Tuesday, March 06, 2012

மன்னார் ஆயரை கைது செய்து நீதிமன்றில் நிறுத்துங்கள்- ஜாதிக ஹெல உறுமய!

இலங்கையின் போர் குற்றங்கள் குறித்து போர் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்திருப்பது இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறிய செயல் என்பதால், அவரை உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

ஆயர் ராயப்பு ஜோசப் கடந்த 30 வருடங்களாக புலிகளின் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வந்துள்ளார். அவர் நாட்டின் ஐக்கியத்தை ஏற்றுக்கொள்ளாத அரசியல் நிலைப்பாட்டிற்கு குரல் கொடுத்து வருபவர். இதனால் புலிகளுக்கு ஆதரவான இவ்வாறான கோரிக்கைகளை விடுக்கும் இவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்க கூடாது என ஆயர்கள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் போது, மன்னார் ஆயர் அதற்கு முரணாக கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஆயர்கள் சபையின் நிலைப்பாடு என்ன என்பதை பேராயர் மெல்கம் ரஞ்சித் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.