
மேற்படி இரு ஊடகவியலாளர்களும் தனிப்பட்ட காரணங்களுக்காக சில தனி நபர்களால் தாக்கப்பட்டதாகவும், அதை அவர்கள் ஐரோப்பாவில் தஞ்சம் கோருவதற்கு பயன்படுத்திக்கொண்டதாகவும் ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின்போது டக்ளஸ் தேவானந்தா கூறினார். அதாவது டக்ளஸை ஜெனிவா ஐ.நா மாநாட்டிற்கு மகிந்தர் அனுப்பிவைக்க, இவரோ அசேலம் சீக்கேஸ் குறித்து ஆராச்சி நடத்துகிறார் !
யாழ் பத்திரிகையொன்றில் பணியாற்றிய நபர் ஒருவர் பிரத்தியேக வகுப்புகளை நடத்தினார். அவர் தனது வகுப்பு வந்த பாடசாலை மாணவி ஒருவருடன் ஏற்படுத்திக்கொண்ட தொடர்பினால் அம்மாணவியின் சகோதரர் மேற்படி நிருபரை தாக்கினார். அந்நிருபர் இச்சம்பவத்தை ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறையாக காண்பித்தார் என டக்ளஸ் கூறியுள்ளார்.
மற்றொரு ஊடகவியலாளரை யாழ் மாநகர சபையிலுள்ள உள்ளூராட்சி அங்கத்தவர் ஒருவர் தனிப்பட்ட பகைமை காரணமாக தாக்கியதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியாளர்கள் இருவரும் இலங்கையில் தமக்கு ஆபத்து இருப்பதாக கூறி, சுவிட்ஸர்லாந்தில் தஞ்சம் பெற்றுள்ளனர். இது குறித்து நான் முறைப்பாடு செய்வேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இவர் குறிப்பிடும் இவ்விரு செய்தியாளர்களுமே டக்ளஸைப் பற்றி அதிகம் எழுதுவார்கள் போலும் ! டக்ளஸும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் போலும் !
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.