Monday, March 05, 2012

சவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண்

சவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் 95 வயதுப் பெண்ணொருவர் திடீரென உயிர் பிழைத்து எழுந்த அதிசய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சாங்ஸி மாகாணத்திலுள்ள பெயிலிய நகரைச் சேர்ந்த லி லியுபெங் என்ற மேற்படி பெண் தனிமையில் வாழ்ந்த நிலையில் தலையில் காயமடைந்து இரு வாரங்களாக சுகவீனமுற்று இருந்துள்ளார்.

இந் நிலையில் அவரது வீட்டுக்கு வந்த அயலவர் ஒருவர் அவர் படுக்கையில் அசைவின்றி இருப்பதைக் கண்டு அவரை எழுப்ப முயற்சித்துள்ளார்.

அவர் அசைவற்று தொடர்ந்து காணப்படவும் ஊரவர்களுக்கு இது தொடர்பில் அந்த உறவினர் அறிவித்தார்.

அவர் மூச்சின்றி விறைத்துக் காணப்படுவதை அவதானித்த அயலவர்கள் அவர் இறந்து விட்டதாகக் கருதி அவருக்கு இறுதிக் கிரியைகளை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

சீன பாரம்பரிய வழக்கப்படி அவரது வீடு திறந்து வைக்கப்பட்டு அவரது சடலம் சவப் பெட்டியில் உறவினர்கள் மற்றும் நண்பர்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதனையடுத்து 6 நாட்கள் கழித்து லி ஸியு பெங்கிற்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக சவப்பெட்டியை அயலவர்கள் எடுத்துச் சென்றபோது சவப்பெட்டி வெறுமையாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

லி ஸியுபெங்கின் சடலத்திற்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிய தேடுதல் நடத்திய அயலவர்களுக்கு அவர் சமையலறையில் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு மென்மேலும் அதிர்ச்சி.

நான் நீண்ட நேரமாக உறங்கிவிட்டேன். விழித்தெழுந்த போது எனக்கு மிகவும் பசியாக இருந்தது. அதனால் உண்பதற்கு எதையாவது சமைக்கத் தீர்மானித்தேன் எனத் தெரிவித்த லி ஸியுபெங், தான் சவப்பெட்டியின் மூடியை கைகளால் தள்ளித் திறந்து வந்ததாகக் கூறினார்.

6 நாட்களாக சடலத்தை அஞ்சலிக்காக வைக்கும் பாரம்பரியத்தாலேயே லி ஸியுபெங் சவப்பெட்டியிலிருந்து உயிர்த் தெழுவதற்கு சாத்தியமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.