Tuesday, March 20, 2012

40 ஆயிரம் பொது மக்கள் படையினரால் கொல்லப்பட்டனர் என்பதை இலங்கை அரசாங்கம் மூடி மறைக்க முடியாது: ஈலின் டொனஹோ

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசபடையினருக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனழதவுரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு வலியுறுத்த தமக்கு பிரதான உதவியாளர் ஒருவர் கிடைத்துள்ளதாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதற்கான பிரேரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ள ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்காவின் மனித உரிமை கவுன்ஸில் ஜெனீவா தூதுவர் ஈலின் டொனஹோ தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஒரு குறியீட்டு வாக்காக இதனை யோசிக்க கூடாது, என இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் என்ற கருத்துக்கு பதிலளித்துள்ள அமெரிக்காவின் ஜெனீவா தூதுவர் தெரிவித்துள்ளார். மாறாக இலங்கை அரசாங்கம் நம்பகரமான நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்கும் முயற்சியாக இந்தியாவின் முடிவை நோக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐநா மனித உரிமை கவுக்ஸிலில் பிரேரணை வெற்றிபெறுமாக இருந்தால் சட்டபூர்வமான எந்தவொரு கொள்கைகளையும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வால் பிணைக்க முடியாது என ஈலின் டொனஹோ சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐநா நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டதுபோல் இறுதிக் கட்ட யுத்தத்தில் 40 ஆயிரம் பொது மக்கள் படையினரால் கொல்லப்பட்டனர் என்பதை இலங்கை அரசாங்கம் மூடி மறைக்க முடியாது என அவர் கூறியுள்ளார். மூன்று வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பிரேரணை அமையும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.