Showing posts with label நாடு கடந்த அரசாங்கத் தேர்தல். Show all posts
Showing posts with label நாடு கடந்த அரசாங்கத் தேர்தல். Show all posts

Monday, July 12, 2010

தமிழர்கள் மட்டும் பதிவுக்கு உட்படுத்தப்படும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது – மனோ கணேசன்

தமிழர்கள் மட்டும் பதிவு செய்யப்படும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை பிரதேச தமிழர்கள் மட்டும் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்த வேண்டுமென மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழர்களை மட்டும் பதிவுக்கு உட்படுத்துவதன் மூலம் இன ஐக்கியத்திற்கு பங்கம் ஏற்படக் கூடுமென மனோ கணேசன் கடிதம் மூலமாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் தமிழர்களின் பிரச்சினைகள் இன்னமும் முடிவடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தை மீறும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க பூரண உரிமை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நபர்கள் தொடர்பான பதிவுகளை புள்ளி விபரத் திணைக்களம் தொழில்சார் ரீதியில் நாகரீகமாக மேற்கொண்டிருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Wednesday, May 05, 2010

தேர்தல் வெற்றி - மக்கள் சுதந்திர தமிழீழத்திற்குக் கொடுத்த ஆணையாகும் : எஸ்.ஜெயானந்தமூர்த்தி

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் எனக்குக் கிடைத்த அமோக வெற்றி புலம் பெயர் மக்கள் சுதந்திர தமிழீழத்திற்குக் கொடுத்த ஆணையாகும். இதற்கு வாக்களித்த மக்களுக்கு தலைசாய்த்து தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக லண்டன் வடமேற்கில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளால் வெற்றி பெற்று முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் எனக்காக வாக்களித்த மக்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனக்கு கிடைத்த வெற்றி என்பது அது எனக்கான தனிப்பட்ட வெற்றியாக நான் கருதவில்லை. நான் கொண்டுள்ள உறுதியான கொள்கைக்கும் தமிழ் தேசியத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தமிழ் இறைமை என்பதற்கு புலம் பெயர் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நான் தாயகத்தில் வாழும் மக்களின் மீள்குடியேற்றம் உட்பட அவர்களின் அமைதியான சகஐ வாழ்க்கைக்கும் முன்னுரிமை கொடுத்து செயற்படுவதோடு போர் குற்றச் செயல்களை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்வதுடன் தாயகக் கொள்கையை விட்டுக் கொடுக்காது எமது இலட்சியமான தமிழிழம் என்ற இலக்கை அடைய உறுதியோடு செயற்படவுள்ளேன்.

இவ் உயரிய கொள்கையுடன் செயற்பட உள்ள என்னைத் தெரிவு செய்த எனது அன்பான மக்களுக்கு நான் தலைசாய்த்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் கனடாவில் 31,000 தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (2) நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் கனடாவில் 31,072 தமிழ் மக்கள் வாக்களித்து 25 பிரதிநிதிகளை தேர்தந்தெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கனடாவில் நடைபெற்ற தேர்தலில் 20 பிரதிநிதிகள் தேர்தல் மூலமும், 5 பிரதிநிதிகள் போட்டியின்றியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தெரிவுசெய்ப்பட்டவர்களின் விபரங்கள் வருமாறு:

தேர்தல் தொகுதி -1 (ரொறொன்டோவும் அதன் புறநகர் பகுதிகளும்)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 7,006

1. தாரணி பிரபாகரன் (4,967)
2. திரு எஸ் திருச்செல்வம் (4,936)
3. எம் கே ஈழவேந்தன் (4,161)
4. பொன் பாலராஜன் (3,777)
5. ஜோய் அந்தோனி (3,388)

தேர்தல் தொகுதி -1 (கிழக்கு ஒன்ராறியோ)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 12,026

1. வனிதா ராஜேந்திரம் (8,451)
2. ஈசன் குலசேகரம் (7,810)
3. வரன் வைத்திலிங்கம் (6,523)
4. மரியம்பிள்ளை அஞ்சலோ யோகேந்திரன் (6,478)
5. சுரேஸ் ரட்னபாலன் (6,109)

தேர்தல் தொகுதி -1 (மேற்கு ஒன்ராறியோ)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 6,621

1. ஐயம்பிள்ளை (சன்) சண்முகநாதன் (5,049)
2. சுரேன் மகேந்திரன் (5,002)
3. சாம் சங்கரசிவம் (4,997)
4. ராம் சிவலிங்கம் (4,993)
5. பாலன் ரட்ணராஜா (4,844)

தேர்தல் தொகுதி -1 (கியூபெக் மற்றும் கிழக்கு கனடா)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 5,419

1. கந்தையா தெய்வேந்திரன் (2,690)
2. மகாராஜா (நந்தன்) நந்தகுமார் (2,818)
3. நிருதன் நாகலிங்கம் (2,794)
4. லக்சன் சிவப்பிரகாசப்பிள்ளை (3,221)
5. புவனேந்திரா நடராஜா (2,557)

தேர்தல் தொகுதி -1 (மேற்கு கனடா)
போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டவர்கள்

1. மோகனசிங்கம் மார்க்கண்டு
2. சோதிநாதன் சுமுகன்
3. நாகேந்திரா கற்பனா
4. முத்துக்குமாரசாமி ரட்ணா
5. சிவசோதி ஜெயமதி

Tuesday, May 04, 2010

பிரித்தானியாவில் தேர்தல் முடுவுகள் தேர்தல் ஆனையகத்தால் அறிவிப்பு

பிரித்தானியாவில் நேற்றைய தினம் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் முடிவுகளை இன்று 03-05-2010 திங்கட்கிழமை மதியம் ஒரு மணிக்கு தேர்தல் ஆணையகத்தால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நேற்றைய தினம் வாக்களிப்பு நிலையங்களில் இருந்து லண்டன் சொரஸ்ரியன் சென்ரர் மண்டபத்திற்கு இரவு 10:30 க்கு வாக்குப்பெட்டிகள் கொண்டுவரப்பட்டு அங்கு மக்கள் முன்னிலையில் இரவு 11:30 முதல் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமானது.

வாக்குகள் எண்ணிக்கொண்டிருக்கும் போது ஏற்பட்ட சில குழப்பநிலை காரணமாக வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பாக எந்தவித அறிவித்தல்கலையும் விடாது தேர்தல் ஆணையகம் அனைத்து வாக்களிப்பு நிலையங்களின் முடிவும் வரும் வரை பொறுமை காத்தது.

இரவிரவாக தொடர்ச்சியாக எண்ணப்பட்டு வந்தபோதிலும் லண்டனுக்கு உட்பட்ட மூன்று தொகுதி வாக்குகளின் எண்ணிக்கையும் இன்று காலை 11:45 மணிக்கே முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டது.

இந்த நிலையில் லண்டன் தவிர்ந்த ஏனைய பிரித்தானிய பிரதேசங்களின் வாக்குப்பெட்டிகள் இன்று காலை 09:15 மணிக்கு பின்னரே வாக்குகள் எண்ணப்படும் இடத்திற்கு வந்திருந்தது. அதன் பின்னர் அந்த வாக்குப்பெட்டிகளில் இருந்த வாக்குகலை எண்ணும் பண்ணியை ஆரம்பித்தனர்.

ஆனால் வாக்குப்பெட்டிகளை திறந்து வாக்குகள் எண்ண ஆரம்பித்த அலுவலகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதாவது மூன்று பிரிவுகளை சேர்ந்த மூன்று வெவ்வேறு வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்ட போது அதில் அதிகலவான வாக்கு மோசடி இடம்பெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடன் தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையாளர் அங்கு பண்புரிந்தவர்களுடனும் ஆலோசித்து பின்னர் மோசடிசெய்யப்பட்ட வாக்குப்பெட்டிகளுக்குரிய வாக்குகள் மட்டுமன்றி லண்டன் தவிர்ந்த ஏனைய பிரித்தானிய பிரதேசங்களின் வக்குகள் அனைத்தும் செல்லாது எனவும், அப்பிரதேசங்களில் மீள் வாக்கெடுப்பு நடாத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வாக்குகளின் எண்ணிக்கையையும், வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரங்களையும் தேர்தல் ஆணையாளரின் வேண்டுகோளிற்கிணங்க தேர்தல் கண்காணிப்பிற்கு பொறுப்பாக நின்ற அதிகாரி அறிவித்தார். தெங்கிழக்கு லண்டன் முடிவுகள் இன்னும் இருபத்தினான்கு மணித்தியாலங்களுக்குள் அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:

வடமேற்கு லண்டன்

01) சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி -8377 வாக்குகள்

02) டிலக்சன் மொறிஸ் - 6444 வாக்குகள்

03) பாலாம்பிகை முருகதாஸ் - 5879 வாக்குகள்

04) லலிதசொரூபினி பிரதீபராஜ் - 5521 வாக்குகள்

05) ஜெயவாணி அச்சுதன் - 5446 வாக்குகள்

வடகிழக்கு லண்டன்

01) ஆறுமுகம் ஆர்த்தி - 4154 வாக்குகள்

02) மகேஸ்வரன் சசிதர் - 3796 வாக்குகள்

03) ஹவிராஜ் சண்முகநாதன் - 3758 வாக்குகள்

04) செல்லத்துரை செல்வராஜா - 3296 வாக்குகள்

05) முருகவேள் ஹரன் - 2641 வாக்குகள்

தெங்கிழக்கு லண்டன்

01) மனோரஞ்சன் நிக்லஸ் (தேர்தல் நடைபெறாது போட்டிகள் இன்றி தெரிவானவர்கள்)
02) சுரேந்திரன் ஜனார்த்தனன் (தேர்தல் நடைபெறாது போட்டிகள் இன்றி தெரிவானவர்கள்)

Monday, May 03, 2010

நாடு கடந்த அரசாங்கத் தேர்தல் : நோர்வேயில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு அமோக ஆதரவு

வரலாற்று சிறப்பு மிக்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தேர்தலில், நோர்வே வாழ் மக்கள் நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு பெருமளவில் ஆதரவாய் நின்று தமிழர் ஒருங்கிணைப்பு குழு வேட்பாளர்களை மாபெரும் வெற்றியடையச் செய்துள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் அதிகாரப் பூர்வமாக நோர்வே தமிழர் தேர்தல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது (www.tamilvalg2010.com). 3500 மக்கள் பங்குபெற்ற இத்தேர்தலில், 2500 மக்கள் நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழு பரிந்துரைத்த வேட்பாளர்களுக்கு வாக்கிட்டமை, நோர்வேயில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் செயல்பாடு மற்றும் மக்களிடம் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை எடுத்துகாட்டுவதாக அமைகிறது.

நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழு பரிந்துரைத்த வேட்பாளர்கள், பன்மடங்கு வாக்குவித்தியாசத்தில் வெற்றி ஈட்டியமை நோர்வே வாழ் தமிழ் மக்களின் எண்ணத் திரையை சரியாக காட்டியிருக்கிறது என்று குறிப்பிடலாம்.

எம் தாயக விடியலுக்காய் தம்மை முழுமையாய் அர்பணித்து பாடுபடும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு மக்கள் என்றென்றும் ஆதரவாகவும் பக்கபலமாகவும் இருப்பார்கள் என்பதற்கு இதனைவிட மேலும் ஒரு சான்று தேவையில்லை.

வட்டுகோட்டைத் தீர்மானம் மீளுறுதிப்படுத்தும் தேர்தலாகட்டும், தமிழீழ மக்களவை அமைப்பதிலாகட்டும் அனைத்திற்கும் முன்னோடியாய், உறுதுணையாய் நிற்கும் நோர்வே வாழ் தமிழீழ மக்கள், கொள்கையில் இருந்து என்றும் வழுவாமல், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தேர்தலிலும் காட்டிய நெறிமுறை அனைவருக்கும் நல்லதொரு உதாரணம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் உயரிய லட்சியத்தை அனைத்து தமிழ் மக்களும் ஜனநாயக முறையில் தாங்கிப் பிடித்து எமது இலக்கை அடைய பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கை இதன் மூலம் தெளிவாய் உணரமுடிகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான மக்கள் பிரதிநிதிகள்! நியூசிலாந்தில் முதலாவது உத்தியோகபூர்வமான முடிவுகள் அறிவிப்பு!!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நியூசிலாந்து பிரதிநிதிகள் பற்றிய விபரங்களை நியூசிலாந்து தேர்தல் ஆணையகம்  அறிவித்துள்ளது

நியூசிலாந்தின் Auckland நகரம் உள்ளடங்கிய வடக்குத் தீவின் மேல் அரைப்பங்குப் பகுதிக்குரிய (upper half of the North Island including Auckland) பிரதிநிதியாக திரு தேவராஜன் ஆறுமுகம் அவர்களும் வெலிங்டன் நகரம் உள்ளடங்கலான நியூசிலாந்தின் ஏனைய பகுதிகளுக்கான பிரதிநிதியாக கலாநிதி சிவபாதம் நகுலேஸ்வரன் அவர்களும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என முதன்மைத் தேர்தல் ஆணையாளர் திரு John Minto அவர்கள் அறிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை மக்களிடையே அறிமுகம் செய்வதற்கான சிறப்பு விழாவொன்று ஆக்லாந்து, வெலிங்டன் இரு நகரங்களிலும் இன்று (மே 2 ஆம் நாள்) நியூசிலாந்து நேரப்படி மாலை 7 மணியளிவில் ஆரம்பமாகி ஒரே நேரத்தில் நடந்தேறியுள்ளது.

இவ்விரு நிகழ்வுகளும் காணொளி மூலம் இணைக்கப்பட்ட வகைகியில் பேச்சாளர்கள் இரு அரங்குகளிலும் உரையாற்றும் வாய்ப்பு எற்படுத்தப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையாளர்கள் திரு John Minto வணபிதா Gerard Burns இருவரும் தமது உரையில் பல்வேறு இன்னல்கள் மத்தியிலும் உலகளாவிய ரீதியில் நடாத்தப்படுகின்ற ஜனநாயக வழிமுறைத் தேர்தல்கள் மெச்சத்தக்கவை எனக் குறிப்பிட்டுள்ளார்கள். நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான தொழிற்கட்சியினைச் சேர்ந்த பேராசிரியர் இராஜேந்திர பிரசாத், பசுமைக்கட்சியினைச் சார்ந்த திரு Keith Locke இருவரும் கலந்து கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் இப் புதுமையான முயற்சியையும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் பாராட்டி உரை நிகழ்த்தினர்.

இவ் விழாவின் போது காணொளி மூலம் உரையாற்றிய திரு. ருத்திரகுமாரன் அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூன்றாவது கட்டமாகப் புதியதளத்தில் இன்று உருவாக்கப்படுவதை குறித்துக் கொண்டதோடு எமது உலகளாவிய முயற்சியின் முதலாவது உத்தியோகபூர்வமாக முடிவுகளாக நியூசிலாந்தின் முடிவுகள் அமைந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.