Monday, April 30, 2007

தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகள் கொலை செய்திருக்கமாட்டார்கள் என்கிறார் மீனவர் சங்கத் தலைவர்.!!

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007]

தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகள் கொலை செய்தோ அல்லது கடத்தியோ இருக்கமாட்டார்கள் என்று தமிழக மீன் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான பீட்டர் தாஸ் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி தமிழக மீனவர்கள் 5 பேர் கடற்பரப்பில் கொல்லப்பட்ட சம்பவத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவுக்கு சம்பந்தம் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தமிழக காவல்துறைத் தலைவர் டி. முகர்ஜி அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியும் தனது அதிர்ச்சியைத் தெரிவித்திருந்தார்.

இவை குறித்துக் கேட்கப்பட்டபோதே பீட்டர் தாஸ் இவ்வாறு பதிலளித்தார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதான அரசியல் அழுத்தம் அதிகரித்துவரும் சூழ்நிலையில், உலக அளவில் எந்தவொரு தமிழருக்கும் எதிராக விடுதலைப்புலிகள் இவ்வாறு எதிராகச் செயற்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகளோ அல்லது இலங்கைத் தமிழர்களோ கொலை செய்திருக்க மாட்டார்கள் என்று இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

ஆயினும் ஒருவேளை விடுதலைப்புலிகளால் மீனவர்கள் கடத்தப்பட்டிருந்தால் அவர்களைப் பத்திரமாக மீட்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

BBC

தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இல்லை: தமிழீழ விடுதலைப் புலிகள் விளக்க அறிக்கை

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007]

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் 12 தமிழக உறவுகள் காணாமல் போனமைக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
30.04.2007

தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கடலில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வெளிவருகின்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

இவை தமிழ் மக்களுக்கும் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான சக்திகளால் திட்டமிடப்பட்டு வெளிக்கொணரப்படும் கட்டுக்கதைகளே ஆகும்.

தமிழக மக்களுக்கும் எமது மக்களுக்கும் இடையிலான நல் உறவினைப் பிரித்து எமது மக்களைத் தனிமைப்படுத்தி அவர்களின் மீது மிகப்பெரும் மனிதப் பேரவலங்களை கட்டவிழ்த்து விட்டு இன அழிப்பொன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஒரு பகுதியாகவே தமிழக மீனவர்களை அவ்வப்போது கடலில் வைத்துச் சுட்டுக்கொன்று விட்டு அதற்கான பழியை தமிழ் மக்கள் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் சுமத்தி விடுகின்ற வழமை தொடர்ந்து வருகின்றது.

இப்படியான குற்றச்சாட்டுக்களை காரணமாக வைத்து இந்திய அரசுடன் ஒரு கூட்டு கடல் ரோந்து நடவடிக்கையை தொடங்குவதற்கும் அதன்மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை நசுக்கிவிடலாம் என்றும் சிறிலங்கா அரசு கனவு காண்கிறது.

அதற்காகவே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களை தொடர்ந்து நடாத்தி வருகின்றது. இதன் மூலம் தமிழக உறவுகளை எமது மக்களிடமிருந்து அன்னியப்படுத்தி தனது இனப்படுகொலை முயற்சிகளை அவர்களுக்கு மறைத்து அரசியல் இலாபம் சம்பாதிக்க நினைக்கின்றது.

எமது மக்களும் அமைப்பினரும் எப்போதும் தமிழக உறவுகளுடன் ஒரு நல்ல உறவினைப் பேணி வருகின்றனர். அவர்களை அச்சுறுத்துவதற்கோ, அவர்களின் உயிர்களுக்கு ஊறுவிளைவிப்பதற்கோ நாம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை.

பதிலாக பல ஆபத்துக்களில் இருந்தும், சிறிலங்கா அரசின் வன்முறைகளில் இருந்தும் பல சந்தர்ப்பங்களில் அவர்களை காப்பாற்றி பத்திரமாக கரை சேர்த்திருக்கின்றோம். தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றோம்.

அப்படியிருந்தும் 300-க்கும் மேற்பட்ட தமிழக உறவுகள் சிங்களக் கடற்படையால் இதுவரையும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது மிகவும் மனவேதனைக்குரியதே.

அந்த விதத்திலே அண்மையில் இடம்பெற்ற வன்முறையும் திட்டமிடப்பட்டு சிங்கள இராணுவத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. மேலும் அதற்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் என்ற பொய்யான பரப்புரையையும் அது முன்னெடுத்து வருகின்றது.

இவ் வன்முறையில் 12 தமிழக உறவுகள் காணாமற் போய்விட்டதாக கூறப்படுகின்றது. இவர்கள் குறித்த நிலவரங்களை அறிவதற்கு எமது கடற்படையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

எமது பிரதேசத்தில் இதுவரைக்கும் அப்படியானவர்கள் இருப்பது தொடர்பாக எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை.

ஆயினும் எமது பிராந்தியத் தலைவர்களுடன் இது தொடர்பாக தொடர்பு கொண்டிருக்கின்றோம். மீனவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் அவர்களை மீட்பதற்கான எந்த நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

தமிழக காவல்துறையினர் பேச்சு நடத்தவில்லை

தமிழகக் காவல்துறை இது தொடர்பாக எமது அமைப்புடன் தொடர்புகொண்டதாகவும், பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் வெளிவருகின்ற செய்திகள் யாவுமே உண்மைக்குப் புறம்பானவையாகும். இதுவரையில் தமிழகக் காவல்துறைக்கும் எமது அமைப்புக்குமிடையில் உத்தியோகபூர்வமான எந்தத் தொடர்புகளும் ஏற்படுத்தப்படவில்லை என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

தமிழக மக்கள் மீது சிறிலங்கா அரசு முன்னெடுத்து வருகின்ற நீண்ட கால வன்முறையின் பின் புலத்தினை தமிழக மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்.

அத்துடன் எமது மக்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்திற்குமாக அவர்கள் குரல் கொடுத்தும் வருகிறார்கள். இத்தகைய பின்னணியில் இவ்வாறான வன்முறைகளையும் இதற்குக் காரணமானவர்களையும் தமிழக உறவுகள் உண்மையாகவே இனங்காணுவார்கள் என்றே நம்புகின்றோம்.

தொடர்ந்தும் இத்தகைய வன்முறைகள் இடம்பெறாது தடுப்பதற்கு எமது மக்களும், அமைப்பினரும் பூரண ஆதரவினை வழங்கிநிற்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிபிர் யுத்த விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007]

சிறிலங்கா வான்படையின் மிக் 27 தாக்குதல் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வன்னி வான்பறப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வான்படைத்தளத்தை தாக்குவதற்காக சிறிலங்கா வான்படையின் மிக் 27 வகை விமானங்கள் வந்தன.

அவற்றின் மீது விடுதலைப்புலிகளின் விமான எதிர்ப்பு அணியினர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் விமான எதிர்ப்பு படையினரின் தானியங்கிப் பீரங்கிகன் நடத்திய இத் தாக்குதலில் மிக் 27 விமானம் சிக்கியது.

இதனால் கடுமையாகச்சேதமைடந்த மிக் 27 விமானம் வேகமாகப்பறந்து சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப்பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன்: வைகோ.!!

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007]

ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன் என்று வைகோ தெரிவித்து வரும் நிலையில் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஸ்ணசாமி வலியுறுத்தினார்.

அதேபோல் வைகோவை கைது செய்ய வேண்டும் என்று இந்திய மத்திய அமைச்சர் இளங்கோவனும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "மாலைமலர்" நாளிதழுக்கு வைகோ அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது:

முதல்வரை கிருஸ்ணசாமி சந்தித்து பேசியது தொடர்பாக நான் எதுவும் சொல்வதற்கில்லை. விடுதலைப் புலிகள் தொடர்பாக நான் புதிதாக எதுவும் பேசி விடவில்லை. தொடர்ந்து கூறி வரும் கருத்துக்களைத்தான் இப்போதும் கூறியிருக்கிறேன்.

பிரதமரை நான் சந்தித்து பேசிய போது என்ன கருத்தை வெளியிட்டேனோ அந்த கருத்தைதான் சமீபத்தில் நான் அறிவிப்பாக வெளியிட்டேன்.

இந்தியாவில், தமிழ்நாட்டில் எந்த ஒரு வன்முறையிலும் நாங்கள் ஈடுபட்டதுமில்லை. வன்முறைச் சம்பவங்களை ஆதரித்ததும் இல்லை.

இலங்கையில் தற்போது உச்சகட்ட உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. தமிழர்களை சிங்கள வெறியர்கள் தாக்கி அழிக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் துன்பத்தில் தள்ளப்படுகிறார்கள்.

ஈழத்தில் வாடி வதங்கி கொண்டிருக்கும் தமிழர்களுக்கு மற்றும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண விடுதலைப்புலிகள் போராடி வருகிறார்கள்.

தமிழர்கள் வெல்ல வேண்டும். அவர்களுக்காக போராடும் விடுதலைப்புலிகள் வெல்ல வேண்டும் என்ற இயற்கையான கருத்தைத்தான் நான் கூறி இருக்கிறேன்.

என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன் என்றார் வைகோ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புக்கான இரவு நேர வானூர்தி சேவையை சிங்கப்பூர் ஏயர்லைன்ஸ் நிறுத்தியது.!!

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007]

கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல்கள் தொடருவதால் சிறிலங்காவுக்கான இரவு நேர வானூர்தி சேவைகளை சிங்கப்பூர் ஏயர்லைன்ஸ் நிறுவனம் நிறுத்தியுள்ளது.

அந்நிறுவனம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு கொழும்புக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான நாளாந்த சேவைகளில் மாற்றம் செய்துள்ளதாகவும் இன்று நள்ளிரவு முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதே பசுபிக் ஏயர்லைன்ஸ் நிறுவனம் முன்னரே கொழும்புக்கான வானூர்தி சேவைகளை இடை நிறுத்துவதாக அறிவித்தது.

அதேபோல் எமிரேட்சும் கொழும்புக்கான வானூர்தி சேவைகளை நிறுத்த உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று பின்னிரவு வெளியாகக்கூடும் எனத் தெரிகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிரடியான தொடர் வான்தாக்குதல்களையடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது.

மேலும் வான்தாக்குதல்கள் நடத்தாத நிலையிலும் அச்சத்தின் காரணமாகவும் சிறிலங்கா வான்படையினர் வான்நோக்கிச் சுடுவதும் பாதுகாப்புக் கெடுபிடிகளை மேற்கொள்வதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பன்னாட்டு வானூர்தி சேவை நிறுவனங்கள் கொழும்புக்கான வானூர்தி சேவைகளை தொடர்ச்சியாக நிறுத்தி வருகின்றன.

மேலதிக வான்வழித் தாக்குதல்கள் நிச்சயமாகத் தொடரும்: இளந்திரையன் எச்சரிக்கை- பங்கு வர்த்தகமும் சரிவு.!!

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007]

சிறிலங்கா மீதான வான்வழித் தாக்குதல்கள் நிச்சயமாக தொடரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து தொலைபேசியூடாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவித்த இளந்திரையன்,

சிறிலங்கா இராணுவமானது குறிப்பாக சிறிலங்கா வான்படையானது தாங்கள் எப்போதும் இராணுவ வழியில்தான் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதனை நிரூபிக்க விடாப்பிடியாக முயற்சிக்கிறது. ஆகையால் எங்களுக்கு வேறு வழியில்லை. திருப்பித் தாக்குதவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை. நிச்சயமாக மேலும் பல தாக்குதல்கள் நடைபெறும் என்றார்.

இதனிடையே கொழும்பு நகரிலிருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் வடக்குப் பகுதியில் உள்ள தனது பிரதான எண்ணெய்க் களஞ்சியத்தை தாற்காலிகமாக மூடுவதாக றோயல் டச்சு செல் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் சிறிலங்காவின் பங்கு வர்த்தகமானது இன்று திங்கட்கிழமை படுவீழ்ச்சி அடைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையானது ஒரே மாதத்தில் கொழும்பில் மூன்று வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டதையடுத்து இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.

ரஜிவர்மன் படுகொலையானது துயரமான இழப்பு: புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர்.

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007]

யாழ்ப்பாணத்தில் உதயன் செய்தியாளர் ரஜிவர்மன் படுகொலை செய்யப்பட்டமையானது துயரமான இழப்பு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் செல்வி தெரிவித்துள்ளார்.

அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறிலங்கா இராணுவ வன்முறைகளை எதிர்த்து எழுதுகிற ஊடகவியலாளர்களை திட்டமிட்டு அழிக்கும் நிகழ்வின் மற்றொரு சம்பவமாக யாழ். நாளிதழின் செய்தியாளர் ரஜிவர்மன் கடந்த ஏப்ரல் 29 ஆம் நாள் யாழில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உதயன் நாளிதழ் பலமுறை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணைக்குழுவினரின் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளது.

2006 ஆம் ஆண்டு மே 2 ஆம் நாள் உதயன் அலுவலகத்தை சிறிலங்கா இராணுவத்தினர் முன்னிலையிலேயே துணை இராணுவக் குழுவினர் தாக்கினர். இதில் உதயன் பணியாளர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். நாளிதழ் அலுவலக உபகரணங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பில் எவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 18 ஆம் நாள் பாதுகாவலர்களை கட்டிப்போட்டுவிட்டு உதயன் களஞ்சியத்தை துணை இராணுவக் குழுவினர் எரித்தனர்.

சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ள சில ஊடகவியலாளர்கள் விவரம்:

- 2004 ஆம் ஆண்டு யூன் மாதம் பணிக்குச் செல்லும் வழியில் ஊடகவியலாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்டார்

- 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனைத்துலகம் நன்கறிந்த ஊடகவியலாளரும் தமிழ்நெட் இணையத்தள ஆசிரியருமான சிவராம் தர்மரட்ணம், கொழும்பு நகரில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

- 2006 ஆம் ஆண்டு ஜனவரியில் கொழும்பிலிருந்து வெளியாகும் சுடரொளி தமிழ் நாளிதழின் திருகோணமலை செய்தியாளர் சுகிர்தராஜன், அவரது வீட்டுக்கு அருகே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

- 2006 ஆம் ஆண்டு யூலை 2 ஆம் நாள் சுயாதீன ஊடகவியலாளர் சம்பத் லக்மல் டி சில்வா கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.

- 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் நமது ஈழநாடு நாளிதழின் நிர்வாக மேலாளர் சிவமகராசாவை சிறிலங்கா இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்தனர்.

- 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் நாள் நிலம் மாத இதழின் ஆசிரியர் சுபாஸ் சந்திரபோசை வவுனியாவில் அவரது வீட்டு அருகே படுகொலை செய்தனர்.

படுகொலை செய்யப்பட்ட நாளிதழ் விநியோகிப்பாளர்கள்:

- 2005 ஆம் ஆண்டு யூனில் மட்டக்களப்பில் ஈழநாதம் விநியோகிப்பாளர் ஏ.கன்னமுத்து படுகொலை

- 2005 ஆம் ஆண்டு செப்ரெம்பரில் ஈழநாதம் நாளிதழின் மற்றொரு விநியோகிப்பாளர் கே.யோககுமார் படுகொலை

- 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் நாள் உதயன் நாளிதழின் விநியோகிப்பாளர் சதாசிவம் பாஸ்கரன் யாழ்ப்பாணத்தில் படுகொலை

தாக்குதலுக்குள்ளான அலுவலகங்கள்:

- 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் மட்டக்களப்பில் உள்ள தினக்குரல் அலுவலகம் மீது தாக்குதல்

- 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 29 ஆம் நாள் கொழும்பில் உள்ள சுடரொளி வார வெளியீட்டு அலுவலகம் மீது தாக்குதல். அந்த அலுவலகத்துக்குள் இரு கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதில் பாதுகாப்பு பணியாளர் டேவிட் செல்வரட்ணம் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். மேலும் மூன்று பணியாளர்கள் படுகாயமடைந்தனர்.

- 2006 ஆம் ஆண்டு மே 2 ஆம் நாள் உதயன் நாளிதழ் அலுவலகம் மீது தாக்குதல். இதில் இரு பணியாளர்கள் படுகொலை. அலுவலக உபகரணங்கள் நொறுக்கப்பட்டன.

- 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் நாள் உதயன் களஞ்சியப் பகுதி தீக்கிரையாக்கப்பட்டது.

சிறிலங்கா இராணுவத்தினரால் திறமையான ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வருகின்றனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி:புதினம்

தொடரும் கொலைகளை தடுத்து நிறுத்தவும் ஊடக சுதந்திரத்தினை பாதுகாக்கவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007] நேற்றைய தினம் யாழ். உதயன் பத்திரிகையின் செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் வைத்து துணை இராணுவக் குழுவால் கொல்லப்பட்ட தையும், வேலணையில் வைத்து 6 பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் கண்டித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையின் விபரம் வருமாறு : இன்று காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் பகுதியில் வைத்து செல்வராச ரஐவர்மன் (24)மேற்படி செய்தியாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் கடந்த காலத்தில் தினக்குரல், ஈழநாடு உட்பட பல நிறுவனங்களின் செய்தியாளராகக் கடமையாற்றியவர். உதயன் ஊடக நிறுவனத்தினை அடியோடு அழிக்கும் நோக்கில் நன்றாகத் திட்டமிடப்பட்ட அடிப்படையில் இந்த நிறுவனத்தின் மீதும் அதன் ஊழியர்கள், செய்தியாளர்கள் மீதும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வருகின்றது. இந் நிறுவனத்தை பாதிக்கும் வகையில் இடம்பெற்ற ஐந்தாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். ஊடக சுதந்திரத்தினையும் , அடிப்படை மனித உரிமைகளையும் மீறும் வகையிலும், கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் அனைத்தையும் நசுக்கும் வகையிலுமே இக்கொலை இடம் பெற்றுள்ளது. யாழ் குடா நாட்டில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித உரிமை மீறல்கள் வெளியே தெரியா வண்ணம் மூடி மறைக்கும் நோக்கில் அரச படைகளாலும் ஈ.பி.டி.பி என்னும் துணை இராணுவக் குழுவினராலுமே இக் கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் வேலணைப் முடிப்பிள்ளையார் கோவிலின் தேர் முட்டியில் இருந்து உரையாடிக் கொண்டிருந்த அப்பாவிப் பொது மக்கள் ஆறு(6) பேர் இன்று பிற்பகல் கடற்படையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஈவிரக்கமற்ற வகையில் மேற் கொள்ளப்பட்ட இப் படுகொலகைளை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறான கொலைகளை நிறுத்தி குடாநாட்டிலுள்ள படைகளை மீளப்பெறுவதற்கு அரசு விரைவான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகம் ஓரளவு கடுமையாக கையாண்டு வரும் நிலையில் முன்னர் நடைபெற்ற கொலைகளை ஆராய்வதற்கென குழு ஒன்றை திருகோணமலைக்கு அனுப்பி உலக நாடுகளை ஏமாற்றி திருப்திப் படுத்த முயலும் மகிந்த அரசு மறுபுறத்தில் கொலைகளை தொடாந்த வண்ணமேயுள்ளது. அரசின் இந்த இரட்டை வேடத்தினை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் தொடரும் கொலைகளை தடுத்து நிறுத்தவும் ஊடக சுதந்திரத்தினை பாதுகாக்கவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கோருகின்றேன். செ.கஐந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு

அமெரிக்காவின் ஆலோசனைகள் மூலம் வான்புலிகளை முறியடிக்க அரசு முயற்சி: கொழும்பு ஊடகம்.!!

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007]

சிறிலங்காவின் ஆயுதப்படைகளின் வலிமையை ஆராய்ந்த அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம் 2002 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையை தற்போது மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தேடி எடுத்து செயற்படுத்த முற்பட்டுள்ளதாக 'சண்டே ரைம்ஸ்' வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் 'சண்டே ரைம்ஸ்' வார ஏட்டில் இக்பால் அத்தாஸ் எழுதியுள்ளதாவது:

பாலாவியில் உள்ள பாதுகாப்பு அரனில் கடமையாற்றிக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் அடையாளம் தெரியாத 3 வானூர்திகளை கண்டுள்ளனர்.

அவை தென்பகுதி நோக்கிச் சென்று கொண்டிருந்தன, ஒரு வானூர்தி வெளிச்சத்துடன் அதிக உயரத்திலும், இரு வானூர்திகள் வெளிச்சங்கள் அற்ற நிலையில் தாழ்வாகவும் சென்றுகொண்டிருந்தன.

எனினும் வெளிச்சத்துடன் சென்ற வானூர்தி அனைத்துலக வானூர்தி நிறுவனம் ஒன்றின் வானூர்தி எனவும் ஏனையவை விடுதலைப் புலிகளினுடையது எனவும் அடையாளம் காணப்பட்டன.

கட்டுநாயக்கவின் வான் பாதுகாப்பு தொகுதிகள் உடனடியாக இயங்கத் தொடங்கின. வான்படைத் தளத்தைச் சுற்றியுள்ள சுடுகலங்களும் விழிப்பு நிலைக்குட்படுத்தப்பட்டன. மின் வெளிச்சம் அணைக்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் லோறன்ஸ் பெர்னாண்டோ தலைமையிலான கொழும்பு நடவடிக்கை தலைமையகம் விழிப்பு நிலைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அனுராதபுர, வவுனியா வான்படைத் தளங்களும் விழிப்பு நிலைக்குட்படுத்தப்பட்டன.

இம்முறையும் படையினரின் ராடார் மையங்கள் தொழிற்படவில்லை, எனவே எலெக்ரோனிக் முறையில் வானத்தை அவதானிப்பது சாத்தியமற்றது. ராடாரில் வானூர்திகள் அவதானிக்கப்படவில்லை.

கும்பிகன்ட பகுதியில் இருந்த இராணுவத்தினர் ஒருவரே வானூர்தியை முதலில் கண்டார். முன்னரைப் போல் அல்லாமல் இம்முறை விடுதலைப் புலிகளின் வானூர்திகள் வெளிச்சங்களுடன் வந்தன, இது அனைத்துலக வானூர்தி நிலையத்தின் ராடார்களை குழப்பும் உத்தியாக இருக்கலாம்.

சிறிலங்கா இராணுவத்தினர் தாக்குதலை நடத்தத் தொடங்கினர்.

வான்படைத் தளத்தின் வான்பகுதி மீது தாக்குதல் செறிவானது, சில படையினர் தமது தாக்குதல் துப்பாக்கிகள் மூலமும் தாக்குதலை மேற்கொண்டனர். தொலைபேசிகள் அலறத் தொடங்கின.

வான் தாக்குதலை விடுதலைப்புலிகள் நடத்துவதாக நாடு முழுவதும் செய்திகள் பரவின.

அனைத்துலக வானூர்தி நிலையத்தையும் பீதிகள் தொற்றிக் கொண்டன. அதில் ஒரு சம்பவத்தில் பெல்ஜியத்தைச் சேர்ந்த 100 சுற்றுலாப் பயணிகள் தமது பயணத்தை முடித்து பிரசல்ஸ் வழியாக பிரான்ஸ், பாரிசுக்கு செல்வதற்காக காத்திருந்தனர்.

தாக்குதல் அச்சம் காரணமாக அவர்கள் நிலத்தில் படுத்ததுடன், மேசைகளின் கீழும் பதுங்கிக் கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் தமது தொலைபேசிகள் மூலம் சம்பவத்தை தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்ததுடன், சிலர் தாம் இனிமேல் சிறிலங்காவுக்குத் திரும்பி வரமாட்டோம் என வானூர்தி நிலைய அதிகாரிகளிடமும் தெரிவித்தனர்.

கொழும்பில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எல்லோரும் பாதுகாப்புத் தேடி ஒதுங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இது இரண்டாம் உலகப்போரை நினைவு படுத்ததுவதாக முதியோர்கள் தெரிவித்தனர்.

அதாவது ஏனைய ஈழப்போர்களை விட நாலாம் கட்ட ஈழப்போர் தென்னிலங்கை மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

அனுராதபுரம் மற்றும் கொழும்பு வான்படைத் தளங்களில் இருந்து மேலெழுந்த இரு கே-8 வானூர்திகள், விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தேடும் நடவடிக்கையை தொடங்கின. இவை இரவில் தொழிற்படும் தகமை உள்ளவை.

எனினும் அனுராதபுரத்தில் இருந்து மேலேழுந்த எம்.ஐ - 24 ரக உலங்குவாணூர்தி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீழ்ந்ததால் கடுமையாக சேதமடைந்தது.

இந்த நாடகம் 3 மணிநேரம் நீடித்தது. இந்த தாக்குதலானது கொழும்பில் விடுதலைப் புலிகள் மேலும் தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

பாலாவியில் வானூர்தியை அவதானித்த பின்னர் மீண்டும் ஒரு மணிநேரத்தில் மீண்டும் வானூர்திகள் திரும்பிச் செல்வதனை அவர்கள் அவதானித்துள்ளனர். இம்முறை அங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான மக்கள் வானூர்தியை கண்டுள்ளனர். அதன்போதும் வான்படையினர் வானூர்தியை நோக்கிச் சுட்டார்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமை பலாலி கூட்டுப்படைத் தளத்தின் மீது நடைபெற்ற விடுதலைப் புலிகளின் வான்தாக்குதலின் போதும் பலாலி வான்படைத் தளத்தில் இருந்த ராடார்களினால் வானூர்தியை கண்டறிய முடியவில்லை.

மேலும் பலாலிப் பகுதியில் வான்பறப்பில் ஈடுபட்டிருந்த கரையோர கண்காணிப்பு வானூர்தியினாலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை கண்டறிய முடியவில்லை.

இதனிடையே சிறிலங்காவின் ஆயுதப்படைகளின் வலிமையை ஆராய்ந்த அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம், அவர்களிடம் புலனாய்வு, கண்காணிப்பு, கண்டறிதல் ஆகியன தொடர்பாக பல குறைபாடுகளும் பற்றாக்குறைகளும் நிலவுவதாக தெரிவித்திருந்தனர்.

2002 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில்:

சிறிலங்கா வான்படையினரிடம் உள்ள வளங்கள் போதாது - கனரக சரக்கு வானூர்திகளின் ஸ்குவாட்ரனில் இரு ஹெக்கூல்ஸ் சி-130 வானூர்திகளும், இரு அன்ரனோவ் - 32 வானூர்திகளுமே பயன்படுத்தக்கூடியவை. - சிறிலங்காவிடம் 7 அன்ரனோவ் - 32 ரக வானூர்திகள் உள்ளன. அதற்கு உகந்த பராமரிப்பு இல்லை- வானூர்தி உதிரிப் பாகங்களின் குறைபாடுகள் உள்ளன எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும் சிறிலங்கா வான்படையினர் புதிய வானூர்திகளை கொள்வனவு செய்வது அவர்களிடம் உள்ள வானூர்திகளுக்கான உதவிகளைப் பாதிக்கக்கூடியது.

உதாரணமாக இரு மிக்-27 ரக வானூர்திகளை கொள்வனவு செய்வது கிபீர் வானூர்திகளின் ஆயுத புனரமைப்பு மற்றும் பாராமரிப்புக்களை பாதிக்கலாம்.

உயர்ந்த விலையுள்ள கடந்த ஊதா பார்வைப்புல கருவிகள் கொள்வனவு செய்யப்பட்ட போதும், இரவு பார்வைக்குரிய சாதனங்களோ அல்லது வழிகாட்டும் ஆயுதங்களோ கொள்வனவு செய்யப்படவில்லை என பல குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிகாரிகள் பின்வருவனவற்றை பரிந்துரை செய்துள்ளனர்:

- தற்போதுள்ள புலனாய்வு, கண்காணிப்பு, கண்டறிதல் வானூர்திகளை முழுமையாக இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் வரையிலும் புதிய கொள்வனவுகள் தேவையற்றது.

- தாக்குதல் நடவடிக்கைகளுக்கு தேவையான உதிரிப்பாகங்களை உடனடியாக கொள்வனவு செய்தல் வேண்டும்.

- தேவை எனில் சி-130, மிக்-27 போன்ற குறைவான வானூர்திகளை விற்பனை செய்துவிட்டு அல்லது தரையில் நிறுத்திவிட்டு அதிகளவில் உள்ள அன்ரனோவ்-32 மற்றும் கிபீர் வானூர்திகளை மறுசீரமைப்பதுடன் எம்.ஐ - 24, எம்.ஐ - 17 போன்றவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.

- புதிய தாக்குதல் உத்திகளை விருத்தி செய்தல் அதாவது இரவு பார்வைச்சாதானம், மிகவும் அண்மையிலான வானில் இருந்து வானுக்கான தாக்குதல், வானூர்தி மூலம் தரையிறங்குதல் போன்றவற்றை பெறுதல்.

- குறைந்த செலவில் தாக்குதல் உத்திகளை அதிகரித்தல்.

- புதிய வானூர்திகளை கொள்வனவு செய்வதாயின் எம்.ஐ-24 வகை உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்தல்.

ஆகியன பரிந்துரைக்கப்பட்டன.

சிறிலங்காவுக்கு வந்த அமெரிக்க குழு ஒருங்கிணைக்கப்பட்ட ஆயுதக்குழு, கடற்படைக் குழு, வான்படைக்குழு, சிறிய அளவில் உத்திகளை வகுக்கும் குழு என நான்கு குழுக்களாக பிரிந்து ஆய்வுகளை நடத்தியிருந்தனர்.

இந்த அறிக்கை கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களான மிலிந்த மொறகொட, ஒஸ்ரின் பெர்னான்டோ ஆகியோரிடமும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமும் கையளக்கப்பட்டன. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவிடமும், சந்திரிகாவிடமும் சமர்ப்பிக்கப்படவில்லை.

தற்போது மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் உள்ள மிலிந்த மொறகொட அந்த அறிக்கையை பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளார். ஆனால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட மூலப்பிரதியை மகிந்த அரசாங்கத்தினால் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்று இக்பால் அத்தாஸ் எழுதியுள்ளார்.

எமிரேட்ஸ் விமானத்தை நோக்கியும் தாக்குதல்! சேவை இடைநிறுத்தம்!

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007]

நேற்று அதிகாலை விடுதலைப் புலிகளின் வான்படை விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்திய சிறிது நேரத்தில் கொழும்பு வான் பிராந்தியத்தைக் கடந்து சென்ற எமிரேட்ஸ் விமானசேவை நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று பாதுகாப்புத் தரப்பினரைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

வழமைக்கு மாறான மார்க்கத்தில் பறந்துகொண்டிருந்த இந்த வெளிநாட்டு விமானத்தின் மீதும் தரையில் இருந்து சிறிதுநேரம் தாக்குதல் நடத்தப்பட்டது. எதிரி விமானம் எனக் கருதி இந்த விமானத்தை நோக்கியும் குண்டுகள் ஏவப்பட்டன. வான்பரப்பில் நடக்கும் சம்பவங்களை வியப்புடனும் பீதியுடனும் அவதானித்துக் கொண்டிருந்த நகர மக்கள் இந்த வெளிநாட்டு விமானத்தை நோக்கி ஏவப்பட்ட குண்டுகள் பிரகாசத்துடன் சென்று வெடிப்பதையும் கண்டனர். எனினும் அந்த விமானம் வானில் மிக உயரத்தில் பறந்துகொண்டிருந்ததால் தாக்குதலுக்கு இலக்காகவில்லை என்று கூறப்படுகிறது.

எமிரேட்ஸ் விமானசேவை நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்றின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கட்டுநாயக்கா விமான நிலையத்தை நோக்கி வரும் வழியில் இடை நடுவில் இந்த விமானம் சென்னைக்குத் திசை திருப்பப்பட்டது. அவ்வாறு திரும்பிச் செல்லும் வழியிலேயே அது வான் பாதுகாப்புத் தாக்குதலில் சிக்கியது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக எமிரேட்ஸ்விமான நிறுவனம் இலங்கைக்கான தனது சேவைகளை உடனடியாக இடைநிறுத்தியிருக்கிறது.

இத்தாக்குதல் தொடர்பாக சம்பந்தப்பட்ட வெளிநாட்டு விமானத்தின் விமானி பின்னர் கட்டுநாயக்கா விமான நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கிறார்

இலங்கை விவகாரத்தில் இந்தியா விரைவில் தீர்க்கமான முடிவெடுக்கும் வழிவகைகளை பரிசீலிக்கிறது புதுடில்லி.

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007]

இலங்கை இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ள இருதரப்பினரும் போர் மூலமே முடிவு காண்பது என்ற தீர்மானத்துக்கு வந்துள்ள இன்றைய இருள் சூழ்ந்த காலகட்டத்தில் என்ன விதமான நடவடிக்கையில் தான் இறங்க முடியும் என்பது பற்றி மிக விரைவில் இந்திய அரசு ஒரு முடிவுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பல்வேறு விதமான யோசனைகள் தற்பொழுது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு புதுடில்லிச் செய்தி வட்டாரங்கள் தகவல்வெளியிட்டிருக்கின்றன.

இனப்பிரச்சினை விரிவடைந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் வெகுவாகப் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதில் இந்தியா அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.

2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட இலங்கை இன முரண்பாட்டினால் ஆயிரக்கணக்கானோர் வீடுவாசல்களை இழந்து அகதிகளாகியுள்ளனர். இந்த நிலையில் இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை ஒரு தீர்வாக அமையமாட்டாது என்பதில் இந்தியாவின் உயர்மட்ட சிந்தனையாளர்கள் தீர்க்கமாகவுள்ளனர்.

கஷ்டங்களுக்குள்ளாகும் மக்களின் பெரும்பாலும் தமிழ் மக்களின் துன்ப துயரங்கள் இந்திய அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விடயத்தில் இந்திய அரசு இலங்கை அரசுடன் அடிக்கடி தொடர்புகொண்டு வந்துள்ளது.

எமக்கென்ற சில கருத்துகள் உண்டு, கவலைகள் உண்டு. அவைகளை இலங்கை அரசுக்குத் தெரிவித்து வந்துள்ளோம். என்றவாறு இந்திய உயர்மட்ட பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர்ந்த ஏனைய தரப்புகளுடன் இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டிருப்பதாகவும் தெரியவருகின்றது. இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியா இன்னும் அதிக முனைப்புடன் செயற்படவேண்டும் என்ற கருத்து இங்கு நிலவுகின்றது.

இதேவேளை இலங்கை மலையகத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் நிறைந்துள்ள பகுதிகளில் வளர்ச்சித்திட்டங்களை முன்னெடுப்பது பற்றியும் இந்திய அரசு ஆலோசிப்பதாகத் தெரிகின்றது.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவு செயலாளர் ஷியாம் சரண், வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மக்களின் நலன்களிலும் மேம்பாட்டிலும் இந்தியாவுக்கு நெருக்கமாக அக்கறை உண்டு என்று தெரிவித்தார்.

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் நோர்வே அனுசரணையில் செய்துகொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்பாடு மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில், அடுத்து என்ன? என்பதே இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் சிந்தனையை இப்போது குடைந்து கொண்டிருக்கும் கேள்வி.

இலங்கைவாழ் தமிழர்களில் பெரும்பாலானவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றே பேச்சுகள் மூலமான ஒரு இறுதித் தீர்வினைக் கொண்டுவரமுடியும் என்றும் இந்தியா கருதுகின்றது. இவ்வாறு புதுடில்லி செய்திகள் தெரிவித்தன.

[uthayan.com]

Sunday, April 29, 2007

கொழும்பில் இரு இலக்குகள் மீது வான்புலிகள் தாக்குதல்.

[ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2007]

சிறிலங்காவின் கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், முத்துராஜவெல எண்ணெய்க்குதம் ஆகியவை மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் தாக்குதல் நடத்திவிட்டு வெற்றிகரமாக தளம் திரும்பி விட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இரு பகுதிகளிலும் தீச்சுவாலை கொளுந்துவிட்டு எரிவதனை வானோடிகள் கண்ணுற்றதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வான்புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த துணிகரத்தாக்குதலை நடத்தி இரண்டு பெரும் எரிபொருள் களஞ்சியங்களை தாக்கிவிட்டு வெற்றிகரமாகத் தளம் திரும்பியுள்ளன.
சிறிலங்கா வான்படை வானூர்திகளுக்கு எரிபொருளை வழங்கும் களஞ்சியமான கொல்லனாவ பெற்றோலிய எரிபொருள் களஞ்சியமும், முத்துராஜவல எரிபொருள் மற்றும் எரிவாயு களஞ்சியமும் வான்புலிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி சேதமாகியுள்ளன.
கிளிநொச்சி மீது சிறிலங்கா வான்படையின் மிக் ரக வானூர்திகள் இன்று அதிகாலை பரா வெளிச்சக்குண்டுகளை வீசி குண்டுத்தாக்குதலை நடத்திச் சென்ற 1 மணிநேரத்தில் வான்புலிகளின் வானூர்திகள் கொழும்புக்குச் சென்று அதிமுக்கிய பெற்றோலிய எரிபொருள் களஞ்சியங்கள் மீது குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்திவிட்டு தளம் திரும்பிவிட்டன.

வான்புலிகள் தொடர்பாக முழுமையான விழிப்பில் சிறிலங்கா படைத்தரப்பு இருக்கின்ற நிலையில் வான்புலிகளின் வானூர்திகள் சிறிலங்கா தலைநகர் கொழும்பின் மையத்தில் தாக்குதலை நடத்தி தளம் திரும்பியிருக்கின்றன.

கொழும்பில் தமிழீழ வான்படையினர் தாக்கியதை விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் உறுதிப்படுத்திய அதேசமயம் விமானங்கள் பாதுகாப்பாக தளம்திரும்பியதாக கூறியுள்ளார்.

எரிவாயுக் குதங்கள் தீப்பற்றி எரிகின்றன

[ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2007, ] கொழும்பின் வடபுலத்தில் உள்ள வத்தளை கெரவெல்பிட்டிய பகுதியில் அமைந்திருக்கும், எரிபொருள் - எரிவாயுக் குதங்களில் பாரிய வெடியதிர்வுகள் ஏற்பட்டு தீப்பற்றியுள்ளன. கெரவெல்பிட்டிய பகுதியில் உள்ள மூன்று எரிபொருள் - எரிவாயுக் குதங்கள், தற்போது தீப்பற்றி எரிவதாக கூறப்படுகின்றது. இதேபோன்று முத்துராஜவெல பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றும், தீப்பற்றி எரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வான்வழித் தாக்குதல்கள் காரணமாக இவை வெடித்து தீப்பற்றிய இருக்கலாம் என, உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. இதனிடையே, இன்று அதிகாலை 1:45 மணிக்கு, கட்டுநாயக்கா வான்படை தளத்தின் ராடர் திரையில், வடக்கின் திசையில் இருந்து தெற்கை நோக்கி இரண்டு விமானங்கள் பறப்பில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கட்டுநாயக்கா - ரத்மலானை ஆகிய வான்படை தளங்களில் இருந்தும், கொழும்பு துறைமுக கடற்படை தளத்தில் இருந்தும், கொழும்பு மத்தி, வத்தளை, நீர்கொழும்பு மத்தி, கொலன்னாவ, கெலனி திஸ்ஸ, ராஜகிரிய, முத்துராஜவெல ஆகிய பகுதிகளில் இருந்தும், வான்பரப்பை நோக்கி சிறீலங்கா படைகளால் தொடர்ச்சியாக துப்பாக்கி வேட்டுக்களும், ரேசர் வேட்டுக்களும் தீர்க்கப்பட்டு, பரா வெளிச்சக் குண்டுகளும் ஏவப்பட்டுள்ளன. அதிகாலை 2:25 மணியளவில் ஓய்ந்த துப்பாக்கி வேட்டொலிகள், மீளவும் அதிகாலை 3:05 மணி முதல் செவிமடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக, கொழும்புக்கான மின்சார இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டு, நகரம் இருளில் மூழ்கியுள்ளது. இதனால், மேற்கிந்திய தீவுகளில் அவுஸ்திரேலிய - சிறீலங்கா துடுப்பெடுத்தாட்ட அணிகளுக்கு மத்தியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும், உலகக் கிண்ண துடுப்பெடுத்தாட்டப் போட்டிகளின் இறுதிச் சுற்றை, தொலைக்காட்சியில் கண்டுகளிக்க முடியாது, கொழும்பில் உள்ள சிங்களவர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனிடையே கொழும்பில் குழப்பநிலை ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், வன்னியில் சிறீலங்கா வான்படையின் யுத்த விமானங்கள், வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி விட்டு, தெற்கு நோக்கி பறப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. நன்றி:பதிவு

Saturday, April 28, 2007

கொழும்பில் மின்சாரம் துண்டிப்பு - விமானப்படையினர் வான்நோக்கி தாக்குதல்

[சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2007] உலகக் கிண்ணத்துக்காக சிறிலங்காவுக்கும், அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டியை சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள மக்கள் பார்த்துக்கொண்டிருந்த வேளை இருளில் மூழ்கியுள்ளது. கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.10 மணியளவில் விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல் அச்சம் காரணமாக சிறிலங்காப் படையினர் தமது நிலைகளில் இருந்து வானத்தை நோக்கி கடுமையான துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர். இரத்மலானை, வத்தளை, நீர்கோழும்பு, கொலன்னாவ, இராஜகிரிய பகுதிகளில் இருந்து ரேசர் ரக குண்டுகளின் மூலம் வானத்தை நோக்கி சரசமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன, சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வான்படையினரின் ரடார் திரைகளில் வானூர்தி ஒன்று அவதானிக்கப்பட்டதனைத் தொடர்ந்து படையினர் விழிப்பு நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர். எனினும் குண்டுச் சத்தங்களையும், துப்பாக்கிச் சத்தங்களையும் தாம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். என்னால் துப்பாக்கிச் சத்தங்களை கேட்க முடிந்தது, வெளிச்சங்கள் வானை நோக்கி ஏவப்படுவதையும் பார்த்தேன் என பொதுமகன் ஒருவர் ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். மேலும் இரு குண்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் அதனை தொடர்ந்து நகரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே தமது ராடார் திரைகளில் வானூர்தி ஒன்று அவதானிகள்கப்பட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர். தமது வானூர்தி எதிர்ப்பு சாதனங்கள் இயக்கப்பட்டதாகவும், தாம் தேடுதலை நடத்துவதாகவும் சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் உள்ள பயணிகளை வானூர்திகளில் இருந்து இறங்குமாறு பணிக்கப்பட்டதாகவும் எனினும் பின்னர் ஏற அனுமதிக்கப்பட்டதாகவும் ரொய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி 10 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் வத்தளைப் பகுதியில் உள்ள ஹெரவெளப்பிட்டிய எண்ணய் மற்றும் எரிவாயு சேமிப்புத் தாங்கிகள் உள்ள பகுதிகள் வான் புலிகளால் தாக்கப்பட்டதாகவும், மூன்று எண்ணெய்த் தாங்கிகள் தீப்பற்றி எரிவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக காவல்துறைத் தலைவருக்கு பழ. நெடுமாறன் கண்டனம்.

[சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2007]

தமிழக காவல்துறைத் தலைவர் குற்றம் சாட்டுபவராகவும், அதேவேளையில் நீதிபதியாகவும் இருந்து தீர்ப்புச் சொல்பவராகவும் மாறியுள்ளார். இந்த அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது? எனக் கேள்வி எழுப்பி உள்ளார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்.

தமிழக காவல்துறைத் தலைவர் முகர்ஜி, தமிழக மீனவர்களைச் சுட்டது விடுதலைப் புலிகள் என்றும், காணமல் போன 12 மீனவர்கள் விடுதலைப் புலிகளின் காவலில் உள்ளனர் என்றும் நேற்று திடீரென வெளியிட்டுள்ள அறிக்கையை கண்டித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே பழ. நெடுமாறன் மேற்கண்டவாறு கேள்வியை எழுப்பி உள்ளார்.

பழ. நெடுமாறன் அவர்களது அறிக்கையின் முழு விபரமாவது:

தமிழக மீனவர்களைச் சுட்டது விடுதலைப் புலிகள் என்றும் காணமல் போன 12 மீனவர்கள் விடுதலைப் புலிகளின் காவலில் உள்ளனர் என்றும் தமிழக காவல்துறைத் தலைவர் முகர்ஜி திடீரென அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

குற்றம் சாட்டுவதும் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதும்தான் காவல்துறையின் வேலையாகும். குற்றச்சாட்டுக்கள் மெய்ப்பிக்கப்பட்டால் உரிய தண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் வேலையாகும். ஆனால் தமிழகக் காவல்துறைத் தலைவர் குற்றம் சாட்டுபவராகவும், அதேவேளையில் நீதிபதியாகவும் இருந்து தீர்ப்புச் சொல்பவராகவும் மாறியுள்ளார். இந்த அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது?

தமிழக மீனவர்களைத் தொடர்ந்து சிங்களக் கடற்படையினர் சுட்டுக்கொன்று வருகிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மையாகும். குமரி மாவட்ட மீனவர்களை சுட்டுக்கொன்றவர்கள் சிங்களர்கள்தான் என்பதை உயிர்தப்பிப்பிழைத்த மீனவர்கள் அளித்த வாக்குமூலங்களிலும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிகளிலும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்கள்.

ஏப்ரல் 12 ஆம் திகதியன்று இந்தியக் கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் படகில் வந்த 6 சிங்களவர்களை கடலோரக் காவல் படையினர் கைது செய்ததாகவும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் தமிழகத்தின் அனைத்துப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏப்ரல் 13 ஆம் தேதியன்று இந்த 6 சிங்களவர்களும் விசாரணைக்காக கியூ பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்களென்று தமிழக அரசு வெளியிட்டுள்ள பத்திரிகைக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது திடீரென அந்த 6 பேரும் விடுதலைப் புலிகள் என்று காவல்துறைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். எது உண்மை? எதையோ மூடிமறைக்க யாரையோ காப்பாற்ற காவல்துறைத் தலைவரைப் பயன்படுத்துவது அந்தப் பதவிக்கே இழுக்கைத் தேடித்தருவதாகும். குமரி மாவட்ட மீனவர்கள் தங்களைச் சுட்டது சிங்களவர்கள்தான் எனத் திட்டவட்டமாக அறிவித்து அதற்காகப் போராட்டங்களை நடத்திவரும் சூழலில் பிரச்சினையைத் திசை திருப்ப முயற்சி நடைபெறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழ்நாட்டு மீனவர்கள் யாரையும் விடுதலைப் புலிகள் சுட்டதாகவோ, சிறைப்பிடித்ததாகவோ இதுவரை புகார்கள் எழுந்தது இல்லை. சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலைப் புலிகள் போராடி மீட்டு பத்திரமாக தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்களே தவிர, அவர்கள் ஒருபோதும் தீங்கிழைத்தது இல்லை.

தமிழக மீனவர்களே கூறாத ஒரு குற்றச்சாட்டை திடீரென காவல்துறைத் தலைவர் கூறுவது ஏன்?
சிங்களக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்றத் திட்டத்திற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுவிட்டக் காரணத்தினால் இப்படியொரு பொய்யானச் செய்தியைப் பரப்பி கூட்டுரோந்து நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக காவல்துறைத் தலைவர் இந்த அறிக்கை வெளியிட்டுப்பட்டிருப்பதாக நான் குற்றம் சாட்டுகிறேன்.

வான்புலிகளின் சாதனைகளைக் கண்டு உலகமே வியந்து பாராட்டும் இந்த கட்டத்தில் புலிகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் குற்றம்சாட்டி தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கை அழிப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது. இந்த முயற்சிக்கு காவல்துறைத் தலைவர் ஒத்துழைப்பது என்பது மிகத் தவறான முன் உதாரணமாகும். வரம்பு மீறி செயல்பட்டிருக்கும் காவல்துறைத் தலைவரை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நன்றி:புதினம்

விமானப்படையினர் தேவையற்ற பதற்றத்தை உண்டாக்கினர் எனக் கூறுவது ஏற்புடையதல்ல ஊடகத்துறை அமைச்சர் நியாயப்படுத்துகிறார்

[சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2007] விமானப்படையினர் தேவையற்ற விதத்தில் பதற்றத்தை உண்டாக்கிவிட்டனர் என்று குற்றஞ்சுமத்துவது ஏற்புடையதல்ல. அவ்வாறு குறைசொல்வோர் ஒன்றை மறந்துவிட்டனர். சேதம் ஒன்று விளைவிக்கப்பட்டிருந் தால் அதனால் உண்டாகியிருக்கக் கூடிய அழிவின் பெறுமதிக்கு இத்தகைய குற்றச்சாட்டுக்கள் வெறும் துரும்பு போன்றவை. கட்டுநாயக்கா விமானத் தளப் படை அதி காரிகளின் (வியாழக்கிழமை) நடவடிக்கை குறித்து பிரஸ்தாபித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் ஊடக அமைச்சர் லக்மன் யப்பா அபேவர்த்தனா. கட்டுநாயக்கா விமானத் தளத்தை நோக்கி சந்தேகத்துக்கு இடமான விமான மொன்று வருவதாகக் கிடைத்த சமிக்ஞைகளை வைத்து, விமானப் படை யினர் எதிர்ப்பு தடுப்பு நடவ டிக்கையாக நடத்திய தாக்குதல் குறித்து விளக்க மளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு சொன்னார். தகவல் திணைக் களத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தி யாளர் மாநாட்டில் வைத்தே மேற் கண்டவாறு அமைச்சர் கூறினார். * விமானப் படையினரின் கடமை உணர் வுடனான நடவடிக்கை, அன்று நிகழ்ந்திருக் கக்கூடிய பாதகமான பாதிப்புகளைத் தவிர்த்தது. * கிடைத்த தகவல் முற்றிலும் நம்பகர மானது. புத்தளம் பாலாவியில் உள்ள காவலரண் ஒன்றி லிருந்தே சந்தேகத் துக் குரிய விமானம் பற்றி தகவல் கிடைத் தது.நம்பத்தகுந்த தகவல் கிடைக்கும் போது, உடனடி யாக நடவடிக்கை யில் ஈடுபடுவதே ஒழுக்கம் நிறைந்த அமைப்பு ஒன்றின் கடமையாகும். * சந்தேகத்துக்கு இடமான விமானம் தாக்குதல் நடத்தாமல் தடுப்பதற் கான நடவடிக் கைகள் உடன் மேற்கொள்ளப்பட்டன. கட்டுநாயக்கா விமானத் தளத்திலிருந்து தெரியக்கூடிய தூரத்தில் எந்த விமானத் தின் நடமாட்டமும் கண்டறியப்பட வில்லை. 45 நிமிட நேரத்தில் நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட் டது. * விமானப் படை அப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருக்காவிடில் முன்னைச்சரிக் கையாகத் தகவல் கிடைத்தும் தடுப்பு நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில் லையே என்று மக்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பியிருப்பர். இவ்வாறு வியாழக்கிழமையின் விமா னப் படை நடவடிக்கைகளை பல கோணங் களில் ஆதரித்துக் கருத்து வெளியிட்டார் அமைச்சர் அபேவர்த்தன யாப்பா.

சிறீலங்கா அரசின் அச்சுறுத்தலுக்கு பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்கொட் அடிபணிந்து, அரசிற்கு சார்பு நிலை எடுக்க முனைவதாக, கொழும்பிலுள்ள ஆய்வாளர் ஒரு

[virakesari.lk]

மேற்கிந்தியத் தீவுகளில் இன்று நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிறிக்கட் போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் சிறீலங்கா அணிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில், சிங்கங்களே சீறி எழுங்கள் என சிறீலங்காவிற்கான பிரித்தானியத் தூதர் நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அத்துடன், தூதரக பணியாளர்களுடன் இணைந்து பிரித்தானிய, மற்றும் சிறீலங்கா கொடிகளைத் தாங்கியவாறும், சிறீலங்கா கிறிக்கட் அணியின் உடையை அணிந்து, துடுப்பாட்ட மட்டையை கையில் ஏந்திவாறும் காட்சியளிக்கும் நிழற்படம் ஒன்றையும் பிரித்தானியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ளது.

சிறீலங்கா பாதுகாப்பு செயலாளரால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் அச்சுறுத்தப்பட்ட பின்னர், டெய்லி மிரர் பத்திரிகை காரியாலயத்திற்கு நேரில் சென்ற பிரித்தானியத் தூதுவர் தனது கரிசனையை வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பிரித்தானியர் தூதுவரை அவசரமாக அழைத்த சிறீலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, அவரை அச்சுறுத்தும் தொனியில் கலந்துரையாடியதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.

இவ்வாறான சம்பங்களால் பிரித்தானிய, மற்றும் ஜேர்மனி தூதுவர்கள் உள்நாட்டு விடயங்களில் தலையிடுவதாகத் தெரிவித்து, இந்த தூதுவர்கள் நாடு கடத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியதன் பின்னணியில், பிரித்தானியத் தூதுவர் மொமினிக் சில்கொட்டின் நேற்றைய வாழ்த்துச் செய்தி வெளியாகி இருப்பதை அந்த ஆய்வாளர் சுட்டிக்காட்டினார்.

பிரித்தானியத் தூதுவர் மொமினிக் சில்கொட் கடந்த ஆண்டு வழங்கிய செவ்வி ஒன்றில் 1948ஆம் ஆண்டு பிரித்தானிய அரசிடமிருந்து சிறீலங்கா சுதந்திரம் பெற்றபோது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்புமுறை சிறுபான்மை மக்களாகிய தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறி இருப்பதாகக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்பொழுது சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கக் கொடியைத் தாங்கியவாறு பிரித்தானியத் தூதுவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி, அவரது நிலைப்பாடு தொடர்பாக கேள்வி எழுப்பி இருப்பதாகவும், கொழும்பின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்காப் படைகள் வான் தாக்குதலை முறியடிக்கும் சுடுதிறணை இழந்துள்ளது.!!


சிறீலங்காப் படையினரிடம் வான்புலிகளின் விமானங்களைத் தாக்கியழிக்கும் ஏவுகணைகள் இல்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வான்புலிகளின் தாக்குதலிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள 14 MM கனோன் ரக விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மற்றும் 23 MM கனோன் ரக விமான எதிர்ப்பு துப்பாக்கிகளே பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இத்தகைய விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை வைத்து வான்புலிகளின் விமானங்களை சுட்டுவீழத்த முடியாது. அத்துடன் யுத்த விமானங்களைப் பயன்படுத்தி விமானங்களைத் தாக்கியழிக்கும் அனுபவமும் சிறீலங்காப் விமானப் படையினருக்கு இல்லாத நிலையில் சிறீலங்கா படைகள் வான்புலிகளின் விமானங்களைச் சுட்டுவீழத்தும் சுடுதிறணை இழந்துள்ளது என இராணுவ ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்காவின் அனைத்து கேந்திர முக்கியத்துவம் வாயந்த இடங்களில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை சிறீலங்கா பொருத்த முற்படுமானால் சிறீலங்காவின் பாதுகாப்புச் செலவீனம் இரட்டிக்கப்பட்டு பொருளாதாரமே படுபாதளத்தினுள் விழும் என இராணுவ ஆய்வாளர்கள் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கருணா ஒட்டுக்குழு சிறுவர்களை விடுதலை செய்ய வேண்டும் - புனிசெஃப்


கிழக்கில் கட்டாயமாக படையில் இணைக்கப்பட்ட சிறுவர்களை விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கருணா ஒட்டுக்குழு கவனத்தில் கொள்ளத் தவறி இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு நிதியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் கொழும்புப் பேச்சாளர் அன்றூ புறுர்க்ஸ், தமது அமைப்பின் பிரதிநிதிகள் கருணா ஒட்டுக் குழுவின் முகாம்களுக்குச் செல்வதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

சிறீலங்கா அரச படைகளுடன் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயற்பட்டுவரும் கருணா ஒட்டுக் குழுவினர், சிறுவர்களைப் படையில் இணைப்பதாக, தாம் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களையும் மறுத்து வருவதாக, புறுர்க்ஸ் கூறினார்.

Friday, April 27, 2007

தமிழீழ வான்படை எமது தேசத்திற்கான ஒரு அங்கீகாரமாகும்: இராசையா இளந்திரையன்

[வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டுள்ள தமிழீழ வான்படையானது தமது தேசத்தின் முழுமையான கட்டமைப்பிற்கும் அதன் மீதான அனைத்துலகத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கும் உதவும் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து வெளியாகும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் என்ற ஆங்கில ஊடகத்திற்கு தொலைபேசியூடாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல் அரசியல், இராணுவ, இராஜதந்திர மட்டங்களில் புதிய எதிர்வுகூறல்களை ஏற்படுத்தியுள்ளது.

எங்களிடம் நிலப்பரப்பு, நிர்வாகம், சட்டம், நீதித்துறை, காவல்துறை, இராணுவம், கடற்படை என்பன இருந்தன. தற்போது வான்படையும் உள்ளது. நாங்கள் தற்போது ஒரு முழுமையான நாட்டுக்குரிய தகமைகளைக் கொண்டுள்ளோம்.

எமது கடற்புலிகள் கண்ட வளர்ச்சியைப் போல எமது வான்படையும் வளர்ச்சி அடையும்.

கடற்புலிகள் ஒரு சில படகுகளுடன் மிகச் சிறு குழுவாகவே தோற்றம் பெற்றிருந்தனர். ஆனால் இன்று அவர்கள் கடலின் ஒரு பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். எனவே எமது வான்படையும் வளர்ச்சி அடையும் என்றார் அவர்.

விடுதலைப் புலிகள், தமது வான்படை வானூர்திகள் மூலம் சிறிலங்காவின் தென்பகுதியிலும், வடபோர்முனையிலும் மிக உயாந்த பாதுகாப்புக்களை கொண்ட தளங்களின் மீது ஒரு மாதத்தில் இரு தடவைகள் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளனர்.

வான்புலிகளின் விமானத்தைச் தாக்கச் சென்ற எம்.ஜ.24 ரக யுத்த உலங்கு வானூர்தி விபத்துக் குள்ளாகியது.!!

[வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2007]
தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை வழிமறித்து தாக்குவதற்குச் சென்ற சிறிலங்கா வான்படையினருக்குச் சொந்தமான எம்.ஐ-24 ரக உலங்கு வானூர்தி அவசர, அவரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்துக்கு அருகில் உள்ள வான்படைத்தளத்தை நோக்கி விடுதலைப் புலிகளின் மூன்று வானூர்திகள் புத்தளம் கடற்பகுதியால் செல்வதாக சிறிலங்காப் படையினருக்கு மக்கள் அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த வானூர்திகளை தாக்க என அனுராதபுர வான்படைத்தளத்தில் இருந்து நேற்று வியாழக்கிழமை இரவு 11.50 மணிக்கு புறப்பட்ட எம்.ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் உலங்கு வானூர்தியின் இரு வானோடிகளும் பாதுகாப்பாக உள்ளதாக சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ள போதும், உலங்கு வானூர்திக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அவர் மேலதிக தகவல் எதனையும் தெரிவிக்கவில்லை.

கொழும்பு ஊடகமொன்றின் தகவலின் படி, கட்டுநாயக்க வான்படைத்தளத்தின் மீது தாக்குதல்கள் நடத்த வந்ததாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் இலகு ரக வானூர்திகளின் மீது எதிர்த்தாக்குதல் நடத்த புறப்பட்ட உலங்கு வானூர்தி வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதாகவும், உலங்கு வானூர்திக்கும் அதில் இருந்த வானோடிகளுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகல்கள் தெரிவிப்பதாக அது தெரிவித்துள்ளது.

Thursday, April 26, 2007

வான்புலிகளின் விமானங்கள் என்ற பீதியில் படையினர் வான்நோக்கித் தாக்குதல்.!!

[வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2007] புத்தள கடற்கரைப் பகுதியில் மூன்று விமானங்களை சிங்கள மீனவர்கள் அவதானிப்பட்டதையடுத்து சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளளது. வான்புலிகளின் விமானங்கள் என அச்சமடைந்த சிறீலங்காப் விமானப் படையினர், கட்டுநாயக்க விமானத் தளத்தில் அனைத்து மின் விளங்குகளும் உடன் துண்டித்து படையினர் வான்நோக்கி படையினர் கனரக அயுதங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று இரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விமானத் தளத்தில் சிறீலங்காப் படையினரின் பயப் பீதி காரணமாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி வேட்டுக்கள் மற்றும் வெடியோசைகளால் கட்டுநாயக்க விமானத் தளமே அதிர்ந்துபோனது. இதனால் கட்டுநாயக்க விமானத் தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அனைவரும் முதலில் நம்பினர். கட்டுநாயக்க விமானத்தளத்ததில் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சிறீலங்கா விமானப் படையினர் தெரிவிக்கையில் ..... இன்றிரவு 10.45 மணியளவில் சந்தேகத்திற்கு இடமான விமானங்கள் பறந்ததை அவதானித்ததையிட்டு சிறீலங்கா விமானப் படையினர் விமான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் நின்ற பயணிகள் பதற்றம் அடைந்து மின்சாரங்கள் துண்டிக்கப்பட்டு பயணங்கள் யாவும் நிறுத்பட்டிருந்தது. தற்போது அனைத்தும் நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்பியுள்ளதாக சிறீலங்கா விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் வான்பலம் அழித்தொழிக்கப்படும் -விமானப் படையினர் சூளுரைப்பு. !!

[வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2007]

விடுதலைப் புலிகளின் வான் பலத்தை அழித்தொழிக்கப் போவதாக விமானப் படையினர் சூளுரைத்துள்ளனர்.

பலாலி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானப் படை தாக்குதலை நடத்திய மறுநாள், புலிகளின் வான் பலத்தை அழிக்கப் போவதாக விமானப் படையினர் சூளுரைத்துள்ளனர்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு சூளுரைக்கப்பட்டுள்ளது.

பலாலியில் புலிகள் நடத்திய தாக்குதலுக்கு அவர்கள் ஒரு விமானத்தையே பயன்படுத்தியதாகவும் புலிகள் கூறியது போல் இரு விமானங்கள் அங்கு தாக்குதல் நடத்த வரவில்லையென்றும் செய்தியாளர்களிடம் விமானப் படை பேச்சாளர் குறூப் கப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், புலிகளது இந்த விமானம் அப்பகுதியில் சுமார் எட்டு நிமிடங்களே பறந்ததாகவும் தெரிவித்தார்.

புலிகளின் விமானத்தை நோக்கி தரைப் படையினர் தாக்குதல்களைத் தொடுத்ததால் அந்த விமானத்திற்கு சேதங்கள் ஏற்பட்டிருக்கலாமெனவும் எனினும் அந்த விமானத்தை தரைப்படையினரால் சுட்டு வீழ்த்த முடியாது போய்விட்டதாகவும் கூறினார்.

விடுதலைப் புலிகள் வசமுள்ள விமானங்களை அழிப்பதே தற்போது தங்கள் அதி முன்னுரிமையான திட்டமெனவும் தெரிவித்தார். இதேநேரம் இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அஜந்த டி சில்வாவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவும் கூறுகையில்;

வானில் தாழப் பறந்து தாக்குதல் நடத்த வரும் புலிகளின் விமானங்களை தாக்கி அழிக்க புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாக இராணுவ மற்றும் விமானப் படை பேச்சாளர்கள் தெரிவித்தனர்.

ராடரில் சிக்காமல் தாழப் பறந்து வந்து தாக்கிவிட்டு திரும்பிச் செல்லும் புலிகளின் வான் நடவடிக்கைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

அதற்கான வியூகங்கள், ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த இரகசியங்களை வெளியிட முடியாது.

ராடரில் சிக்காது தாழப் பறக்கும் விமானங்களை கண்டறிந்து சுட்டு வீழ்த்த வான் படை புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தவுள்ளது.

இத் தொழில்நுட்பத்தை மீறி இனிமேல் புலிகளின் விமானங்கள் பறக்க முடியாது. புலிகளின் விமானமொன்று பலாலி படைத் தலைமையகத்தை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை பலாலி விமானத் தளத்தை தாக்கும் நோக்குடன் புலிகளின் சிறிய விமானமொன்று வருவது தெரிய வந்ததும், படையினர் உஷாரடைந்து அந்த விமானத்தை நோக்கி தாக்குதல் தொடுத்தனர். அதனால் அவர்களின் நோக்கம் நிறைவேறாது போகவே அந்த விமானம் தப்பிச் சென்றுள்ளது.

பலாலி விமானப் படைத்தளமுள்ள பாதுகாப்புப் பகுதிக்குக் கூட வர முடியாமல் போன அந்த விமானத்தினால் எவ்வாறு பலாலித் தளம் மீது தாக்க முடியும்?

பின்வாங்கிச் சென்ற போது அந்த விமானத்திலிருந்து மயிலிட்டி பகுதியில் 3 குண்டுகள் வீசப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு, வீடுகள் மீதும் ஒன்று வீதியிலும் வீழ்ந்து வெடித்துள்ளன.

பூநகரியிலிருந்து ஏவப்பட்ட மோட்டார் குண்டுகள் வீழ்ந்தே படையினர் 6 பேர் பலியாகினர்.

இச்சம்பவம் நடந்த போது அந்த வான் பரப்பில் ஆளில்லா கண்காணிப்பு விமானமொன்று பறந்ததுடன் அதன் மூலம் கிடைத்த தகவலின்படி பூநகரி மோட்டார் ஏவுதளம் அழிக்கப்பட்டது.

புலிகளின் விமானம் 200 மீற்றர் உயரத்தில் 8 நிமிட நேரம் மட்டுமே பறந்துள்ளது. அதனால், அதனை சுட்டு வீழ்த்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. முதலில் முகமாலைப் பகுதியில் கேட்ட சத்தம் மூலம் மர்ம விமானம் தொடர்பாக தகவல் பலாலி விமானத்தலைமையகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. அந்த விமானம் கடலோர வழியாக பறந்து வந்து பின் கடல் வழியாக விடத்தல்தீவுப் பக்கமாக தப்பிச் சென்று விட்டதாகவும் தெரிவித்தனர்.

கொழும்பில் ஈ.பி.டி.பி ஒட்டுக் குழுவினர் பணப்பறிப்பு.!!!

[வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2007]

வடக்கு - கிழக்கிலும், கொழும்பிலும் வர்த்தகர்களிடம் பணப் பறிப்பில் ஈடுபட்டுவந்த ஒட்டுக் குழுக்கள் தற்பொழுது வீதியால் செல்லும் பொதுமக்களிடமும் பணப் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

கொழும்பு வெள்ளவத்தை போன்ற தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் வீதியோரங்களில் நிற்கும் ஈ.பி.டி.பி போன்ற ஒட்டுக் குழு உறுப்பினர்கள், வீதியால் செல்லும் தமிழ் மக்களிடம் பணப் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கொழும்பிலுள்ள தமிழர்கள் தற்பொழுது வீதிகளில் நடமாடுவதற்கு அஞ்சி, வீடுகளில் முடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பிலுள்ள வர்த்தகர்களைத் தொடர்ச்சியாகக் கடத்திச் செல்லும், புளொட், ஈ.பி.டி.பி, மற்றும் கருணா ஒட்டுக் குழுவினர் கப்பம் அறவிட்டு வருகின்றனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு விநியோகம் தற்போதும் பெரும் நெருக்கடியில் உள்ளது: ஐ.நா.

[வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2007]

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள 140,000 மக்களுக்கான உணவு விநியோகத்தில் ஒரளவு முன்னேற்றம் ஏற்பட்ட போதும், முழு அளவிலான உணவுத் தேவைகைளை எட்டுவதற்கு அரசாங்க அதிகாரிகளும், உதவி நிறுவனங்களும் முயற்சி எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ள மக்களுக்கான உணவு விநியோகத்தை சீர்செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ள 18,000 மக்களுக்கான உணவு விநியோக வழிகளை ஆராய்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அமைப்பு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை கடந்த பெப்ரவரி மாதம் 79,000 ஆக இருந்த போதும் மார்ச் மாதம் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து அது 160,000 ஆக அதிகரித்திருந்தது. எனினும் தற்போது 140,000 மக்களே இடம்பெயர்ந்து வாழ்வதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் உள்ள இடம்பெயர்ந்த மக்களில் 50 வீதத்தை விட அதிகமான மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான மேலதிக உணவுத் தேவைக்கான தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும், தற்போதுள்ள உணவுக் கையிருப்பு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு போதுமானது எனவும் உலக உணவு திட்டத்தின் நாட்டுக்கான பணிப்பாளர் ஜெப்ஃ ரப்ஃ டிக் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய அவசர நிதி உதவி மற்றும் யப்பானின் நிதி உதவிகள் கிடைத்துள்ளன. அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் தமது வளங்கல்களை அதிகரித்துள்ளன.

வடக்கு - கிழக்கில் உள்ள இடம்பெயர்ந்த 400,000 மக்களின் உணவுத் தேவைகளுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒரு வாரத்திற்கு தேவை.

இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவியில் மட்டக்களப்புக்கு விநியோகிக்க என ஜப்பான் 3,175 மெற்றிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அதில் 422 மெற்றிக் தொன் இங்கு வந்து சேர்ந்துவிட்டது. இது 100,000-க்கும் அதிகமான மக்களின் உணவுத் தேவைக்கு போதுமானது.

எதிர்வரும் ஜூன் மாதம் வரையிலும் விநியோக வழிகள் பாதுகாப்பாக உள்ளன. எமக்கு சில உதவிகள் நிதியாகவும் கிடைத்துள்ளன. அதனைப் பயன்படுத்தி நாம் விநியோகங்களை பெற்றுக் கொள்ள முடியும். உள்ளுரில் கொள்வனவு செய்யப்படும் இந்த உணவுப் பொருட்களின் மூலம் நேரச் செலவு மீதப்படுத்தப்படுவதுடன், உள்ளுர் பொருளாதாரமும் உயர்வடையும்.

70 வீதமான உணவுத் தேவைகளை நாம் நிறைவேற்றுகின்ற போதும் மிகுதியை அரசாங்க மற்றும் உள்ளுர் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. நாம் மாதம் தோறும் 1,500 மெற்றிக் தொன் நிறையுள்ள அரிசி, கோதுமை மா, பருப்பு, சீனி, சமயல் எண்ணை போன்றவற்றை வழங்குகின்றோம் என்றார் அவர்.


நன்றி:புதினம்

நியூயோர்க்கில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரதிநிதி கைது.

[வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2007] நியூயோர்க்கில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமெரிக்க பிரதிநிதியான கந்தசாமி கருணாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க நீதித்துறை அமைச்சு நேற்று புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பில் கருணாகரன் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்க்கும் அமெரிக்காவில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கும் இடையேயான சந்திப்புக்கு கருணாகரன் காரணம் என்றும் கருணாவும் அவரது உதவியாளர்களும் இராணுவத் தொழில்நுட்பம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்கு உதவியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணா குழு தொடர்பாக நான் கூறியவை சரியானவை: அமைச்சர் ரவூப் ஹக்கீம்.!!

[வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2007]

கிழக்கு மாகாணத்தில் கருணா குழுவினர் பதற்றத்தை தோற்றுவித்து வருகின்றனர் என கொழும்பில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்றிற்கு தன்னால் வழங்கப்பட்ட கருத்து சரியானது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ரவூப் ஹக்கீம் தெரிவித்தாக வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளதாக ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே ரவூப் ஹக்கீம் இதனை தெரிவித்தார்.

ஆனால் தனது கூற்றில் தான் உறுதியாக இருப்பதாகவும், இது தொடர்பாக அரசாங்க தலைவர் மகிந்த ராஜபக்சவுடனும் பேச உள்ளதாக ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வண்ணம் கருணா குழுவினரால் முஸ்லிம் மக்கள் மீது துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும். இது மோதலை வேறு ஒரு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் என ரவூப் ஹக்கீம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

Wednesday, April 25, 2007

மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு முறியடிப்பு: 12 இராணுவத்தினர் பலி. 50 படையினர் படுகாயம்

[புதன்கிழமை, 25 ஏப்ரல் 2007] மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று முறியடித்தனர். இதில் சிறிலங்கா இராணுவத்தினருக்குப் பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மன்னாரில் இரணை இலுப்பைக்குளத்திலிருந்து வலயன்கட்டு நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய நகர்வு நடவடிக்கை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் சிறிலங்கா இராணுவத் தரப்பினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுபடுத்தப்பட்டுள்ளன. மன்னார் இரணை இலுப்பைக்குளத்திலிருந்து இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு சிறிலங்கா இராணுவத்தினர் பெருமெடுப்பில் கனரக கவச வாகனங்கள் சகிதம் வலயன்கட்டு, முள்ளிக்குளம் பகுதிகளை நோக்கிய முன்னகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். இராணுவத்தினருக்கு ஆதரவாக மிகச்செறிவான எறிகணைச் சூட்டாதரவும் மேற்கொள்ளப்பட்டது. இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு மேற்கொண்ட நகர்வு நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் பரிசங்குளத்தில் முறியடிப்புத்தாக்குதலை நடத்தினர். இராணுவத்தினருக்கு எதிராக பரிசங்குளத்தில் வைத்து விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் இராணுவத்தினருக்கு கடும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இராணுவத்தினரின் நகர்வு நடவடிக்கை பிற்பகல் 2 மணிக்கு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைவிட்டு இரணை இலுப்பைக்குளத்திற்கு சிறிலங்கா இராணுவம் பின்வாங்கியது. இராணுவத்தினர் கைவிட்டுச் சென்ற ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. முறியடிக்கப்பட்ட இத்தாக்குதலில் விடுதலைப் புலிகளுக்கு இழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை. இரணை இலுப்பைக்குளத்திலிருந்து அநுராதபுரம் மருத்துவமனைக்கு இன்று மாலை வரை இராணுவத்தினரின் சடலங்களும் காயமடைந்த இராணுவத்தினரும் உலங்கு வானூர்திகள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். அநுராதபுரம் மருத்துவமனையில் இன்று மாலை ஊடகவியலாளர்கள் எவரும் உள்நுழைய இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை. அநுராதபுரம் மருத்துவமனையில் கொல்லப்பட்ட இராணுவத்தினர் 12 பேரின் சடலங்கள் உள்ளதாகவும், 40-க்கும் அதிகமான இராணுவத்தினர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கொழும்பில் படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இராணுவத்தினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் பாரியதானது என்றும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகள் பகலில் வான்தாக்குதலை நடத்தட்டும் பார்க்கலாம்: சவால் விடுகிறார் அமைச்சர்.!!

[புதன்கிழமை, 25 ஏப்ரல் 2007]

முடியுமானால் விடுதலைப் புலிகள் பகல்வேளையில் வான்தாக்குதல் நடத்தட்டும். அதனை எவ்வாறு? முறியடிப்பது என நாங்கள் காட்டுகின்றோம் என்று சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சிறப்பு பணிப்புரையின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். பலாலி கூட்டுப்படைத்தளத்துக்குச் சென்று, விடுதலைப் புலிகள் வான்தாக்குதல்கள் நடத்திய இடங்களை பார்வையிட்டார்.

கொழும்பு திரும்பிய அவர், பிபிசி தமிழோசைக்கு நேற்று இரவு கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது:

அரசாங்கம் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், கிழக்கிலும் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்நிலையில் விடுதலைப் புலிகள் வான்தாக்குதல்களை நடத்துவது ஆச்சரியப்படும் விடயமல்ல.

உலகில் மிகவும் பலமுள்ள இராணுவப் படை விடுதலைப் புலிகள் வசம் உள்ளது என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்நிலையில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவார்கள். அதனை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகள் கிளர்ச்சி அமைப்பு அல்ல. மாறாக பயங்கரவாத அமைப்பு. எனவே விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவது புதுமையல்ல.

ஆனால் விடுதலைப் புலிகள் இரவு நேரங்களிலேயே தாக்குதல் நடத்துகின்றனர். முடியுமானால் விடுதலைப் புலிகள் பகல்வேளையில் வான்தாக்குதல் மேற்கொள்ளட்டும். அதனை எவ்வாறு?முறியடிப்பது என்று நாங்கள் காட்டுகின்றோம்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆராய நானும் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் இன்னும் சில அமைச்சர்களும் யாழ்ப்பாணம் சென்றோம். அங்கு நிலைமைகளை ஆராய்ந்து அரச தலைவருக்கு நிலைமைகளை தெரிவிவித்துள்ளோம் என்றார் அவர்.

சிறிலங்கா அரசு கூறிவந்த பொய்களை உடைத்த விடுதலைப் புலிகள்: ரணில் விக்கிரமசிங்க.!!

[புதன்கிழமை, 25 ஏப்ரல் 2007]

பாதுகாப்பு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கூறிவந்த பொய்கள் நேற்றைய தினம் விடுதலைப் புலிகள் நடத்திய வான்தாக்குதலால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் முடக்கப்படுவது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் உள்ள அனைத்துலக ஊடக நிலையத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியியுள்ளார்.

இது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

மனித உரிமை மீறல், ஊடக சுதந்திரப் பாதுகாப்பு, பாதுகாப்பு விடயங்களை அரசாங்கம் பொய்களைக் கூறி தொடர்ந்தும் உண்மைகளை மூடி மறைக்கப்பார்க்கின்றது.

ஆனால் உண்மைகளை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது. பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் கூறிவந்த பொய்கள் நேற்றைய தினம் விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கட்டுநாயக்க தாக்குதலின்போது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியதை சுட்டிக்காட்டிய நாம், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தினோம்.

இதற்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுத்தோம். ஆனாலும் நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை எனக்கூறிய அரசாங்கம், இனி விடுதலைப் புலிகள் வான் தாக்குதலுக்கு எத்தனித்தால் அவர்களின் வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்படும் எனவும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியது.

ஆனால் நேற்றைய தினம் என்ன நடந்தது.

விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்திலுள்ள முக்கிய இராணுவத்தளம் மீது தாக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாக திரும்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் ஒன்றே அரசாங்கம் கூறிவரும் தொடர் பொய்களுக்கு சிறந்த சான்றாகும்.

எனவே, இவற்றுக்கு எதிராக போராட ஐக்கிய தேசியக் கட்சி களத்தில் இறங்கியுள்ளது. இதற்காக நாங்கள் மக்களோடு இணைந்து போராடவுள்ளோம்.

ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக போராடுவதற்கு எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றார் அவர்.

Tuesday, April 24, 2007

பயணிகள் பஸ் கிளேமோர் தாக்குதக்குள்ளானது 5 பேர் பலி 33 பேர் காயம்.

வவுனியாவில் நேற்று பின்னிரவு செட்டிக்குளப் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த பஸ் மீது கிளேமோர் குண்டு வெடித்து 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர் 33 பேர் காயமடைந்துள்ளனர். எனவும் காயமடைந்தவர்கள் செட்டிக்குள மருத்துவ மனையில் அனுமதிக்க்கப்ப்ட்டுள்ளனர்.. மன்னார் மதவாச்சி வீதியில் சென்று கொண்டிருந்த பஸ் மீது கிளேமோர் தக்குதல் நடத்தப்பட்டதாகவும் மதவாச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த பஸ் குண்டு வெடிப்பு விடுதலைப்புலிகளே காரணம் என ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் பலாலி மீதான விமானத்தாக்குதல்லின் 2 மணித்தியாளங்கள் பின்னர் இந்த செய்தி கிடைக்கப்பபெற்றது..

(2 ஆம் இணைப்பு) பலாலி சிறிலங்கா கூட்டுப் படைத்தளம் மீது வான்புலிகள் அதிரடித் தாக்குதல்: ஆயுதக்கிடங்கு அழிப்பு- 6 இராணுவத்தினர் பலி.!!!

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா பலாலி கூட்டுப் படைத்தளம் மீது இன்று அதிகாலை திகைப்பூட்டும் வகையில் தமிழீழ வான்படையினர் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் பலாலி தளத்தில் இருந்த ஆயுதக்கிடங்கு அழிக்கப்பட்டது. 6 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வான்பரப்பிற்குள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் நுழைந்த தமிழீழ வான்படையினரின் இரு வானூர்திகள் 10-க்கும் அதிகமான குண்டுகளை பலாலி கூட்டுப்படைத்தளம் மீது வீசியுள்ளன.

பலாலி வான்படைத்தளம் மற்றும் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் இருந்து இயங்கும் யாழ். சிறிலங்கா படைத்துறை மையம் ஆகியவற்றின் மீது துணிகரமாக குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்திய தமிழீழ வான்படையினரின் வானூர்திகள் வெற்றிகரமாகத் தளம் திரும்பியுள்ளன.

இதில் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் உள்ள ஆயுதக்களஞ்சியம் மற்றும் திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதற்கு சென்றிருந்த சிறிலங்கா படைத்தளபதிகள் ஆகியோருக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காப் படைகளின் கட்டளை மையமாக உள்ள பலாலித்தளத்திற்குள் குண்டுகளை தமிழீழ வான்படையினரின் வானூர்திகள் குண்டுகளை வீசியுள்ளமையானது சிறிலங்காப் படைத்துறையினருக்கும், அரசாங்கத்துக்கும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தளத்திற்குள் குண்டுகள் வீழ்ந்து வெடித்த நிலையில் என்ன தாக்குதல் நடக்கின்றது என்று தெரியாத அளவுக்கு பலாலி படைத்துறை மையம் திகைப்படைந்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட போது பலாலிப் படைத்தள மையத்தில் பெரும் குண்டுவெடிப்பு ஒலிகள் கேட்டதனையும், தீப்பிழம்புகள் எழுந்துள்ளதனையும் நேரில் பார்த்த சான்றுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

தமிழீழ வான்படையினரின் தாக்குதல் நடத்தப்பட்டவுடன் யாழ்ப்பாணத்தின் மின் வழங்கல் உடனடியாக துண்டிக்கப்பட்டதுடன், பலாலி மையத்தில் இருந்து இருந்து இயங்கும் செல்லிடப்பேசி இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கூறியதாவது:

பலாலி வான்படைத்தளம் மற்றும் இராணுவக் களஞ்சியம் ஆகியவற்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையின் இரு வானூர்திகள் தாக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாக எமது தளத்துக்குத் திரும்பியுள்ளனர்.

இதில் சிறிலங்கா இராணுவத்துக்கு பாரிய இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்த வானூர்தியில் இருந்த எமது வானோடி ஒருவரை தொடர்பு கொண்டபோது பலாலித் தளம் தீப்பற்றி எரிந்தததை தாம் பார்த்ததாகக் கூறினார்.

இத்தாக்குதல் தொடர்பாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பான ஊடக மையத்தின் பேச்சாளர் கூறியதாவது:

எமது இராணுவத்தினர் இலகு ரக வானூர்தி ஒன்றைப் பார்த்துள்ளனர். அது பருத்தித்துறையிலிருந்து பலாலி நோக்கி வந்துள்ளது. எமது படையினர் 50 கலிபர் துப்பாக்கிகள் மூலம் அந்த வானூர்தியை நோக்கி தாக்குதல் நடத்திய போதும், அவர்கள் இராணுவ பதுங்கு குழிகள் மீது 2 குண்டுகளை வீசிச் சென்றனர். இத்தாக்குதலில் 6 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்றார்.

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தனது இணையத் தளத்தில் பதிவு செய்துள்ள செய்தி:

பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் விடுதலைப் புலிகளின் இலகுரக வானூர்தி உள்நுழைய முயன்றது. அதனை இராணுவத்தினர் முறியடித்தனர்.

பருத்தித்துறை கடற்பரப்பிலிருந்து அந்த வானூர்திகள், பலாலிக்கு வந்தன. பாதுகாப்பு எச்சரிக்கை சாதனங்கள் உடனே இயக்கப்பட்டன. தாக்குதல் வானூர்திகளை நோக்கி வானூர்தி எதிர்ப்பு தளபாடங்கள் நிறுத்தப்பட்டன. அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் தாக்குதல் ஏதும் நடத்தாமல் தாக்குதல் வானூர்தி திரும்பியுள்ளது.

இருப்பினும் திரும்பிச் செல்லுகையில் மயிலிட்டி கடற்பரப்பில் வெடிபொருட்களை வீசிச் சென்றுள்ளனர்.

இதனிடையே பூநகரியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இதற்கு இராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். 6 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி படைத்துறையின் தலைமையக மையத்தில் ஆயுதக்களஞ்சியம், முதன்மை இராணுவ மருத்துவமனை, கவசப்படைப்பிரிவு மையம், உள்ளிட்டவையும் சிறிலங்கா வான்படையினரின் உலங்குவானுர்திகளும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், சிறிலங்கா வான்படையினரின் வான் பொறியியல் பிரிவு ஒன்றும் இங்கு நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

பலாலி வானூர்தி நிலையம் வான் வழியான சிறிலங்கா படைத்துறையின் முதன்மை வழங்கல் மையமாகவும் இருந்து வருகின்றது. படைத்துறையினர் காயமடையும் போது அவர்களை மேலதிக சிகிச்சைக்காக பலாலியிலிருந்தே வானூர்திகள் மூலம் கொண்டு செல்லப்படுவது வழமையாகும்.

கடந்த மாதம் 26 ஆம் நாள் தமிழீழ வான்படையினர் சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலின் பின்னர் சிறிலங்காவின் வான்படையினர் வான்புலிகளின் தளங்கள், வான்புலிகளின் இலக்குகள், விடுதலைப் புலிகளின் இலக்குகள் எனக் கூறிக் கொண்டு 150-க்கும் அதிகமான தடவைகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

தமிழீழ வான்படையினர் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலின் மூலம் மீண்டும் தமது வலிமையை நிரூபித்துள்ளனர்.

கடந்த 1994 ஆம் ஆண்டு பலாலி படைத்தளம் ஓடுபாதைக்குள் கரும்புலிகள் அணி ஒன்று ஊடுருவி தாக்குதல் நடத்தி உலங்குவானூர்தி ஒன்றை அழித்திருந்தனர்.

இதன் பின்னர் ஓயாத அலைகள் - 03 இராணுவ நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தி வானூர்தி ஓடுபாதையை சேதமாக்கியிருந்தனர்.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காப் படையினர் நடத்திய வலிந்த தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையின் போது, பலாலி படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் தாக்குதல் உலங்குவானூர்தி ஒன்றும் மற்றொரு போக்குவரத்து உலங்குவானூர்தியும் சேதமடைந்திருந்தன.

தமிழீழ வான்படையினர் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா கடற்படை மற்றும் பலாலி வான்படையினரின் ராடார்களின் இயக்கத்துக்கு மத்தியில் வெற்றிகரமாக சென்று அடர்ந்த இருள்வேளையில் இன்று குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்திவிட்டு வெற்றிகரமாக தளம் திரும்பியிருக்கின்றனர்.

தமிழீழ வான்படையினரின் இன்றைய தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்காப் படையினர், தமது முன்னரங்க நிலைகளிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கிக் கடுமையான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
நன்றி:புதினம்

விமானப்படைக்கு இறுதி எச்சரிக்கை- தமிழ்ச்செல்வன் .

[செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2007]

கிளிநொச்சி: காட்டுநாயகே மற்றும் பலாலி விமான தளங்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய விமான தாக்குதல்கள் 100 சதவீத வெற்றி பெற்றுள்ளன. இது இலங்கை விமானப் படைக்கு விடப்பட்ட இறுதி எச்சரிக்கை என புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

இதுகுறித்து கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியில்,

காட்டு நாயகே விமான தளம் மீது நாங்கள் நடத்திய விமான தாக்குதல் 100 சதவீத வெற்றியைப் பெற்றது. தற்போது பலாலி விமான தளம் மீதும் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழர்களின் பூமி மீது இலங்கை விமானப்படை நடத்தி வந்த தொடர் தாக்குதலை நிறுத்தும் வகையில் இந்த வான்வழித் தாக்குதல்களை நாங்கள் நடத்தியுள்ளோம்.

கடந்த 6 மாதங்களில் மட்டும், இலங்கை விமானப்படை தினசரி இருமுறை என மொத்தம் 90 நாட்கள் விமானப் படைத் தாக்குதலை நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

கிழக்கில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்களில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் பெரும் துயர நிலையில் தவிக்கின்றனர். தங்களது வீடுள், சொத்துக்களை விட்டு விட்டு ஓட்டம் பிடித்து அகதிகள் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

1 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் உள்நாட்டிலேயே அகதிகள் ஆகியுள்ளனர்.

எங்களை ராணுவ ரீதியாக வீழ்த்த முடியாது என்பதால், பிற நாடுகளை தமிழர்களுக்கு எதிரான போரில் இழுக்க இலங்கை அரசு முயலுகிறது.

இலங்கைக்கு மட்டுமல்ல இப்பிராந்தியத்திற்கும், உலகத்திற்கும் விடுதலைப் புலிகள் பெரும் மிரட்டலாக உள்ளனர் என்று பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது இலங்கை அரசு. ஆனால் அது பலிக்காது.

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காக பாடுபட்டு வரும் இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம். பொறுப்பான ஒரு அரசை நாங்கள் நடத்தி வருகிறோம். ஜனநாயக முறையில் தமிழ் மக்களுக்கான அரசை நாங்கள் நடத்தி வருகிறோம். சுதந்திரமான அரசை அமைக்கும் முயற்சிகளில் வேகமாக முன்னேறி வருகிறோம்.

எங்களது ராணுவ அமைப்பும் நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டு வருகிறது. ஒரு முழுமையான நாட்டுக்குரிய ராணுவ அமைப்பை நாங்கள் தற்போது கொண்டுள்ளோம்.

தாயகத்தின் சுதந்திரத்திற்காக பயிற்சி பெற்ற, முழுமையான திறன் படைத்த படை பலத்தை நாங்கள் கொண்டுள்ளோம். அதை உறுதிப்படுத்தியும் வருகிறோம்.

எங்களது சுதந்திரத்தை மட்டுமே நாங்கள் லட்சியமாக கொண்டுள்ளோம். அடக்குமுறை போக்குடன் செயல்பட்டு வரும் இலங்கை அரசைத் தவிர வேறு யாரும் எங்களுக்கு எதிரிகள் கிடையாது என்றார் தமிழ்ச் செல்வன்.

- தற்ஸ் தமிழ்

சிறிலங்கா அரசு சட்ட ஒழுங்கை மதிப்பதில்லை: அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு.!!

[செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2007] ஆழிப்பேரலை நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வந்த பிரான்ஸ் நாட்டு தொண்டர் அமைப்பான பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 பணியாளர்களின் படுகொலைகள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகள் மிகவும் தவறான முறையில் நடைபெற்று வருவதாகவும், இலங்கைத்தீவில் சட்டம் ஒழுங்கு மிகவும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் இந்த நிறுவனத்தின் பணியாளர்கள் மூதூரில் மிகவும் அருகாமையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். சிறிலங்கா அரசாங்கமானது, இந்த கொலைகள் தொடர்பான விசாரணைகளில் ஆதரவாகவோ, தெளிவாகவோ, செயற்திறன் மிக்கதானவோ நடந்து கொள்ளவில்லை. காவல்துறையினர் ஒரு இராணுவத்தினரைக் கூட விசாரணை செய்யவேண்டும் என்று அக்கறை கொள்ளவில்லை என சுவிற்சர்லாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழுவின் பொதுச் செயலாளர் நிக்கொலஸ் ஹவென் தெரிவித்துள்ளதாவது: நாம் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இது தொடர்பான கடுமையான கவலைகள் சிறிலங்காவில் மட்டுமல்ல அனைத்துலகத்திலும் எதிரொலித்துள்ளது. சிறிலங்காவில் உள்ள குற்றவியல் நீதித்துறையின் திறமைக்கும் அதனால் வழங்கப்படும் தீர்ப்பிற்கும் இது ஒரு நல்ல உதாரணம். விடுதலைப் புலிகளினாலும் மனித உரிமைகள் மீறப்படுகின்றன, ஆனால் எமக்கு அதிர்ச்சியான விடயம் என்னவெனில் சிறிலங்கா அரசாங்கம் சட்டம், ஒழுங்கை மதிப்பதில்லை என தெரிவித்தார். சிறிலங்காவில் கடத்தல்கள், நீதிக்குபுறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள் கடந்த வருடத்தின் பின்னர் வெகுவாக அதிகரித்துள்ளதாக அனைத்துலக நீதியாளர்களின் ஆணைக்குழு உட்பட பல மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திவரும் போதும் அவர்கள் அதனை மறுத்தும் வந்துள்ளனர். பிரான்ஸ் தொண்டர் அமைப்பின் பணியாளர்களின் படுகொலை 2003 ஆம் ஆண்டு ஈராக்கில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னர் நடந்த மிகவும் மோசமான ஒரு தாக்குதலாகும். ஆனால் மூதூரில் பலியானவர்களில் அனைத்துலகத்தை சேர்ந்தவர்கள் இல்லாததால் அது ஈராக்கை போல் உலகில் அதிக கவனத்தை பெறவில்லை. அங்கு படுகொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுபான்மையின தமிழ் மக்களாவார்கள். கொல்லப்பட்ட பணியாளர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் பணியாற்றி வருவதனால் அவர்களது குடும்பத்தினர் கொலைகளுக்கு இராணுவமே பொறுப்பு என கூறியுள்ளனர். கொலை இடம்பெற்ற இடத்திற்கு செல்வதற்கு கண்காணிப்புக்குழுவை அரசாங்கம் அனுமதிக்காததால் இந்த கொலைகள் அரசாங்கத்தின் வன்முறை என கண்காணிப்புக் குழு கூறியுள்ளது. அரசாங்கம் இதனை மறுத்து வருவதுடன் தனது வாதத்தை பாதுகாப்பதற்காக அரச தலைவர் விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

Monday, April 23, 2007

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகி போர்ப் பிரகடனம் செய்ய சிறிலங்கா அரசு முடிவு!

[திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2007] போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகி முழு அளவில் போர்ப் பிரகடனம் செய்ய சிறிலங்கா அரசாங்கம் விரும்புவதே உண்மை நிலைப்பாடு என்று கொழும்பு படைத்துறை ஆய்வாளர் ஒருவர் தெரிவத்துள்ளார். அனைத்துலகின் முழு ஆதரவுடனும் நோர்வேயின் அனுசரணையுடனும் தொடங்கப்பட்ட சமாதான முயற்சியின் அடித்தளமே இந்தப் போர்நிறுத்த உடன்பாடுதான். விடுதலைப் புலிகளின் பலத்தின் அடிப்படையிலேயே இந்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. ஆனால், விடுதலைப் புலிகள் இன்று பலமிழந்து விட்டதாகக் கருதும் சிறிலங்கா அரசாங்கம், இந்த உடன்பாடானது படையினரின் நடவடிக்கைகளுக்கு மிகப் பெரும் தடையாக இருக்குமெனக் கருதுகிறது. ஆனாலும், இந்த உடன்பாட்டிலிருந்து ஒரு தலைப்பட்சமாகத் தான் விலகிவிடுவதை அரசாங்கம் விரும்பவில்லை. உடன்பாட்டின்படி 14 நாள் முன்னறிவித்தலை கொடுத்துவிட்டு விலகிவிடலாம். ஆனால், அது அனைத்துலக ரீதியில் தங்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுமெனக் கருதும் அரசாங்கம், அதனை மக்களைக் கொண்டு இரத்துச் செய்ய விரும்புகிறது. போர் நிறுத்த உடன்பாடு தொடர்பாக மக்கள் வாக்கெடுப்பை நடத்தி அதன் மூலம் உடன்பாட்டை நிராகரித்துவிடத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், மக்கள் ஏற்காத உடன்பாட்டை தாங்களும் ஏற்கப் போவதில்லையெனக் கூறி அதிலிருந்து விலகி முழு அளவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இறங்கிவிடலாம் என்று கருதுகின்றது. அண்மையில் தென்னிலங்கையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு காணப்பட வேண்டும் என்று பெருமளவு மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கிழக்கில் அண்மைக்காலமாக படையினர் வெற்றி பெற்றதாகக் கூறப்படுவதும் தற்போதைய போர் முனைப்புகளுமே தென்னிலங்கை மக்களை இராணுவத் தீர்வுக்கு ஆதரவு வழங்கச் செய்துள்ளது. இந்த மக்கள் கருத்துக் கணிப்பும் போர் நிறுத்த உடன்பாடு தொடர்பாக மக்கள் வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கத்தை தூண்டியுள்ளது. இதன்மூலம் சமாதான முயற்சிகளை விடுத்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக முழு அளவில் போரைத் தொடுக்க சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்து விட்டது தெளிவாகிறது என்று அந்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளிலிருந்தும் வாங்கிக் குவித்துள்ள ஆயுதங்களை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்திவிட வேண்டும் என்பதில் அரசாங்கம், முனைப்புக் காட்டுகிறது. மக்களே சமாதான முயற்சியை விரும்பாது பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்குமாறு அனுமதி வழங்குகையில் பேச்சுக்கான தேவையில்லை என வெளிப்படுத்தவும் சிறிலங்கா அரசாங்கம் விரும்புகின்றது. போர் நிறுத்த உடன்பாடானது மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தோற்கடிக்கப்பட்டால், அது சமாதான முயற்சிகளை முழுமையாக நிராகரிக்கும் செயல் என்பதுடன் வடக்கு - கிழக்கில் முழு அளவிலான போருக்கு அரசாங்கத்துக்கு கிடைக்கும் மக்கள் அங்கீகாரமாகவே கருதப்படும். அனைத்துலக ரீதியிலும் இதனை நியாயப்படுத்த அரசாங்கமும் முயலும். போர் நிறுத்த உடன்பாட்டை நிராகரித்து போருக்கு அங்கீகாரம் வழங்கும் தென்னிலங்கை மக்களின் செயலானது வடக்கு - கிழக்கில் மட்டுமே போர் நடைபெற வேண்டும் என்பதை அங்கீகரிப்பதாக இரு அது முழு நாட்டுக்கும் உரியதாயிருக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றும் அவர் குறிபிட்டுள்ளார். நன்றி:புதினம்

வடபோர்முனையை முன்னரங்க நிலைகளை நோக்கி பாரிய இராணுவ முன்னகர்வு.

[திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2007] சிறீலங்கா இராணுவத்தினர் வடபோர்முனை முன்னரங்க நிலைகளை நோக்கி இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட படையினர் கனரக வாகனங்கள், மற்றும் படை ஆளணிகளை கடந்த மூன்று நாட்களாக முன்னகர்த்தியுள்ளதாக தென்மராட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சிறீலங்கா இராணுவத்தினருக்கு இரவு நேரத்தில் தாக்குவதற்குரிய பயிற்சிகளை பலாலி, தொண்டமனாறு, வல்லை பகுதிகளில் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இவ் இராணுவத்தினர் எந்தநேரமும் தாக்குதல் மேற்கொள்வதற்காக தென்மராட்சி கிராமங்களான கற்பூது, மந்துவில், சரசாலைப் பகுதிகளுக்கு முன்னகர்த்தியுள்ளதாக அறியமுடிகிறது. சிறீலங்கா படைகளின் உலங்கு வானூர்திகள் இடைவிடாமல் பலாலிக்கும் முன்னரங்க நிலைகளுக்கும் பறப்புக்களை மேற்கொள்வதாக தெரியவருகிறது.

Sunday, April 22, 2007

எண்ணிக்கை தெரியாத பறப்புக்களில் ஈடுபடும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள்: கொழும்பு வார ஏடு

[ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2007] தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் எண்ணிக்கை தெரியாத பறப்புக்களில் வன்னியில் ஈடுபட்டுள்ளது என்றும், அவர்களின் வானூர்திகளில் ஒன்று மணலாற்றுப் பகுதியில் உள்ள பதவியாவில் அவதானிக்கப்பட்டுள்ளது என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் வார ஏடு தெரிவித்துள்ளது. சண்ட ரைம்ஸ் வார ஏட்டின் பாதுகாப்புத்துறை ஆய்வாளரான இக்பால் அத்தாஸ் தனது பத்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த பத்தியிலிருந்து சில முக்கிய பகுதிகள்: வன்னியில் பறப்புக்களில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளின் வானூர்திகள் ஒரு சமயத்தில் வானில் இருந்து தரைக்கு சூடுகளையும் வழங்கி பயிற்சிகளில் ஈடுபட்டதாக சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் அதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும் கிழக்கில் அரசாங்கம் கூறுவது போல் படையினரின் முழுக்கட்டுப்பாட்டில் அந்தப்பகுதி இல்லை. சில பகுதிகளில் உள்ள விடுதலைப் புலிகள் மிக அதிகளவான சேதங்களை விளைவித்து வருகின்றனர். பல இடங்களில் தற்போதும் எதிர்ப்புக்கள் உள்ளன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தான் இது அதிகமாக உள்ளது. களத்தின் உண்மையான நிலவரம் அரசாங்கத்தின் தீவிரமான பிரச்சாரங்களினால் மறைக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் நோக்கம் தெளிவானவை. அவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றைய இடத்திற்கு தமது படைகளை செறிவாக்கி வருகின்றனர். இது அரசாங்கப் படையினரின் பலத்தை பரவலடைய வைப்பதற்கு அவர்களுக்கு போதுமானதாக உள்ளது. வடபோர்முனையை பொறுத்த வரையிலும் இரு தரப்பும் தமது நகர்த்தல்களை செய்து வருகின்றன. புதுவருடத்திற்கு முன்னைய நாட்களில் மடு தேவாலயத்திற்கு வடக்காக நகர்ந்த அரசாங்கப் படையினர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். இந்த தாக்குதலில் இராணுவத்தின் உயர் பயிற்சிகளை பெற்ற அணி ஒன்று சிக்கி பலியாகி உள்ளது. கொல்லப்பட்ட 7 படையினரின் சடலங்களை விடுதலைப் புலிகள் கையளித்துள்ளனர். ஆனால் அரசாங்கம், தனது மிக உயர்ந்த பயிற்சி பெற்ற 8 படையினர் காணாமல் போனதாக கூறியதுடன் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என அச்சத்தையும் வெளியிட்டு இருந்தது. மோதல்களில் காயப்படும் தமது உறுப்பினர்களின் தேவைக்காக விடுதலைப் புலிகள் குருதி சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு முன்னரங்குகளுக்கு அண்மையாக பல இடங்களில் உயர் அலைவரிசை கொண்ட தொடர்பு சாதனங்களையும் நிறுவி வருகின்றனர். முல்லைத்தீவு கடற்பகுதிகளிலும், வடக்கு - கிழக்கு கரையோரப் பகுதிகளிலும் குறிப்பாக நாகர்கோவில், வெற்றிலைக்கேணி, கண்டல்காடு, சாலை கடற்பகுதிகளில் விடுதலைப் புலிகள் தமது கடற்புலிகளின் பலத்தை அதிகரித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற சரக்கு கப்பல் ஒன்றை விடுதலைப் புலிகள் தகர்க்க முயன்றுள்ளனர். இந்த கப்பல் தனியாருக்கு சொந்தமான சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்கு அருகில் தரித்து நின்றது. இது அதிகாரிகளிடம் பலத்த அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது. ஆனால் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால் அதனால் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை கணிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் விடுதலைப் புலிகளால் கட்டுநாயக்கா வான்படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல், இராணுவ, பொருளாதார சேதங்களை போன்று இருந்திருக்கும். 2002 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதத்தில் இருந்து ஒக்ரோபர் மாதம் வரையிலும் நிலைமைகளை ஆராய்ந்த அமெரிக்காவின் பசுபி பிராந்திய கட்டளைப்பீடம் சிறிலங்கா அரசாங்கத்தை இரவுப் பார்வை சாதனங்களை வாங்கும் படி பணித்திருந்தது. முதலில் உலங்கு வானூர்திகளுக்கும், பின்னர் சரக்கு வானூதிகளுக்கும், இறுதியாக தாக்குதல் வானூர்திகளுக்கும் அதனை உபயோகிக்கும் படி அது ஆலோசனைகளை வழங்கியிருந்தது. அதற்கான பயிற்சிகளுக்கும் அதிகாரிகள் பரிந்துரை செய்திருந்தனர். விடுதலைப் புலிகள் வசம் உள்ள வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளின் தாக்குதிறன் குறையும் வரையில் இரவு நேர வான் பறப்புக்களையே அதிகளவில் மேற்கொள்ளும் படி வான்படையை கேட்டிருந்தது. விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதல் திறன் தற்போதும் முனைப்பாக உள்ளது, எனவே பகல் நேரத்திலான வானூர்திப் பறப்புக்கள் மிகவும் ஆபத்தானவை. வெற்றிகரமான தாக்குதல்களை நடத்த வேண்டும் என்றால் வான்படையினர் இரவுத் தாக்குதல்களை நடத்த வேண்டும். தற்போது சிறிலங்கா வான்படையினரிடம் உள்ள MI-24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகளில் சில முன்னணிப் பார்வையுள்ள கடந்த ஊதா தொகுதியை (Forward Looking Infrared (FLIR) system) கொண்டுள்ளன. இந்த சாதனம் மிகவும் பெறுமதியானது என தான் எண்ணுவதாக ஒரு MI-24 உலங்கு வானூர்தியின் வானோடி ஒருவர் தெரிவித்துள்ளார். சில வான்படை வானோடிகள் பழைய இரவுப் பார்வைச் சாதனத்துடன் பறப்புக்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் அதற்கான முறையான பயிற்சிகளும் அற்றவர்கள். ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அப்பால் வானோடிகளுக்கு இரவுத் தாக்குதல் பயிற்சிகள் அதிகளவில் தேவைப்படுகின்றன. ஏனெனில் அப்படியான பயிற்சிகள் இருந்திருந்தால் விடுதலைப் புலிகளால் மார்ச் 26 ஆம் நாள் கட்டுநாயக்க வான்படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, தாக்குதலுக்கு முன்னர் தடுத்திருக்க முடியும் அல்லது பின்னர் அவர்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்தியிருக்க முடியும். விடுதலைப் புலிகளின் கட்டுநாயக்க வான்படைத்தளத்தின் மீதான தாக்குதலை அடுத்து வான் பாதுகாப்பிற்கான பல எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை பாதுகாப்புச் செலவை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன. எனினும் பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக அவற்றை வெளியிட முடியாது. இந்த கொள்வனவுகளில் நடைபெறும் ஊழல்களையும் வெளியிட முடியாது அவை உயர் ரக பாதுகாப்பு இரகசியங்களாக பேணப்படுகின்றன. பேச்சுக்கள் தொடர்பான ஊகங்கள் எழுகின்ற போதிலும், களத்தின் தாயாரிப்பு வேலைகள் ஒரு தெளிவான கருத்தை சொல்கின்றன. அதாவது எதிர்வரும் வாரங்களில் அதிகளவான மோதல்களை எதிர்பார்க்கலாம் என்பது தான் என அந்த பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போர்க்களத்தில் வான்கலங்களின் பங்கு.

இலங்கையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் பின் மோதல்கள் உக்கிரமடைந்து 15 மாதங்கள் கடந்து விட்டன இந்த மோதல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் ஏறத்தாழ பல நூற்றுக்கணக்கான விமானத்தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன. தற்போதும் தமிழ் சிங்கள புதுவருடத்தின் பின்னர் தொடர்ந்து வன்னிப் பகுதிகள் மீது மிகை ஒலி விமானங்கள் இரவு பகலாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதாவது வடபகுதியில் விடுதலைப் புலிகளின் பலத்தை சிதைப்பதற்கு இலங்கை அரசு தனது விமானப்படையை தான் பெரிதும் நம்பியுள்ளது. விடுதலைப் புலிகளின் வான்படை கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நள்ளிரவில் நடத்திய தாக்குதல் அவர்களின் இரவு நேர தாக்குதல் வலிமையை வெளிப்படுத்தியிருந்தது. அதன் பின்னர் இலங்கை விமானப்படையும் தனது இரவு நேர தாக்குதல் வலிமையை காட்டும் நோக்குடன் இரவு நேர தாக்குதல்களையும் பரா வெளிச்சக்குண்டுகளின் உதவியுடன் நடத்தி வருகின்றது. ஆனால் அது எவ்வளவு தூரம் இலக்குகளை சரியாக தாக்கும் என்பது கேள்விக்குறியே. ஏனெனில் விடுதலைப் புலிகளினால் குறிவைக்கப்படும் இலக்குகளும் இலங்கை விமானப்படையால் குறிவைக்கப்படும் இலக்குகளும் வேறுபட்டவை. மூன்றாம் ஈழப் போரில் தரைப்படையும் கடற்படையும் விமானப்படையும் சந்தித்த பெரும் இழப்புக்களை தொடர்ந்து எதிர்காலத்தில் ஏற்படும் போரை எதிர்கொள்ள அரசு தனது விமானப் படையை நவீனமயப்படுத்த எண்ணியது. அதன் தொடர்ச்சியாக கடந்த 10 வருடங்களில் இலங்கையின் விமானப்படை பெருமளவில் படைக்கல அதிகரிப்புக்களை செய்துள்ளதுடன் அதனை நவீனமயப்படுத்தியும் வந்துள்ளது. இந்த மிலேனியத்தின் முதல் மூன்று வருடங்களிலும் விமானப்படை 07 எம்.ஐ 35P 03 யுn-32இ 02 -130 மு ர்நஉரடநள ஊ1 06 மிக் - 27 ஆ 01 மிக் - 23 ருடீ 06 மு-8ளஇ 10 Pவு-6ளஇ 04 கிபீர் - ஊ 2இ 04 கிபீர் - ஊ7 போன்றவற்றை கொள்வனவு செய்திருந்தது. இது இன்றைய விமானப்படையின் பலத்தில் 30 விகித அதிகரிப்பாகும். மேலும் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையிலான போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட 2002 ஆம் ஆண்டு காலப்பகுதியை விமானப்படை தனக்கு மூச்சுவிடும் காலப்பகுதியாக பயன்படுத்தியிருந்தது. இந்த அவகாசத்தில் தனது படையை மீள ஒழுங்குபடுத்தியிருந்தது. புதிய விமானிகளுக்கு பயிற்சி அளித்ததுடன்இ பயிற்சி நடவடிக்கைகளையும் புதிய கொள்வனவுகளையும் முடுக்கி விட்டிருந்தது. கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற இராணுவத் தளபதி மீதான குண்டுத் தாக்குதலை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாள் இலங்கையின் விமானப்படையின் 10 ஆவது ஜெற் ஸ்குவாட்ரன் சம்பூரில் மேற்கொண்ட வான் தாக்குதலுடன் அரசின் வான் தாக்குதல் மீண்டும் ஆரம்பித்திருந்தன. அதன் பின்னர் விமானப்படை எண் கணக்கற்ற தாக்குதல்களை தனது மிகை ஒலி விமானங்களின் மூலம் மேற்கொண்டு வருகின்றது. 1983 ஆம் ஆண்டு விடுதலைப் போர் ஒரு உக்கிர நிலையை அடைந்த போதும்இ 1991 ஆம் ஆண்டே இலங்கை அரசு மிகை ஒலி விமானங்களை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்தியிருந்தது. பின்னர் தனது போர் விமானங்களை நவீனமயப்படுத்துவதற்காக 1991 ஆம் ஆண்டு சீனாவிடம் இருந்து 02 ளூநலெயபெ குவு-5 01இ ஊரiணாழர குவு-7 04 ஊhநபெனர கு-7டீளு (இது மிக்-19 வகையின் பிரதி வடிவமாகும்) ஆகிய மிகை ஒலி விமானங்களை அரசு கொள்வனவு செய்திருந்தது. புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட இந்த விமானங்களை கொண்டு 05 ஆவது ஸ்குவான்ரன் பிரிவு 1991 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் நாள் அமைக்கப்பட்டு அது கொழும்பின் வடக்கில் உள்ள கட்டுநாயக்க வான்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. 1996 ஆம் ஆண்டு இஸ்ரேலிடம் இருந்து கிபீர் போர் விமானங்களை கொள்வனவு செய்யும் வரை இந்த விமானங்களே சமர்களங்களிலும்இ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வீச்சுக்களிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டது. 1995 ஆம் ஆண்டு ஜூலையில் விடுதலைப் புலிகளின் ஏவுகணைக்கு இலங்கை விமானப் படையின் புக்காரா குண்டு வீச்சு விமானம் உட்பட்டதை தொடர்ந்து இவற்றின் பயன்பாடு மேலும் அதிகரித்திருந்தது. எனினும் இவற்றின் அதீத பாவனையால் அவை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் தமது ஓய்வு நிலையை அடைந்து விட்டன. 1990 களின் இறுதிப் பகுதியில் அவை பயன்படுத்த முடியாத நிலையில் தரையில் நிறுத்திவைக் கப்பட்டிருந்ததுடன் மேலதிக மறுசீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. இதே நேரம் கட்டுநாயக்க வான்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் 2000 ஆம் ஆண்டு கு-7 ரக விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியிருந்தது. குவு-5 ரக விமானங்கள் 500 மணிநேர பாவனைக்கு பின்னர் அல்லது 5 வருடங்களுக்கு பின்னரும்இ குவு-7 ரக விமானங்கள் 800 மணிநேர பாவனைக்கு பின்னர் அல்லது 8 வருடங்களுக்கு பின்னரும் புனரமைப்பு செய்யப்பட வேண்டும். இலங்கை அரசு பாகிஸ்தான் அரசுடன் மேற்கொண்ட உடன்பாட்டை தொடர்ந்து இந்த விமானங்களை மறுசீரமைக்கும் பணிகள் பாகிஸ்தானின் Pயமளைவயn யுநசழ யெரவiஉயட ஊழஅpடநஒ (Pயுஊ) இற்கு வழங்கப்பட்டது. 03 கு-7டீளுஇ 01 குவு-7இ 02 குவு-5 என்பன மேலதிக புனரமைப்பு வேலைகளுக்காக பாகிஸ்தானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் 2005 ஆம் ஆண்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. ஐந்து வருடங்கள் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த விமானங்கள் தற்போது கிபீர் விமானங்களுடன் ஆதரவு தாக்குதல் விமானங்களாக தரை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுவதுடன் பயிற்சி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவை இரண்டாம் பட்சமாக வான் பாதுகாப்பையும் வழங்கக்கூடியவை. விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருப்பதும்இ விமான ஓடுபாதை இருப்பதும் அறியப்பட்ட பின்னர் அரசு தனது வான்பாதுகாப்பு நடைமுறைகளில் அதிகம் அக்கறை செலுத்தி வருவதும்இ நவீன ராடர்களை வாங்கி குவிப்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் கு-7 விமானங்களின் ஓய்வு நிலையை அடுத்தும்இ களத்தில் விமானப்படையின் தாக்குதல் விமானங்களின் தேவையை உணர்ந்தும் 1996 ஆம் ஆண்டு அரசு அமெரிக்காவின் அனுமதியுடன் இஸ்ரேலிடம் இருந்து கிபீர் விமானங்களை கொள்வனவு செய்தது. அதன் பின்னர் கிபீரே பிரதான போர் விமானமாக பயன்படுத்தப்பட்டும் வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரலில் அரசினால் ஆரம்பிக்கப்பட்ட வான் தாக்குதல்கள் தற்போது தினசரியான வான் தாக்குதல்களான உக்கிரமடைந்துள்ள நிலையில் கிபீர் விமானங்களே பிரதான பங்கு வகிக்கின்றன. 1996 ஆம் ஆண்டு 04 கிபீர் ஊ2 ரக விமானங்களையும்இ 01 கிபீர் வுஊ2 ரக விமானத்தையும் கொள்வனவு செய்திருந்த இலங்கை அரசு பின்னர் 2001 ஆம் ஆண்டு மேலும் 04 கிபீர் ஊ2இ 04 கிபீர் ஊ7 போன்றவற்றை கொள்வனவு செய்திருந்தது. இலங்கை அரசிடம் மூன்று வேறுபட்ட வகையான கிபீர் விமானங்கள் உள்ளனஇ கிபீர் ஊ2இ கிபீர் வுஊ2 (பயிற்சி விமானம்)இ 2001 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட நவீன தொழில்நுட்பமுடைய 04 கிபீர் ஊ7 என்பன உள்ளன. இந்த நவீன தொழில் நுட்பமுடைய கிபீரில் இரண்டு கிபீர் ஊ7 விமானங்கள் கட்டுநாயக்க தாக்குதலின் போது 2001 ஆம் ஆண்டு அழிந்து போனது. இதன் பின்னர் தனது பயிற்சித் தேவைகளுக்காக இலங்கை அரசு மேலும் ஒரு கிபீர் வுஊ2 வகை விமானத்தை 2001 ஆம் ஆண்டு டிசம்பரில் கௌ;வனவு செய்திருந்தது. இலங்கை அரசிடம் உள்ள 14 கிபீர் விமானங்களில் 02 கிபீர் ஊ7 நவீனரக விமானங்கள் கட்டுநாயக்க மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலிலும்இ 01 கிபீர் ஊ2 விமானம் 1997 ஆம் ஆண்டு நீர்கொழும்பு கடல் ஏரியில் வீழ்ந்தன. கடந்த ஆண்டு செப்ரம்பர் மாதம் 5 ஆம் நாள் விமான ஓடுபாதையில் இருந்து புறப்படும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் ஒரு கிபீரும்இ கடந்த ஆண்டு ஓக்டோபர் மாதம் 16 ஆம் நாள் கிழக்கிலங்கையில் தாக்குதலை நடத்திவிட்டு திரும்பி வரும்போது நீர்கொழும்பு கடலேரியில் ஒரு கிபீரும் (ஊ2) வீழ்ந்து நொருங்கியுள்ளன. இந்த மூன்று நிகழ்வுகளிலும் விமானிகள் உயிர் தப்பியிருந்தனர். அதாவது விமானப்படை தன்வசமுள்ள 12 தாக்குதல் கிபீர் விமானங்களில் 05 ஐ இது வரையில் இழந்துள்ளதுஇ இது கிபீர் விமானங்களின் 41 விகித இழப்பாகும். எனினும் களத்தின் விரிவாக்கம் கிபீர் விமானங்களை விட சிறிதளவு அனுகூலங்கள் கூடிய மிக் ரக விமானங்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு அரசை தள்ளியது. அதன் தெரிவாக மிக்-27டீ ரக தாக்குதல் விமானங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இந்த விமானங்கள் கிபீர் விமானங்களை விட அதிக நிறையுள்ள குண்டுகளை காவுவதுடன்இ குறுகிய விமான ஓடுபாதையும் அதற்கு போதுமானது. எனவே அதிகளவு விமானத் தாக்குதல்களின் தேவையுள்ள வடமுனை போர்க்களத்தை இலகுவில் அடையக்கூடியவாறு இவை அனுராதபுர விமானப்படைத் தளத்தில் வைத்தும் பயன்படுத்தப்படலாம். 2000 ஆம் ஆண்டு 04 மிக்-27 ஆ ரக விமானங்களும்இ இரு இருக்கைகளை கொண்ட 01 மிக்-23 ருடீ விமானமும் கொள்வனவு செய்யப்பட்டதுடன் (ஸ்குவாட்ரன்-05) வான் படையின் தரை தாக்குதல் வலு மேலும் அதிகரித்திருந்தது. இவற்றில் மிக்-23 ருடீ பயிற்சி விமானமாகும். கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் இந்த விமானங்கள் மிகவும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருந்தன. மோதல்களின் அதிகரிப்பை அடுத்து அரசு மேலும் 02 மிக்-27ஆ ரக விமானங்களை அதே ஆண்டு கொள்வனவு செய்திருந்தது. மிகவும் அதிகளவான பாவனையால் அதன் ஓய்வு நிலையை வேகமாக அடைந்த இந்த விமானங்கள் நாலாம் கட்ட ஈழப்போரின் ஆரம்ப தாக்குதல்களில் பங்கெடுக்கவில்லை. மேலும் கொள்வனவு செய்யப்பட்ட 06 மிக்-27ஆ தாக்குதல் விமானங்களில் 03 விமானங்களை (அதாவது 50மூ) விமானப்படையினர் இழந்திருந்தனர். எஞ்சிய 03 விமானங்களும் மேலதிக மறுசீரமைப்பு வேலைகளுக்காக உக்கிரைனுக்கு அனுப்பப்பட்டது. 2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்க தாக்குதலில் ஒரு மிக்-27 விமானம் அழிந்ததுடன்இ அதே ஆண்டின் ஆகஸ்ட்டில் சீதுவை கடற்பரப்பில் ஒரு மிக்-27 ரக விமானம் வீழ்ந்து நொருங்கியது (இதில் உக்ரைன் விமானி கொல்லப்பட்டிருந்தார்). பின்னர் பயிற்சி நடவடிக்கையின் போது 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நீர்கொழும்பு கடல் நீரேரியில் ஒரு மிக்-27 வீழ்ந்து நொருங்கியது. எனினும் நாலாம் கட்ட ஈழப்போரில் மிக் விமானங்களின் அவசர தேவையை உணர்ந்த இலங்கை அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேலும் 04 மிக்-27 விமானங்களை கொள்வனவு செய்திருந்தது. இந்த வருடம் ஜனவரி மாதம் இலங்கையை வந்தடைந்த இந்த விமானங்கள் பெப்ரவரி மாதம் உத்தியோகபூர்வமாக விமானப்படையில் இணைக்கப்பட்டதுடன்இ பெப்ரவரி 04 ஆம் நாள் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது அது பொதுமக்களின் முன் தனது முதற்பறப்பை மேற்கொண்டிருந்தது. இதனிடையே 1990 களின் பிற்பகுதியில் தனது விமானப்படையை நவீனமயப்படுத்தும் அரசின் முயற்சியில் விமானிகளுக்கான பயிற்சிகளையும் இலங்கையில் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கென சீனாவிடம் இருந்து 6 Nயுஆஊ மு-8 முயசயமழசரஅள மற்றும் 10 யேnஉhயபெ Pவு-6 ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. 2001 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையை வந்தடைந்த இந்த விமானங்களில் Pவு-6 ரக விமானங்களை கொண்டு ஸ்குவாட் ரன்-01 உருவாக்கப்பட்டு அனுராதபுரத்தில் நிறுத்தப்பட்டதுடன்இ மு-8 விமானங்களை கொண்டு ஸ்குவாட்ரன்- 14 உருவாக்கப்பட்டு கட்டுநாயக்க அதன் தளமாக்கப்பட்டது. இந்த விமானங்கள் மிக்இ கிபீர் போன்ற விமானங்களை ஓட்டக்கூடிய விமானிகளுக்கு பயிற்சி அளிக்கக் கூடிய விமானங்களாவதுடன்இ தரை மற்றும் வான் தாக்குதல்களுக்கும் பயன்படுத்தக் கூடியவை. அனுராதபுரத்தை தளமாக கொண்ட ஸ்குவாட்ரன்-01 இன் Pவு-6 ரக விமானம் ஒன்று கடந்த மார்ச் மாதம் பயிற்சி நடவடிக்கையின் போது அனுராதபுரத்தில் வீழ்ந்து நொருங்கியிருந்தது. மேலும் ஸ்குவாட்ரன்-14 இன் உத்தியோகபூர்வ வைபவத்திற்கு முதல் நாள் கட்டுநாயக்கா வான்படைத் தளம் விடுதலைப்புலிகளின் விசேட படைநடவடிக்கைக்கு உள்ளாகியதில் 03 மு8 விமானங்கள் அழிந்து போயிருந்தன. எனினும் பயிற்சி விமானங்களின் முக்கியத்துவம் உணர்ந்து இலங்கை அரசினால் இழக்கப்பட்ட விமானங்களுக்கான பதில் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. அவை 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் படையில் இணைக்கப்பட்டன. போக்குவரத்து விமானங்களை பொறுத்த வரையில் மூன்றாம் கட்ட ஈழப்போரில் அரசு அதிகளவான போக்குவரத்து விமானங்களையும்இ போக்குவரத்து உலங்கு வானூர்திகளையும் இழந்திருந்தது. போரில் தாக்குதல் விமானங்களைவிட கனரக போக்குவரத்து விமானங்களின் இழப்பு பல மடங்கு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியவை. ஏனெனில் அவற்றின் பெறுமதிகள் அதிகமாவதுடன்இ அவை வீழ்ந்து நொருங்கும் போது இழக்கப்படும் ஆள்இ ஆயுத தளபாட இழப்புக்களும் அதிகம். மேலும் அவற்றின் பற்றாக்குறை களமுனைகளில் படையினரை நகர்த்துவதுஇ காயமடைந்த படையினரை அகற்றுவதுஇ அவர்களுக்கான வழங்கல்களை மேற்கொள்வது என்பவற்றில் அதிக தாக்கங்களை உண்டு பண்ணும். உதாரணமாக 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வசாவிளானில் வைத்து அவ்ரோ விமானம் விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான பின்னர் இலங்கை விமானப்படை 12 போக்குவரத்து விமானங்களையும் உலங்கு வானூர்திகளையும் இழந்துள்ளது. இவற்றில் இரண்டு அவ்ரோஇ 04 அன்ரனோவ் யுN-32இ 01 அன்ரனோவ் யுN-24இ இரண்டு லு8இ நான்கு ஆஐ-17 உலங்கு வானூர்திகள் என்பன அடங்கும். இவற்றின் இழப்புக்களின் போது 300 இற்கும் மேற்பட்ட படையினர் பலியாகியிருந்தனர் எனவே தனது போக்குவரத்து விமானங்களின் பலத்தை அதிகரிக்க பிரித்தானியாவிடம் இருந்து 02 ஹெக்கூல்ஸ் ஊ-130மு (நஒ - சுயுகு ர்நசஉரடநள ஊ1) கனரக சரக்கு விமானங்களை 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விமானப்படை கொள்வனவு செய்தது. இதன் மூலம் இரத்மலானையை தளமாக கொண்ட கனரக போக்குவரத்து ஸ்குவாட்ரன் 02 (ழே 2 ர்நயஎல வுசயnளிழசவ ளுஙரயசனழn) உருவாக்கப்பட்டது. இந்த விமானங்கள் விமானப்படையிடம் இருந்த சிறிய எண்ணிக்கையான அன்ரனோவ் யுN-32 மற்றும் சீனத் தயாரிப்பான ஒரு லு-8 (அன்ரனோவ் யுN-12 இன் பிரதி வடிவம்) என்பனவற்றிற்கு பெரும் பலத்தை அன்று சேர்த்திருந்தது. எனினும் இறுதியாக இருந்த லு-8 விமானமும் 2002 ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீழ்ந்து நொருங்கிவிட்டது. கொள்வனவு செய்யப்பட்ட ஹெக்கூல்ஸ் ஊ-130மு விமானங்களில் ஒன்று தனது ஓய்வு நிலையை அடைந்ததுடன்இ அது ஜோர்டானில் உள்ள யுநசழளியஉந ஊழஅpயலெ யின் உதவியுடன் மறுசீரமைக்கப்பட்டுஇ சுயபாதுகாப்பு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது பெருமளவிலான படையினரை கொண்டுள்ள யாழ். குடாநாட்டின் வான் வழி வழங்கல் தளமான பலாலி விமானப்படைத் தளத்தின் ஓடுபாதை புனரமைப்புச் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது. அதற்காக பாகிஸ்தானின் உதவியும் நாடப்பட்டுள்ளது. எனவே அங்கு கனரக விமானங்களின் தரையிறக்கம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மாற்றீடாக தமது அவசியமான விநியோகங்களுக்கு உலங்கு வானூர்திகளையே இலங்கை வான்படையினர் பெரிதும் நம்பியுள்ளனர். இந்தப் பணிகளில் முக்கிய பங்கு வகிப்பது ஆஐ-17 ரக (ஸ்குவாட்ரன்-06) உலங்குவானூர்திகளாகும். எனினும் இலங்கை விமானப்படையிடம் பயன்படுத்தக் கூடியதாக உள்ள ஆஐ-17 ரக உலங்கு வானூஈர்திகளின் எண்ணிக்கை போதுமானதாக இருக்கவில்லை. அதை ஈடுசெய்யும் முகமாக தற்காலிக அடிப்படையில் இரு ஆஐ-17 உலங்குவானூஈர்திகளை தந்துதவுமாறு இந்திய அரசிடம் இலங்கை பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றது. அதேசமயம் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலையில் இலங்கை அரசினால் கொள்வனவு செய்யப்பட்ட இரு ஆஐ-17ஏ5 உலங்கு வானூர்திகளும் அதன் பலத்தை ஓரளவு ஈடுசெய்துள்ளன. இந்த உலங்குவானூர்திகள் ஹசன் உலங்குவானூர்திகள் (முயணயn ர்நடiஉழிவநச Pடயநெவ துளுஊ) தயாரிக்கும் தொழிற்சாலையில் தாயாரானவை. இது சாதாரண ஆஐ-17 உலங்கு வானூர்திகளை விட தரமானவை. தாக்குதல் உலங்குவானூர்திகளை பொறுத்த வரையில் 1995 ஆம் ஆண்டு நவம்பரில் வாடகைக்கு பெறப்பட்ட 03 ஆஐ-24 ர்iனௌஇ வகை உலங்குவானூர்திகளை கொண்டு ஸ்குவாட்ரன்-09 அமைக்கப்பட்டது. ஹிங்குரான் கொடவை தரிப்பிடமாக கொண்ட இந்த அணியில் இன்று ஒரு டசினுக்கும் மேற்பட்ட ஆஐ-24ஏ' hiனெ-நுள'இ ஆஐ-24P' மற்றும் ஆஐ-35P' hiனெ-குள' வகை உலங்குவானூர்திகள் உள்ளன. இந்த உலங்குவானூர்திகளின் இரவு நேர தாக்குதல் நடவடிக்கைகளை அதிகரிக்கும் முகமாக ஊழஅpயஉவ ஆரடவi-Pரசிழள யுனஎயnஉநன ளுவயடிடைணைந ளுலளவநஅள (ஊழுஆPயுளுளு) என்னும் தொகுதியை அரசு கொள்வனவு செய்திருந்தது. இது கண்காணிப்புஇ கண்டறிதல் போன்ற பணிகளை வான்இ கடல்இ தரைகளில் ஆற்றக்கூடியது. மேலதிகமாக இது பல வகையை சேர்ந்த பார்வைப்புல (ஏளைiடிநட) உணர்கருவிகளையும் லேசருடன் உள்ளடக்கியுள்ளது. இந்த தொகுதியில் தூரக்கணிப்புக்கள் (சுயபெந கiனெநசள) போன்றனவும் உண்டு. இவை தவிர 2001 ஆம் ஆண்டு நுடவய நுடுஃஆ-2160 ஆளைளடைந யுppசழயஉh றுயசniபெ ளுலளவநஅ என்னும் உபகரணங்களும் உங்கு வானூர்திகளின் சுய பாதுகாப்புக்கு என பொருத்தப்பட்டுள்ளன. மூன்றாம் ஈழப்போரில் இந்த உலங்கு வானூர்திகள் சந்தித்த இழப்புக்கள் கணிசமானவை. அதாவது 07 ஆஐ-24 ரக உலங்கு வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டும்இ வீழ்ந்து நொருங்கியும் அழிந்து போயிருந்தன. எனவே விடுதலைப் புலிகளின் வான்காப்பு படையணியின் அச்சம் காரணமாக நடந்து வரும் நாலாம் கட்ட ஈழப்போரில் தாக்குதல் உலங்குவானூர்திகளின் பயன்பாடு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டே உள்ளது. மிகை ஒலி விமானங்கள் மூலம் மிகவும் அதிக தொலைவில் இருந்து அல்லது மிகவேகமாக வந்து தாக்கிவிட்டுத் திரும்பும் உத்தியை தான் இலங்கை விமானப்படை கையாண்டு வருகின்றது. நன்றி: வீரகேசரி (22.04.07)