிறது மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்: பொதுமக்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் என்று முத்திரை குத்துவது வழமையாக நடைபெறுவதுதான். மனித உரிமைகள் ஆணையத்திடம் அந்த இளைஞர்கள் சரணடைவது என்பது யாழ்ப்பாணத்தின் மனித உரிமைகள் சூழ்நிலையை எடுத்துக் காட்டுகிறது. தனது இலங்கை பயணத்தின் போது இதனையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் கவனத்தில் கொள்ள வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜயலத் ஜயவர்த்தன: இது தொடர்பில் யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் வெளிப்படையான அறிக்கையை வெளியிட வேண்டும். அதேபோல் சரணடையும் இந்த இளைஞர்களிடம் தாங்கள் சரணடைவது தொடர்பாக சுயாதீன அறிக்கையைப் பெற வேண்டும் என்றார் அவர். நன்றி:புதினம்
Monday, October 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.