Saturday, March 03, 2012

ஐ.நா மனித உரிமைச் சபையில் விவாதப்பொருளான டக்ளஸ் தேவானந்தா !

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கும் முகமாக ஏற்பாடு செய்திருந்த உப மாநாட்டில் விவாதப்பொருளாக, டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாறியதோடு, அன்றைய உபமாநாட்டில் சிறிலங்காவுக்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்திய விடயமாகவும் இது அமைந்து விட்டதென ஜெனீவாச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவினால் ஏற்பாடு செய்திருந்த இந்த உபமாநாடு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி மாணிக்கவாசகர் தெரிவிக்கையில், அண்ணளவாக மூன்று மணி நேரம் இடம்பெற்ற இந்த உப மாநாட்டில், 50க்கும் மேற்பட்ட சிறிலங்கா தரப்பு பிரதிநிதிகளும், 20க்கும் மேற்பட்ட தமிழர்களும் உள்ளடகங்களாக, 150 பேர் பங்கெடுத்திருந்ததாக தெரிவித்தார்.




மேலும் அவர் தெரிவிக்கையில்…

சிறிலங்கா அரசாங்கம் நன்கு திட்டமிட்ட வகையில் பல தமிழர்களை இந்த மாநாட்டில் பங்கெடுக்க வைத்திருந்ததோடு, தன்மீதான குற்றச்சாட்டுக்களை திசை திருப்பும் நோக்கில், அவர்கள் ஊடாகவே, குற்றங்களை விடுதலைப்புலிகள் மீது திசைதிருப்ப முனைந்தது.

மாநாட்டின் தொடக்கத்தில், மூன்று முஸ்லிம் அமைச்சர்களை ஒருபுறமும், டக்ளஸ் தேவானந்தாவை மறுபுறமும் என நடுநாயகமாக இருந்த மகிந்த சமரசிங்க அவர்கள், சிறிலங்கா அரசாங்கம் முஸ்லிம்- தமிழர்களை இருபக்கமும் அணைத்துக் கொண்ட இனநல்லிணக்க அரசாங்கம் என தெரிவித்தார்.

தொடர்ந்து, 2009 ஆண்டு போரின் இறுதிக்காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கு, பொறுப்புக்கூறுவதில் இருந்து சிறிலங்கா தவறிவிட்டது என்ற அழுத்தம் சர்வதேசத்தினால் சிறிலங்கா அரசாங்கம் மீது முன்நிறுத்தப்படும் நிலையில், 2009க்கு முந்திய போர் காலத்துக்கு சென்று, குற்றச்சாட்டுக்களை விடுதலைப் புலிகள் மீது சுமத்துதிலேயே சிறிலங்கா இலக்காக இருந்தது.

நல்லிணக்க ஆணைகுழு அறிக்கையின் பக்கம் விவாதம் திரும்பிய போது, ஒட்டுக்குழுவொன்றின் ஆயுததாரித் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை இங்கு கூட்டி வைத்துக் கொண்டு, நீங்கள் நல்லிணக்க ஆணைக்குழு பற்றி கதைப்பது எந்த அடிப்படையில் என புலம்பெயர் அமைப்பு பிரதிநிதிகளால் கேள்வி எழுப்பபட்டபோது, சிறிலங்கா அரச தரப்பினர் பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடினர்.

இந்தக் கேள்விகளுக்கு இந்த உப மாநாட்டை சூடுபிடிக்க வைத்ததோடு தொடர்சியாக பல மனித உரிமை அமைப்புக்களினாலும் வேறுபலராலும் முன்னிறுத்தப்பட்ட கேள்விகளுக்கு ஒருபதட்டத்துடன் பதில்களைக் கூறிவிட்டு சிறிலங்கா தரப்பினர் கலைந்து சென்றனர் என தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.