[செவ்வாய்க்கிழமை, 9 ஒக்ரொபர் 2007] ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா தலைநகர் கொழும்பு வந்தடைந்தார். இலங்கையில் 5 நாள் பயணம் மேற்கொள்ளும் லூய்ஸ் ஆர்பர், சிறிலங்கா அரசாங்க தரப்பு மற்றும் கடத்தப்பட்டோர்- காணாமல் போனோரின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசுவார் என்று ஐ.நா. பேச்சாளர் கோர்டொன் வெய்ஸ் தெரிவித்தார். சிறிலங்கா அரசாங்கத்தினால் பாரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்படுவதால் இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் லூய்ஸ் ஆர்பரின் தற்போதைய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Tuesday, October 09, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.