[புதன்கிழமை, 3 ஒக்ரொபர் 2007]
எதிர்வரும் 2008 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் நாள் "தமிழீழத்"தைப் பிரகடனம் செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமது சுயாட்சிக்கான தமிழீழத்தை 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் நாள் பிரகடனம் செய்வதற்கான முன்னேற்பாடுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வருவதாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட புலிகள் ஐ.நா. பொதுச்சபை ஆண்டுக்கூட்டத் தொடரிலும் ஜெனீவா மாநாட்டிலும் சிறிலங்காவுக்கு எதிராக பல தீர்மானங்களை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் சிறிலங்காவின் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், மகிந்த சமரசிங்க மற்றும் தயான் ஜயதிலக்க ஆகியோரின் முயற்சியினால் புலிகளின் அந்த முயற்சியில் பலன் கிட்டவில்லை.
எனவேதான் அவர்கள் தமிழீழத்தைப் பிரகடனம் செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர். இதற்காக பொதுமக்களையும் தூண்டுகின்றனர்.
தமிழீழப் பிரகடனத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்க அரச தலைவர் மற்றும் ஐ.நா. செயலாளர் உட்பட முக்கிய உலகத் தலைவர்களுக்கு மின்னஞ்சல் உள்ளிட்டவைகள் மூலம் கோரிக்கை விடுக்குமாறு தமிழ் மக்களிடம் புலிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தமிழீழம் அமைக்க முயலும் புலிகளின் கனவு ஒருநாளும் நனவாகப் போவதில்லை. இதற்கு முன்னரும் பலமுறை இதற்காக புலிகள் முயன்று தோல்விகண்ட வரலாறு உள்ளது என்றார் ஜெயராஜ்.
நன்றி:புதினம்

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.