Friday, March 09, 2012

நாம் போராடியே ஆக வேண்டும்- இல்லையேல் சிறிலங்கா என்ற நாட்டிற்கு​ள் இருந்து நாம் அழிந்து விடுவோம்

மார்ச் 17! பிரான்சில் மாபெரும் ஒன்று கூடல்! 2ஆம் உலகப்போரின் உக்கரத்தில் இருந்து விடுபட்டு 64 வருடங்கள், அந்தப்போரின் உக்கரத்தில் உலகம் கண்ட அழிவுகள் – இனிமேல் இனங்களின் அழிவுகள் வேண்டாம் என்றும் நாடுகளுக்கு இடையே நல்லுறவு உருவாக்கு ஐக்கிய நாடுகள் சபை உருவானது. அதே ஐக்கிய நாடுகள் சபை மக்களின் உரிமையை பாதுகாக்க மனிதவுரிமை சாசனத்தை எழுதியது.

இந்த மனிதவுரிமை சாசனத்துக்கு அமைய மக்களும் தாம் வாழும் நாடுகளில் எல்லா மக்களையும் போல் தாங்களும் உரிமையுடன் வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.

ஆனால் மக்கள் அடைந்தது ஏமாற்றமே! 64 வருடங்களாக தமிழர், பாலஸ்தீனர், திபெதினர், கூர்திச்தான் மக்கள், பயாப்ரா, ருவாண்டா, டார்பூர், ச்செனி, கம்போடிய, யூகோசொல்வேகிய, லிபியா, துனிசியா, அல்ஜெரியா, எகிப்து, சூடான், காங்கோ, லிபேரியா, இராக், ஆப்கானிஸ்தான், இன்று சிரியா என்று படுகொலைகளும், இனப்படுகொலைகளும் தொடரும் கதைகள்.

எதை வேண்டாம் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டதோ, அதையே ஐக்கிய நாடுகள் சபையை இயக்கும் பாதுகாப்பு சபை நாடுகளாகிய அமெரிக்க, ரஷ்யா, சீனா, பிரிந்த்தானியா, பிரான்சு, இந்த படுகொலைகள், இன அழிப்புகளை தடுக்க முடியாமல் அதற்கு துணை போவது போல செய்யும் செயல்பாடுகள், இந்த ஐக்கிய நாடுகளின் சபையை கேள்வி குறியாக ஆகி விட்டு நிற்கிறது.

இந்த இன அழிப்புகள் தொடராமல் இருக்க, மனிதவுரிமை சாசனத்தில் எழுதியது போல் சகல இன மக்களும் சுய நிர்ணய உரிமையுடன் எல்லா இன மக்களுக்கும் சமமாக வாழ பிரான்சில் பாரிஸ் நகரில் மார்ச் 17 மாலை 2h00 மணிக்கு பர்பஸ் (Barbes ligne 2-4) மெட்ரோவுக்கு அருகில் அணைத்து இன மக்களுடன் சேர்ந்து உலக மக்களின் சுய நிர்ணய உரிமைகளை வலியுறுத்தி மாபெரும் ஒன்றுகூடல்.

இன்று அமெரிக்க தமிழர்களின் உரிமைகளை காக்க சிறி லங்கா அரசின் ஆணைகுழு சமர்பித்த சில தீர்மானங்களை நடைமுறை படுத்த வேண்டும் என்று கூறி நிற்கும் நிலையில், 64 வருடங்களாக நடைபெற்ற இன அழிப்பை பற்றி அதில் இருந்து தமிழ் இன மக்களை மீட்க இந்த சர்வதேச நாடுகள் கற்று அறிய வேண்டியது நிறையவே இருக்கிறது என்று உலக சகல இன மக்களுடன் சேர்ந்து போராடுவோம்.

இன்று நாம் போராடியே ஆக வேண்டும்- இல்லையேல் சிறி லங்கா என்ற நாட்டிற்குள் இருந்து நாம் அழிந்து விடுவோம்.

இன்று போராட்டம் சர்வதேசத்தின் முன் நிற்பதால் தமிழ் இனமே சகல இனமக்களுடன் சேர்ந்து எல்லா இன மக்களின் விடுதலையை வலியுருந்துவோம் வாருங்கள்.

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்று இந்த உலகத்திற்கு வலியுருதிடுவோம்.

மார்ச் 17 உலக மக்கள் சகல காலனித்துவ ஆட்சி முறையில் இருந்து விடுதலை தேடி நிற்கும் நாள்.

- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

தொடர்புகள்: mte.france@gmail.com

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.