Monday, March 05, 2012

பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு தஜிகிஸ்தான்!!

பேஷ்புக் சமூகவலையமைப்பு தஜிகிஸ்தான் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது.

தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமலி ரெக்மோன் குறித்து அவதூறான செய்தியை ரொய்ட்டர் உள்ளிட்ட சில இணையத்தளங்கள் வெளியிட்டன.

அதோடு மட்டுமல்லாது, அந்நிறுவனங்கள் பேஸ்புக்கிலும் அச்செய்தியை பதிவு செய்தன. இது, தஜிகிஸ்தான் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, அந்நாட்டின் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டுத் துறை, பேஸ்புக் மற்றும் 2 ரஷ்ய இணையத்தளங்களின் செயல்பாட்டிற்கு தடை விதித்துள்ளது.

ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய குடியரசு நாடுகளுக்குப் பிறகு, இணையத்தளத்திற்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை தஜிகிஸ்தான் அமுல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.