[செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2007]
இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அரச செயலகப் பேச்சாளர் சென் மெக்கொர்மக் நேற்று திங்கட்கிழமை இது தொடர்பில் கூறியுள்ளதாவது:
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை மிகவும் சீர்குலைந்து போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் சட்டத்தின் ஆட்சி மிகவும் பலவீனமாக உள்ளதாகவும் லூய்ஸ் ஆர்பர் சாடியுள்ளர்.
இலங்கையில் அனைத்துலக மனித உரிமைகள் குழுவினது பிரச்சனமானது அவசியம். சட்டத்தின் ஆட்சியை செயற்படுத்தவும், மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்தவும் அது உதவும். ஆகையால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.