Tuesday, February 07, 2012

புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் திறமையை நயந்த அமெரிக்கா!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கத்தின் திறமையை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தினர் மிகவும் நயந்து இருக்கின்றனர்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான இராஜதந்திரி உட்பட வெளிநாட்டு இராஜதந்திரிகள் குழு ஒன்று 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் ஒன்று மேற்கொண்டு இருந்தது.

இக்குழுவினருக்கு அரசியல் தலைமைப் பணிமனையில் வைத்து இரு மணித்தியாலங்கள் வரை புலிகளால் விளக்கம் கொடுக்கப்பட்டது.

விளக்கத்தை பாலசிங்கம் ஆரம்பித்து வைத்தார். 40 நிமிடங்கள் தொடர்ந்து பேசி இருக்கின்றார்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் இச்சந்திப்பு குறித்து அவ்வருடம் மார் 15 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு இராஜதந்திர மடல் ஒன்று அனுப்ப்பபட்டது.

இதில் பாலசிங்கம் குறித்த விபரங்களும் சேர்க்கப்பட்டு உள்ளது.

-பாலசிங்கம் வசப்படுத்தக் கூடிய வகையில் பேசுபவர். சொல் வலிமை மிக்கவர். தெளிவாக பேசுபவர். துறை சார்ந்த நிபுணர். முழுமையான அளவில் ஆங்கிலம் தெரிந்தவர். இவரது விளக்கம் மிகவும் சிறப்பாக தயாரிக்கப்பட்டு இருந்தது. இவரது விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் அறிவார்ந்ததாகவும் இருந்தது.-

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.