[சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2007] உலகத்தில் தற்போது செயற்திறன் மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர் என்று இனமோதல்கள் தொடர்பிலான ஐரோப்பிய மையத்தின் முன்னாள் இயக்குநர் ஜெரார்ட் சாலியண்ட் கூறியுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: உலகத்திலேயே தற்போது செயற்திறன் மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர். வியட்நாமியர்களும் எரித்தியர்களும் இத்தகைய செயற்திறன் மிக்க இயக்கத்தினராக இருந்தனர். இப்போது விடுதலைப் புலிகள் உள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளை அழித்துவிட முடியாது. தமிழ் மக்களினது வேண்டுகோள்களானது நீதியானது. இந்த நாட்டின் ஒரு பகுதியானவர்கள் அவர்கள். அவர்கள் சிறுபான்மையினராக அங்கீகரித்து அரசியல் சுயாட்சி அல்லது கூட்டமைப்புக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இராணுவ வழித் தீர்வு என்பது சாத்தியமில்லை என்றார் அவர். ஆனால் சாலியண்ட்டின் இந்தக் கருத்தை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிராகரித்துள்ளார். இலங்கையின் களநிலைமையை அறியாமல் அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் கோத்தபாய கூறியுள்ளார்.
Saturday, October 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.