Wednesday, March 14, 2012

அதிகாரக் கைப்பற்ற தயாராகும் கோதாபய!ராஜபக்‌ஷவுக்கு எப்போதும் என்னவும் நடக்கலாம்?

மகிந்தவிற்கு ஏதேனும் நெருக்கடி நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குத் தேவையான செயல்திட்டமொன்றை சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் தயாரித்து வருவதாக அறியமுடிகிறது.

இந்த செயல்திட்டத்தில் முக்கிய பல பொறுப்புக்களை ஏற்றுள்ள பங்குச் சந்தையின் முன்னணி பங்குதாரரான திலித் ஜயவீர, கடந்த வாரம் தியதலாவயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது தனக்கு நெருக்கமானவர்கள் சிலருடன் இதுகுறித்து கலந்துரையாடியுள்ளார்.

தியதலாவயில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு வர்த்தகர் திலித் ஜயவீரவிற்கு அமைச்சர் டளஸ் அழகப்பெரும அழைப்பு விடுத்துள்ளார்.நாட்டைக் காப்பாற்றும் பொறுப்பு சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கு பின்னர் ஆந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவிற்கே வழங்கப்பட வேண்டும் என திலித் ஜயவீர இதன்போது தெரிவித்துள்ளார்.

இதற்கான செயல்திட்டம் மகிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட திலித் ஜயவீர, நாமல் ராஜபக்‌ஷவிற்கு உரிய அனுபவம், காலமும் வரும் வரையில், அரச அதிகாரத்தை கோதாபய ராஜபக்‌ஷ தன்வசம் கொண்டிருப்பது அவசியமானது என்பது சிறீலங்கா ஜனாதிபதியின் கருத்தாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயல்திட்டத்திற்கான பணிகள் பல துறைகளின் ஊடாக முன்னெடுக்கப்படுவதுடன், இதற்கான இணைபபுப் பணிகளையும், பொருளாதார இணைப்புப் பணிகளையும் தான் மேற்கொள்வதாக திலித் ஜயவீர இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.