Friday, March 09, 2012

சங்கீதன் இறந்து விட்டார்: அவரது மனைவி உறுதிப்படுத்தினார் !

விடுதலைப் புலிகளின் மூத்த புலனாய்வுப் போராளி லெப்டினன் கேணல் சங்கீதன் மற்றும் இளவாணன் ஆகியோர் வீரச்சாவடைந்ததாக அறியப்படுகிறது. இதனை (உண்மையான) சங்கீதன் அவர்களின் மனைவி தற்சமயம் உறுதிசெய்துள்ளார். சங்கீதன் என்று பெயரைக் கேட்டதும் அவர் லண்டனில் அல்லவா இருக்கிறார் ! மாவீரர் நாளை இரண்டாகப் பிளவுபடுத்திய ஆளாச்சே என்று உங்களுக்கு நினைவுவரும். ஆச்சரியம் இல்லை. லண்டனில் தான்-தான் சங்கீதன் என்ற பெயரில் உலாவரும் நபரின் பெயர் தயாபரன் ஆகும். இவர் லெப்டினல் கேணல் சங்கீதனுக்கு கீழ் பணி புரிந்தவர் என்று அறியப்படுகிறது. சமீபத்தில் நாம் வெளியிட்ட செய்தியில் இதனைக் குறிப்பிட்டிருந்தோம்.

அந்த நாள் முதல் மக்கள் அவரிடம் நீங்கள் ஏன் சங்கீதன் என்ற பெயரில் லண்டனில் இயங்குகிறீர்கள் எனக் கேட்டால், ஒரு பிளாஷ்-பாக் கதை ஒன்றை இவர் சொல்லுவது வழக்கமாம் ! அது என்ன தெரியுமா ? நானும் சங்கீதனும் ஊரில் ஒன்றாகத் தான் இருந்தோம் அவர் இறந்தபின்னர் நான் வெளிநாடு வந்தேன். சங்கீதன் மேல் எனக்கு அளவுகடந்த பாசமும் நேசமும், பணிவும் உள்ளது அதனால் அவர் பெயரை நான் எனக்கு வைத்துக்கொண்டேன் என்பது தான். இந்தக் குட்டும், இன்றுடன் உடைந்து சுக்கு நூறானது ! காரணம் உண்மையான சங்கீதனின் மனைவி தற்சமயம் வெளிநாடு ஒன்றிற்கு வந்துள்ளார். அவரை இதுவரை எவரும் ஏரெடுத்துப் பார்த்தது இல்லை என்றும், தான் மிகுந்த கஷ்டத்துக்கு ஆளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லண்டனில் உண்ணாவிரத்தை மேற்கொண்டு, பாரிய எழுச்சியை ஏற்படுத்திய பரமேஸ்வரன் மற்றும் இளையோர்களால் நடத்தப்படும் தமிழீழ புரட்சிகர மாணவர் அமைப்பு பணம் சேர்த்து உண்மையான சங்கீதன் குடும்பத்துக்கு அனுப்பியுள்ளது. நாதியற்றுத் தவித்துக்கொண்டிருந்த அக் குடும்பத்தை இவர்களே காப்பாற்றியுள்ளனர். ஆனால் தான் சங்கீதன் மேல் அன்பும் பாசமும் பணிவும் வைத்திருக்கிறேன், அதனால் தான் அவர் பெயரை நான் வைத்துள்ளேன் என்று கூறிவந்த இந்தப் போலி சங்கீதன், ஏன் இவ்வளவு நாளாக உண்மையான சங்கீதனின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு உதவிசெய்யவில்லை ? இவர் இதயசுத்தியோடு இருப்பவர் என்றால் முதல்வேலையாக அவர்களைத் தேடிக்கண்டுபிடித்து உதவி இருப்பாரே.

உண்மையான சங்கீதனின் மனைவி, சொல்லமுடியாத கஷ்டத்திலும் மனவேதனையிலும் இருக்கும்போது, லண்டனில் மாவீரர் தினத்தை எவ்வாறு நடத்துவது என்று ரூம் போட்டு யோசித்தவர்கள் தான் இந்தப் போலி சங்கீதன் என்பது மக்களுக்கு தற்போது நன்கு வெளிச்சமாகியுள்ளது. தனது பிள்ளை குட்டிகளை மட்டும் சொகுசாக இந்தியாவில் ஆடம்பர வீட்டு ஒன்றில் அமர்த்திவிட்டு, குழப்பங்களை மட்டும் தமிழ் மக்களுக்கு பரிசளித்த புண்ணியவான் இவர்தான் !

தனக்கு பிறிதொரு நபரிடம் இருந்து, குறிப்பாக போலியான சங்கீதனிடம் இருந்து எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை என, உண்மையான சங்கீதனின் மனைவி தெரிவித்துள்ளார். ஊரில் உள்ள போராளிகளின் குடும்பங்களை நாம் பராமரிக்கிறோம், அதற்காகவே மாவீரர் தினத்தை லண்டனில் நடத்துகிறோம் என்று சொல்லிவந்த இக் குழுவினர் தற்போது படு மெளனமாக இருக்க காரணம் என்ன ? இனி அடுத்த மாவீரர் தினத்துக்குத் தான் இவர்கள் தலைகாட்டுவார்களா ? தனது அபிமானத்துக்குரியவர் மனைவி மற்றும் அவரது பிள்ளைகளுக்குக் கூட உதவ முன்வராத இந்தப் போலிச் சங்கீதன் பிற போராளிகளின் குடும்பங்களை எவ்வாறு பராமரிப்பார் ? இல்லையே உதவிசெய்வார் ? பெயரை மாற்றியதே போலித்தனம், பின்னர் மக்களை ஏமாற்றுவதும் போலித்தனம், இப்படி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளந்துவிட்ட புலவர் பெருமான் போல் ஆகிவிட்டார் இந்த லண்டன் சங்கீதன்

! இல்லை இல்லை தயாபரன் !









அதிர்வு இணையம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.