Friday, March 16, 2012

கேள்வி எழுப்புவோரை புலி என வர்ணிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது-மனிதஉரிமைகள் கண்காணிப்பகம்

விமர்சனம் செய்வோரை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.

இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பும் தரப்பினரை அரசாங்கம் புலி ஆதரவாளர்களாக வர்ணிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதனை கவனத்திற் கொள்ள வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதனையே ஐக்கிய நாடுகள் மனித பேரவை தீர்மானம் வலியுறுத்தி நிற்பதாகத் தெரிவித்துள்ளது.மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குரல் கொடுக்கும் தரப்பினர் புலி ஆதரவாளர்களாக சித்தரிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.